லக்னோ: முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் உ.பி., மாநில பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுவாமி சின்மயானந்த் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்த சட்டக் கல்லூரி மாணவி, கடந்த ஆக. 23ல் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். அதில், சின்மயானந்த், பல பெண்களை சீண்டியதாகவும், பல ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறினார். வீடியோ வெளியான அடுத்த நாளில் இருந்து அந்த மாணவி மாயமானார்.
சின்மயானந்த் வக்கீலான ஓம் சிங், இந்த புகாரை மறுத்ததுடன், 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் மீது பாலியல் புகார் தெரிவித்த அடுத்த நாளில் மாணவி மாயமானதால் இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் அம்மாணவி தன் நண்பருடன் ராஜஸ்தானில் இருப்பதாக அங்குள்ள ஷஜஹான்பூர் போலீசார் அளித்த தகவலின் படி, போலீசார் விரைந்தனர்.
இந்நிலையில், அந்த மாணவியை சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உ.பி., அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த மாணவியுடன், மூடிய அறைக்கள் பேச விரும்புவதாக, நீதிபதிகள் பானுமதி மற்றும் போபண்ணா கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE