அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரிட்டனில் முதல்வர்: 3 ஒப்பந்தம் கையெழுத்து

Updated : ஆக 30, 2019 | Added : ஆக 29, 2019 | கருத்துகள் (20)
Advertisement

சென்னை:தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பிரிட்டன், அமெரிக்கா நாடுகளுக்கும், துபாய் நகரத்திற்கும், முதல்வர், இ.பி.எஸ்., சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

ந்நிய முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலாவதாக லண்டன் சென்றார். அங்கு, அவருக்க லண்டன்வாழ் தமிழர்கள் 
உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்ட குழுவினரும் சென்றுள்ளனர்.சென்னையில் இருந்து, நேற்று முன்தினம் புறப்பட்ட அவர், மாலை, லண்டன் சென்றடைந்தார். முதல்வர் முன்னிலையில் நேற்று, டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களின், பணி மேம்பாடு களை கண்டறிந்து, அதை தமிழகத்தில் செயல்படுத்த, தமிழக அரசுக்கும், சர்வதேசதிறன் மேம்பாட்டு கழகத்திற்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம்கையெழுத்தானது.அதன் பின், லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு சென்றார்.


அரசின், 108 ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்தும் வகையில், தகவல்களை கேட்டறிந்தார். லண்டனின் பழமை வாய்ந்த, 'லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசன்' நிறுவனத்துடன் இணைந்து செயல்பட, அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, அந்த நிறுவனத் துடன், டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துவதற் கான நடவடிக்கைகள், அந்த நோய்களை கையாளும் வழிமுறைகள் தொடர்பாக, முதல்வர் முன்னிலையில், நேற்று அறிக்கை கையெழுத்தானது.


லண்டன் கிங்ஸ் மருத்துவ மனையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தில் கிங்ஸ் மருத்துவ மனை கிளைகளை நிறுவ, தமிழக அரசுக்கும், கிங்ஸ் மருத்துவ மனைக்கும் இடையே, முதல்வர் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்நிகழ்ச்சியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர், துறை செயலர், பீலா ராஜேஷ், முதல்வரின் செயலர்கள், சாய்குமார், விஜயகுமார், செந்தில்குமார் உடனிருந்தனர்.
Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Delhi,இந்தியா
30-ஆக-201916:21:00 IST Report Abuse
Rajesh நம்ம குட்கா புகழ் அமைச்சர் , நல்ல தரமான குட்கா கம்பெனிகளை தமிழகத்துக்கு அழைத்துவர சென்றுள்ளார்
Rate this:
Share this comment
Cancel
30-ஆக-201914:32:15 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அறிவாலயம் பக்கம் ஏதோ கருகிற வாடை அடிக்கிறதாம் , புகை கிளம்புகிறதாம் , தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
Rate this:
Share this comment
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01-செப்-201903:03:08 IST Report Abuse
skv srinivasankrishnaveniபுளிக்காய்ச்சல் கொதிச்சு சுருங்குதாம் அதான் தீசல் வாடை...
Rate this:
Share this comment
Cancel
parani - yishun,சிங்கப்பூர்
30-ஆக-201912:23:54 IST Report Abuse
parani அவர் சென்றது தொழில் வளர்ச்சிக்கு. எற்காக மருத்துவமனை கிளை. நடைமுறை அரசு மருத்துவமனை புத்தாக்கம் செய்யலாம். கிங்ஸ் மருத்துவமனை இலவச சேவையுடன் நடக்குமா? இல்லை ஹவாலா செய்ய உதவுமா? இல்லை அரசிடம் திட்டம் எதுவும் இல்லையா?
Rate this:
Share this comment
Gopi - Chennai,இந்தியா
30-ஆக-201916:01:35 IST Report Abuse
Gopiபாசறை சிந்தனையின் பின்னோக்கிய மீட்சி உங்கள் கருத்து. சென்னை இந்தியாவின் மருத்துவ தலைநகரம். ஜனாதிபதியும் இங்கு வந்து கண் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார். உலகிலிருந்து பலநாட்டு மக்கள் மெடிக்கல் டூரிசம் என்ற பெயரில் இங்கு வந்து சிகிச்சை பெற்று கொள்கின்றனர். இந்தியாவிலேயே 1000 மக்களுக்கு உள்ள மருத்துவர் விகிதாச்சாரம் தமிழகத்தில் தான் அதிகம். புரிந்துணர்வு ஒப்பந்தம் ஹவாலா செய்ய இல்லை நாட்டு மக்களுக்கு தொழிநுட்ப பயிற்சியும் உயர் சிகிச்சை அழிப்பது மட்டுமே. தவறான போதனையை விட்டுவிட்டு கருத்து எழுதவும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X