சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் என்.ஐ.ஏ., சோதனை ஐந்து பேரிடம் தீவிர விசாரணை

Updated : ஆக 30, 2019 | Added : ஆக 30, 2019 | கருத்துகள் (5)
Advertisement
கோவை,என்.ஐ.ஏ.,சோதனை,ஐந்து,பேரிடம்,தீவிர, விசாரணை

கோவை:கோவையில், பயங்கரவாதிகள் ஊடுருவல் பரபரப்பு சற்று தணிந்த நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதியின், 'வீடியோ'வை வெளியிட்டதாக, ஐந்து பேரின் வீடுகளில், என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இலங்கையில், ஏப்., 21ம் தேதி, ஈஸ்டர் பண்டிகையின்போது நடந்த தொடர் குண்டுவெடிப்பில், 250க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர்.இதில் தொடர்புடைய பயங்கரவாதி, ஜக்ரன்ஹசீமுடன் தொடர்பில் இருந்ததாக, கோவையைச் சேர்ந்த, ஆறு பேரின் வீடுகளில், மத்திய புலனாய்வு அமைப்பு எனப்படும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி, பல ஆவணங்களை கைப்பற்றினர்.


ஊடுருவல்



இதன் தொடர்ச்சியாக, முகமது அசாருதீன், ஷேக் இதயதுல்லா ஆகியோர் கைது செய்யப் பட்டனர். மற்ற நான்கு பேர், விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டனர்.இந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, மேலும், மூன்று பேரை, மாநகர போலீசார், 'உபா' என்ற, சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தில், கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இச்சூழலில், கடந்த வாரம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த, ஆறு பயங்கரவாதிகள், வினாயகர் சதுர்த்தி விழாவில், அசம்பாவிதம் ஏற்படுத்த, கோவை வழியே ஊடுருவி உள்ளதாக, தகவல் வெளியானது.இதையடுத்து, கோவைக்கு, 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டது. நகர் முழுவதும், தீவிர சோதனை மற்றும் கமாண்டோ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.தற்போது இயல்பு நிலை, மெல்ல திரும்பி, போலீஸ் பாதுகாப்பு படிபடியாக குறைக்கப்பட்டு வருகிறது.


கண்காணிப்பு



கேரள மாநிலம், கொச்சி மற்றும் கோவையிலுள்ள, என்.ஐ.ஏ., அதிகாரிகள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு தொடர்பாக, சமூக வலைதளங்களில், யாராவது தகவல் பரப்பி வருகின்றனரா என,
தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அப்போது, கோவையைச் சேர்ந்த, ஐந்து பேர், இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதியின் வீடியோவை, சமூகவலைதளங்களில் பரப்பியது, தெரிய வந்தது.

இதையடுத்து, கோவை உக்கடம், பிலால் நகர், கோட்டைமேடு பகுதிகளைச் சேர்ந்த சனாபர் அலி, 24, உமர் பாரூக், 32, சமேசா முபின், 27, முகமது யாசீர், 26, சதாம் உசேன், 27 ஆகியோரின் வீடுகளில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, தனித் தனி குழுக்களாக சென்று, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.இந்த இடங்களில், மாநகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனை, காலை, 10:00 மணிக்கு நிறைவடைந்தது.


கொச்சியில் இன்று ஆஜர்



ஐந்து பேரிடம் நடத்திய சோதனையில், ஒரு மடிகணினி, ஐந்து மொபைல்போன்கள், 'சிம் கார்டு, மெமரி கார்டு, சிடி' உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து, கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள, என்.ஐ.ஏ., அலுவலகத்தில், ஐந்து பேரிடமும், அதிகாரிகள் விசாரித்து
வருகின்றனர். 'வீடியோ' வெளியீடு தொடர்பாக, விசாரணை நடத்த, ஐந்து பேரும், கொச்சி அலுவலகத்தில், இன்று ஆஜராக வேண்டும் என, என்.ஐ.ஏ., அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


மீண்டும் பரபரப்பு



மூன்று மாதங்களுக்கு முன், இதே ஐந்து பேரின் வீடுகளில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, எவ்வித ஆவணமும் கைப்பற்றப்படாததால், சோதனை குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.தற்போது, மீண்டும் இந்த, ஐந்து பேரின் வீடுகளில் சோதனை நடத்திய அதிகாரிகள், 'டிஜிட்டல்' ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அவை, ஆய்வக சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளன.

பயங்கரவாதிகள் ஊடுருவல் மற்றும் பாதுகாப்பு சோதனைகளால், கோவை, ஒரு வாரமாக பரபரப்பாக இருந்தது. மூன்று நாட்களாக, இயல்பு நிலை திரும்பிய நிலையில், தற்போது என்.ஐ.ஏ., சோதனையால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
30-ஆக-201916:29:13 IST Report Abuse
Endrum Indian இந்த தேடல், விசாரணை எல்லாம் அனாவசியாமன நேரம் கடத்தும் நிகழ்வுகள் இதனால் ஒரு பைசா ஒரு பைசா பிரயோஜனமும் இல்லவே இல்லை. சந்தேகமா கொண்டு போய் 24 மணி நேரம் மட்டும் விசாரணை பிறகு என்கவுன்ட்டர், மீடியாவில் இதை விளம்பரம் செய்ய வேண்டும். 10 என்கவுன்ட்டர் தான் நடத்த முடியும், உடனே உடனுக்குடன் இந்த தீவிரவாதிகளுக்கு தங்க திங்க செல்ல ஆயுத உதவி எல்லாம் உடனே நிறுத்தப்படும், இந்த ராட்சத அலை அடங்கும். வெறுமனே விசாரணை, ஆய்வு நடந்தால் இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Rajan - Alloliya ,இந்தியா
30-ஆக-201910:31:06 IST Report Abuse
Rajan போலீஸ்கார், arivalayathulla தேடினால் நெறய கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
30-ஆக-201908:32:50 IST Report Abuse
தமிழ் மைந்தன் சிறுபான்மை மக்களின் மீது தாக்குதல் நடத்துவதா? - தமிழக கோமாளிகள் தங்கம் தலைமை கோமாளி கண்டனம்..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X