புதுடில்லி: நாட்டில் மொத்தம் உள்ள 22 பொதுத்துறை வங்கிகளை, இணைப்பின் மூலம் 12 ஆக குறைக்க உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன் மூலம், வங்கித்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக 2வது முறையாக நிருபர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியில் கூறியதாவது:
வாராக்கடன் குறைந்தது
* வங்கித்துறை சீர்திருத்தங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
*கடன் மேலாண்மை எளிமைப்படுத்தப்படும்.
*பொதுத்துறை வங்கிகள் 59 நிமிடங்களில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
*வங்கிகளின் வாராக்கடன் கணிசமாக குறைந்துள்ளது.
*கடன் வசூலில் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
*கடந்த நிதியாண்டில், அரசின் நடவடிக்கையால் ரூ.1.21 லட்சம் கோடி வாராக்கடன் வசூலாகியுள்ளது.
*வங்கிகளின் வாராக்கடன் ரூ.8.65 லட்சம் கோடியில் இருந்து ரூ. 7.9லட்சம் கோடியாக குறைந்துள்ளது
*கடன் வசூலிப்பதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை வங்கிகள் எட்டியுள்ளன.* ரூ.250 கோடிக்கு மேலான கடன்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்படும்

தலையிடவில்லை
*14 பொதுத்துறை வங்கிகள் லாபத்தை ஈட்டியுள்ளன.
*சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகள் அதிகரித்துள்ளது.
*நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள்.
*சர்வதேச அளவில் கவரும் வகையில், பெரிய வங்கிகளே அரசின் நோக்கம்
*வங்கிகளின் செயல்பாட்டில் அரசு தலையிடவில்லை.
இணைக்கப்படும் வங்கிகள்
*பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்டல் வங்கி, யுனைடட் வங்கி இணைக்கப்படும்.இதன் மூலம் நாட்டில் 2வது பொதுத்துறை வங்கியாக செயல்படும்.
*கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி இணைக்கப்படும்
*யூனியன் வங்கி , ஆந்திரா வங்கி, கார்பரேசன் வங்கி இணைக்கப்படும்
*இந்தியன் - அலகாபாத் வங்கிகள் இணைக்கப்படும்
*10 பொதுத்துறை வங்கிகள் 4 பெரிய வங்கிகளாக இணைந்து செயல்படும்
*பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை 27 ல் இருந்து 12 ஆக குறைக்கப்படுகிறது.
*7 வங்கிகளில் தான் 82 சதவீத வர்த்தக பணிகள் நடந்து வருகின்றன.
*வங்கிகள் இணைப்பால் ஊழியர்களின் சம்பளம் ஒருபோதும் குறைக்கப்படாது, பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள்.

*வங்கி முடிவுகளை கண்காணித்து நெறிப்படுத்த வெளியில் இருந்து அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
*வங்கிகளின் சேவை சிறப்படைய நடவடிக்கை எடுக்கப்படும்.
*வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் அளிப்பதுடன் சேவை விரிவடைய நடவடிக்கை எடுக்கப்படும்.
*வங்கி நிர்வாக குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும்
*நிபுணத்துவம் வாய்ந்தவர்களை வங்கியின் உயர் பதவியில் நியமிக்க நடவடிக்கை
*தொழில்நுட்பத்துடன் வங்கிகள் செயல்படும் வகையில் கவனம் செலுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE