பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்தது: முதல் காலாண்டில் 7 ஆண்டுகளில் இல்லாத சரிவு

Updated : செப் 01, 2019 | Added : ஆக 30, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த, 7 ஆண்டுகளில் இல்லாத வகையில், 5 சதவீதமாக சரிந்துள்ளது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான, முதல் காலாண்டில், நாட்டின் வளர்ச்சி, 7 ஆண்டுகளில் இல்லாத வகையில், 5 சதவீதமாக சரிந்துள்ளது.இது குறித்து, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:தயாரிப்பு துறையில் ஏற்பட்ட
பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதம், குறைந்தது,முதல் காலாண்டு, சரிவு

புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த, 7 ஆண்டுகளில் இல்லாத வகையில், 5 சதவீதமாக சரிந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான, முதல் காலாண்டில், நாட்டின் வளர்ச்சி, 7 ஆண்டுகளில் இல்லாத வகையில், 5 சதவீதமாக சரிந்துள்ளது.இது குறித்து, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
தயாரிப்பு துறையில் ஏற்பட்ட கடுமையான சரிவு, மற்றும் விவசாய உற்பத்தியில் இருந்த மந்தநிலை ஆகியவற்றின் காரணமாக, பொருளாதார வளர்ச்சி, இத்தகைய சரிவை சந்தித்துள்ளது.


தயாரிப்பு துறைஇதற்கு முன், 2012 -- 13ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 4.9 சதவீதமாக சரிந்திருந்தது.கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், வளர்ச்சியானது, 8 சதவீதமாக இருந்தது.தயாரிப்பு துறையில், மொத்த மதிப்பு கூட்டல் வளர்ச்சி, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 12.1 சதவீதமாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 0.6 சதவீதமாக குறைந்துள்ளது.

இதேபோல், பண்ணைகள் துறையில், மொத்த மதிப்பு கூட்டல் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 2 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், 5.1 சதவீதமாக அதிகரித்திருந்தது.கட்டுமான துறையை பொறுத்தவரை, கணக்கீட்டு காலத்தில், வளர்ச்சி, 5.7 சதவீதமாக உள்ளது. இதுவே, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 9.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், சுரங்க துறை மதிப்பீட்டு காலத்தில், வளர்ச்சி பெற்றுள்ளது. சுரங்க துறையை பொறுத்தவரை, 2.7 சதவீதமாக மொத்த மதிப்பு கூட்டல் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 0.4 சதவீதமாக குறைந்து இருந்தது.


ரிசர்வ் வங்கிரிசர்வ் வங்கி, கடந்த ஜூன் மாத நிதிக் கொள்கை கூட்டத்துக்கு முன்பாக, நடப்பு நிதியாண்டுக்கான, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை வெளியிட்டது. அதில், வளர்ச்சியை, 7 சதவீதமாக கணித்திருந்ததிலிருந்து, 6.9 சதவீதமாக குறைத்து, அறிவித்தது.மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், வளர்ச்சி விகிதம், 5.8 முதல், 6.6 சதவீதமாக இருக்கும் என்றும், இரண்டாவது அரையாண்டில் வளர்ச்சியானது, 7.3 முதல் 7.5 சதவீதமாக இருக்கும் என்றும் அறிவித்தது.

மேலும், ஒட்டுமொத்த தேவையை அதிகரிப்பதன் மூலம், வளர்ச்சியை சரிசெய்ய வேண்டியதன் அவசியத்தையும், ரிசர்வ் வங்கி அடிக்கோடிட்டு காண்பித்தது.சீனாவின், பொருளாதார வளர்ச்சி, நடப்பு ஆண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், 6.2 சதவீதமாக குறைந்தது. இது, 27 ஆண்டுகளில் இல்லாத குறைவான அளவாகும்.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
31-ஆக-201922:29:36 IST Report Abuse
Sundar The Finance ministers in BJP government in the past and present are not like Mr.Monmohan singh who is veteran. Nirmala seetharaman is not competent in this sensitive field and she is being victimized as the result of the failure by Mr.Jetly beyond redemption. Mr.Subramanian Swamy is fittest person at present. He will stop at-least the growth sliding further. He will also handle the misappropriation of Rs. 72000 crores in banking officials.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
31-ஆக-201917:56:21 IST Report Abuse
Endrum Indian என்னமோ 120% இருந்தது 5% ஆனமாதிரி இது என்ன செய்தி 7% 6.2 ஆனது இப்போ 5% ஆகியிருக்கிறது அடுத்த இரண்டு ஆண்டுகளில் அது 4.2%, 4.4% ஆகி பிறகு 7% ஆகும் கவலையே தேவையில்லை.
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
02-செப்-201921:50:18 IST Report Abuse
Amal Anandanமுத்துகுடுக்கறதே பொழப்பு....
Rate this:
Cancel
INDIAN - Mamallpuram ,இந்தியா
31-ஆக-201916:28:23 IST Report Abuse
INDIAN சுவிஸ் வங்கியில் இருந்து 100 நாளில் கருப்பு பணத்தை மீட்போம் என்று முழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று RBI இல் இருந்த நமது சேமிப்பு பணத்திலும் கை வைத்து விட்டார்கள் கேட்டால் உலக பொருளாதாரமே சரியில்லை என கதை அளக்கிறார்கள் வண்டி ஓட்டத்தெரியாதவன் ரோடு கோணையா இருக்குனு சொன்னானாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X