சிதம்பரம் சிபிஐ காவல், செப்.,2 வரை நீட்டிப்பு

Updated : ஆக 30, 2019 | Added : ஆக 30, 2019 | கருத்துகள் (36) | |
Advertisement
புதுடில்லி: ஐஎன்எக்ஸ் மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் திங்கட்கிழமை (செப்., 2) வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஐ.என்.எக்ஸ்., மோசடி வழக்கில், முன்ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ
சிதம்பரம், சிபிஐ, காவல் நீட்டிப்பு, ஐ.என்.எக்ஸ்., மோசடி

புதுடில்லி: ஐஎன்எக்ஸ் மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் திங்கட்கிழமை (செப்., 2) வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ்., மோசடி வழக்கில், முன்ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். தொடர்ந்து, அவரின் காவல் இன்று வரை நீட்டிக்கப்பட்டது. இன்று(ஆக.,30) சிதம்பரத்தை கோர்ட்டில், அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, சிபிஐ தரப்பில், மேலும் பல கேள்விகள் கேட்க வேண்டும். இதனால், சிதம்பரத்தின் காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


latest tamil news




சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிஐ காவலை எதிர்த்து தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில், செப்., 2 வரை விசாரணைக்கு வருகிறது. அதுவரை, சிபிஐ காவலில் இருக்க தயார். இதுவரை 400 கேள்விகளுக்கு பதிலளித்தேன். அதில், எனக்கு எதிராக எந்த ஆதாரமும், ஆவணமும் இல்லை எனக்கூறினார்.
இதனையடுத்து, சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் செப்., 2( திங்கட்கிழமை) வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
31-ஆக-201911:17:44 IST Report Abuse
konanki சட்டத்திலிருந்து தப்பி விட்டாலும் இந்த திருட்டு குடும்பத்திற்கு தர்மத்தின் தண்டனை கண்டிப்பா உண்டு
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
31-ஆக-201906:54:14 IST Report Abuse
Lion Drsekar இது சிதம்பர இரகசியம், முடிவு ஒன்றும் இல்லாமல் போகப்போகிறது, பொது மக்களுக்களை விசாரிப்பது போல் விசாரிக்க முடியாத நிலை, அவரும் வாய் திறக்கவில்லை, முடிவு , டிவி சீரியல்தான். வந்தே மாதரம்
Rate this:
Cancel
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
31-ஆக-201906:23:25 IST Report Abuse
padma rajan WEAK CBI BECAME FRIENDS WITH PC. CASE WILL BE FIZZLED OUT.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X