மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு வைகை அணை திறப்பு

Added : ஆக 30, 2019 | |
Advertisement
ஆண்டிபட்டி : மதுரை திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நேற்று மாலை தண்ணீர் திறந்து விடப்பட்டது.தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த மழை பெரியாறு அணை நீர் வரத்தால் வைகை அணை நீர் மட்டம் உயர்ந்து நேற்று மாலை 54.03 அடியாக இருந்தது.(மொத்த உயரம் 71 அடி). நேற்றுமாலை வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அமைச்சர்கள் செல்லுார் ராஜூ

ஆண்டிபட்டி : மதுரை திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நேற்று மாலை தண்ணீர் திறந்து விடப்பட்டது.



தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த மழை பெரியாறு அணை நீர் வரத்தால் வைகை அணை நீர் மட்டம் உயர்ந்து நேற்று மாலை 54.03 அடியாக இருந்தது.(மொத்த உயரம் 71 அடி). நேற்றுமாலை வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அமைச்சர்கள் செல்லுார் ராஜூ உதயகுமார் கலெக்டர்கள் பல்லவி பல்தேவ்(தேனி) ராஜசேகர் (மதுரை) பங்கேற்றனர். துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணை மதகுகளை இயக்கி திறந்து வைத்தார்.



நீர் இருப்பை பொறுத்து 120 நாட்களுக்கு வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும் அடுத்து வரும் 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.



நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி அணைக்கான நீர் வரத்து 1394 கன அடி நீர் இருப்பு 2540 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. மதுரைஆண்டிபட்டி -- சேடபட்டி குடிநீருக்காக வினாடிக்கு 60 கன அடி வெளியேறுகிறது.



பெரியாறு அணை திறப்பு :


முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக நெல் சாகுபடிக்காக வினாடிக்கு 300 கன அடி நீரை துணை முதல்வர் பன்னீர்செல்வம் தேக்கடி ஷட்டரில் உள்ள மதகை இயக்கி திறந்து வைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X