பாக்., பிரதமர் அலுவலகத்தில் மின் இணைப்பு துண்டிப்பு?

Added : ஆக 30, 2019 | கருத்துகள் (28)
Share
Advertisement
 பிரதமர் அலுவலகத்தில் மின்சாரம் கட்

இஸ்லாபாத் :பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அலுவலகம் மற்றும் அவர் வசிக்கும் பங்களாவிற்கு, 40 லட்ச ரூபாய்க்கு மேல், மின் கட்டணம் பாக்கி உள்ளது. இதையடுத்து, மின் இணைப்பை துண்டிக்கப் போவதாக, மின் வினியோக நிறுவனம் எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள, இஸ்லாமாபாத் மின் வினியோக நிறுவனம், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


latest tamil news


பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம், பங்களா பல மாதங்களாக மின் கட்டணம் பாக்கி உள்ளது. மின் கட்டணமாக, 41 லட்ச ரூபாயை, பிரதமர் அலுவலகம் செலுத்த வேண்டும்.
இது தொடர்பாக, பிரதமர் அலுவலகத்துக்கு, பலமுறை, 'நோட்டீஸ்' அனுப்பினோம். ஆனால், கட்டணத்தை செலுத்துவது பற்றி, பிரதமர் அலுவலகம், எந்த பதிலும் அளிக்கவில்லை.
இரண்டு மாதம் தொடர்ந்து, மின் கட்டணத்தை செலுத்தாவிட்டால், மின் இணைப்பை துண்டிக்க, நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.
மின் கட்டண பாக்கியால், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்துக்கு, பணம் கொடுக்க முடியவில்லை.அதனால், மின் கட்டணத்தை உடன் செலுத்தாவிட்டால், பிரதமர் அலுவலகத்தில், மின் இணைப்பு துண்டிக்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக, தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், கடந்த ஆண்டு, ஆகஸ்டில் பதவியேற்றார். இப்போது, பாகிஸ்தான், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. பிரதம ருக்கு வழங்கப்பட்ட ஆடம்பர சலுகைகளை, இம்ரான் கான் தவிர்த்து வருகிறார். இந்நிலையில், அவரது அலுவலகம், பல லட்சம் ரூபாய் மின் கட்டணத்தை பாக்கி வைத்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
30-ஆக-201912:43:49 IST Report Abuse
padma rajan ,இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு மின்சாரம் ஒரு காலத்தில் போய்க்கொண்டு இருந்தது இப்போதும் அப்படி இருந்தால் அதை உடனே ரத்து செய்ய வேண்டும்
Rate this:
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
30-ஆக-201911:48:45 IST Report Abuse
vasanthan சுடலை தலைமையில் அனைத்து எதிர் கட்சிகளும் சென்னையில் தமிழக மின்சார வாரியத்தின் முன்பு ஆர்பாட்டம் நடத்தி மின்சார வாரியத்தின் சர்வாதிகாரத்துக்கும் , அடக்குமுறைக்கும் எதிராக உண்டியல் குலுக்கி மற்றும் ...கூட்டத்துடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடடத்தப்படும். ஓசியில் பக்கத்தில் இருக்கும் பிரயாணிக்கடையில் ஓசி பிரியாணியும் குவாட்டரும் தரப்படும் உண்மையான டுமிழர்கள் கலந்து கொள்ளவும்.
Rate this:
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
30-ஆக-201911:32:18 IST Report Abuse
Nakkal Nadhamuni இவருடைய எல்லா இணைப்புகளையும் துண்டிக்கணும்...
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
30-ஆக-201913:50:29 IST Report Abuse
Nallavan Nallavanஇரண்டு பாலிவுட் நடிகைகள் இவனை விரும்பியிருக்கிறார்கள் ............. அதில் ஒன்று ஒருதலை ...............
Rate this:
Sundar - ,
30-ஆக-201915:20:54 IST Report Abuse
Sundarஏற்கெனவே கால்வாசி துண்டிச்சிருக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X