பாபர் கட்டியது மசூதியே இல்லை; உச்சநீதிமன்ற வழக்கில் வாதம்

Updated : ஆக 30, 2019 | Added : ஆக 30, 2019 | கருத்துகள் (23)
Advertisement

புதுடில்லி: 'உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில், பாபரால் கட்டப்பட்டதாக கூறப்படும் கட்டடம் மசூதியே இல்லை. அது மசூதியாகவும் அங்கீகரிக்கப்படவில்லை' என, ஹிந்து அமைப்பு சார்பில் வாதிடப்பட்டது.


அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணையின் 15வது நாளான நேற்று, அகில பாரதிய ஸ்ரீ ராம் ஜன்மபூரி புனருதார சமிதி என்ற, ஹிந்து அமைப்பின் சார்பில், மூத்த வழக்கறிஞர், பி.என். மிஸ்ரா வாதிட்டதாவது: இஸ்லாமிய சட்டத்தின்படி, ஒரு மசூதி என்பதற்கு சில விதிமுறைகள், அம்சங்கள் உள்ளன. அயோத்தியில், முகலாய மன்னர் பாபரால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் கட்டடம் மசூதியே இல்லை. அந்த இடம் பாபருக்கு சொந்தமானதும் அல்ல.

முஸ்லிம்களின் சொத்துக்களை, 'வக்ப்' என்ற அமைப்பு நிர்வகிக்கும். ஆனால், இந்தக் கட்டடம், எந்த வக்ப் அமைப்பின் கீழும் இருந்ததில்லை. மேலும், இடிக்கப்பட்ட கட்டடம், மசூதியின் வடிவிலும் இல்லை. இஸ்லாமிய சட்டங்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன. இஸ்லாமிய சட்டத்தின்படி, மற்றொரு மதத்தினருக்கு சொந்தமான நிலத்தில், மசூதியை கட்ட முடியாது. முகலாய அரசர் ஷாஜகான் வெளியிட்ட ஒரு அரசு ஆணையில், ஹிந்து கோவிலுக்கு சொந்தமான நிலத்தை திருப்பி தரும்படி கூறியுள்ளார். இந்த நிலம் ஹிந்துக்களுக்கே சொந்தமானது. இவ்வாறு, அவர் வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து, அமர்வு கூறியதாவது: சர்ச்சைக்குரிய இடத்தில், மசூதி போன்ற ஒரு கட்டடம் இருந்தது உண்மைதான். தற்போது, 500 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அந்தக் கட்டடத்தை, பாபர் மசூதியாக அறிவித்தாரா என்பது குறித்து விவாதிப்பது என்பது சற்று சிரமமான விஷயம்தான். அந்தக் கட்டடத்தை பாபர் தான் கட்டினாரா, மசூதியாகத் தான் கட்டினாரா, இஸ்லாமிய சட்டத்தை அவர் மீறினாரா என்பது குறித்து விவாதிப்பது தேவையில்லாத விஷயம் என்று கருதுகிறோம். இவ்வாறு, அமர்வு கூறியுள்ளது. விசாரணை இன்றும் தொடர்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01-செப்-201902:31:46 IST Report Abuse
skv srinivasankrishnaveni அந்தஇடத்துலே பெரிய பள்ளிக்கூடம் அல்லது ஹாஸ்பிடல் காட்டுனிங்களே புண்ணியமாப்போவும் வேலை யில்லா டாக்டருங்கள் வேலை செய்யலாம் ஹாஸ்பிடல் காட்டினா , பள்ளிக்கூடம் என்றால் பல பிள்ளைகள் படிக்கலாமே
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01-செப்-201902:30:15 IST Report Abuse
skv srinivasankrishnaveni நரசிம்மராவ் காலத்திலே இடிக்கப்பட்டது அப்போது கான் கிரேஸ் ஆட்ச்சியேதானே இருந்துது இதுலே என்னய்யா போராட்டம் பண்ணிண்டு படுத்துறீங்க
Rate this:
Share this comment
Cancel
Raja -  ( Posted via: Dinamalar Android App )
30-ஆக-201919:31:13 IST Report Abuse
Raja Who is hindu?. As per Hindu scripture no statue worship allowed?. In my points no Hindu in india
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
31-ஆக-201919:35:09 IST Report Abuse
Sathya Dhara ஐயோ பாவம்....புத்தி ஸ்வாதீனம் இழந்த நிலையில் கருத்து பதிவு செய்தல் தமாஷாக உள்ளது. வாங்கின காசுக்கு கூவுற மாதிரி உள்ளது. கம்முனு கடங்க......நீ யாரோட எடுபிடியாக இருந்தாலும் பச்சை அல்லது பாவாடை ...இனி உங்களின் தில்லு முள்ளு வசனங்கள் மக்களை நிரந்தரமாக முட்டாளாக்க முடியாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X