கட்டாய மதமாற்றம் : பாக்.,ல் சீக்கிய பெண் மீட்பு

Updated : ஆக 31, 2019 | Added : ஆக 31, 2019 | கருத்துகள் (28)
Advertisement

லாகூர் : பாக்.,ல் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்து இஸ்லாமிய இளைஞருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட சீக்கிய பெண் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.





பாக்.,ன் பஞ்சாப்பில் 19 வயது சீக்கிய இளம்பெண் கடத்தப்பட்டு, கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பின்னர் இஸ்லாமிய இளைஞர் ஒருவருக்கு அப்பெண் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்டு, மதமாற்றம் செய்யப்பட்ட பெண்ணை மீட்டுத் தரும்படி அப்பெண்ணின் குடும்பத்தினர் பிரதமர் இம்ரான் கானுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால், அப்பெண் கடத்தப்படவில்லை எனவும், சுய விருப்பத்தின் பேரிலேயே மதம் மாறி, அந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதாகவும், இளைஞரின் குடும்பத்தினர் வெளியிட்ட வீடியோவில் கூறப்பட்டிருந்தது.




பாக்.,ல் சீக்கிய பெண் கடத்தப்பட்டு, மதமாற்றம் செய்யப்பட்டதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்தியாவில் உள்ள சீக்கிய அமைப்புக்கள் பலவும் பஞ்சாப் (பாகிஸ்தான்) முதல்வர் சர்தார் உஸ்மான் புஷ்தருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்திய வெளியுறவுத்துறை சார்பிலும் பாக்.,வெளியுறவுத்துறையிடம், அப்பெண்ணை மீட்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, விசாரணை நடத்த சர்தார் உஸ்மான் உத்தரவிட்டார்.




விசாரணையின் முடிவில், கடத்தப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக லாகூரில் உள்ள நன்கனா ஷாகிப் பகுதி போலீசார், 8 பேரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பும் ஏராளமான இந்து மற்றும் சீக்கிய பெண்கள் இதுபோன்று கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளதால், விசாரணை விரிவுபடுத்தப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
31-ஆக-201918:59:26 IST Report Abuse
Sampath Kumar ஹலோ அங்க என வேண்டும் அனாலும் நடக்கும் அது நியூஸ் இல்லை இங்க நடக்குது தினமும் அதை பத்தி ஒரு நியூஸும் வரல முதல நாம முதுகை சொரிச்சிட்டு அப்புறம் அடுத்தவனை பார்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
31-ஆக-201917:55:18 IST Report Abuse
jagan மூர்க்கம் உலகத்தின் கேன்சர்
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
31-ஆக-201917:04:10 IST Report Abuse
chails ahamad மத மாற்றத்தினால் திருமணத்திற்கு பெண் கிடைக்க வில்லையாம் , எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க இந்த அறிவு ஜீவிகள் , மூட நம்பிக்கையை கொள்கையாக மத நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டிருக்கும் இந்த அறிவு ஜீவிகள் , யோசியமும் , பொருத்தமும் பார்ப்பதை தவிர்க்கட்டும் , சாதி பிரிவுகளை தூர தூக்கி போட்டு விட்டு பெண் பார்த்து போகட்டும் , வரதட்சனையை ஒழித்திட முன்மாதிரியாய் துணியட்டும் , பெண்கள் கிடைப்பதில் தடையேதும் இல்லை என்பதை உணருவார்கள் , தவறுகளை தம்மீது வைத்து கொண்டு திருமணத்திற்கு பெண் கிடைக்க வில்லை என புலம்புவதில் அர்த்தம் இல்லையே .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X