பொது செய்தி

தமிழ்நாடு

மாணவிகளை வீட்டுக்கு கூப்பிடாதே: சென்னை பல்கலை., அதிரடி

Updated : ஆக 31, 2019 | Added : ஆக 31, 2019 | கருத்துகள் (28)
Advertisement

சென்னை : மாணவ, மாணவியரை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் கல்வி தொடர்பாக வீடுகளுக்கோ, தனிப்பட்ட இடங்களுக்கோ அழைக்கக் கூடாது என சென்னை பல்கலை., பதிவாளர் சீனிவாசன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.





சென்னை பல்கலை., பதிவாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கல்வி தொடர்பாக மாணவ, மாணவியரை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் தங்களது வீடுகளுக்கோ, தனிப்பட்ட இடங்களுக்கோ அழைக்கக் கூடாது. பல்கலை., ஆசிரியர்கள் அழைத்தால் மாணவர்களும் வீடுகளுக்கு செல்லக் கூடாது. ஆசிரியர்களின் வீடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டால், பல்கலை.,யில் உரிய அனுமதி பெற வேண்டும்.





பாலியல் தொந்தரவு அற்ற வளாகமாக சென்னை பல்கலை., வளாகத்தை மாற்றும் முயற்சி இது. பாலியல் தொந்தரவு இருந்தால், பேராசிரியர் ரீட்டா ஜான் தலைமையிலான குழுவிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். மாணவர்கள், பேராசிரியர்கள் தரப்பினர் தவறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
31-ஆக-201920:33:13 IST Report Abuse
தமிழ்வேள் கல்வியில் இடஒதுக்கீடு ஒழிக்கப்படாவிட்டால் இப்படித்தான் இருக்கும் நடிகனை சிலாகித்து பேசும் ஆசிரியருக்கு ஒழுக்கம் எப்படி வரும்? கல்வி கற்பிப்பவர் தகுதி அடிப்படையிலேயே நியமிக்கப்படவேண்டும் இடையில் குடி புகை பழக்கம் இருந்தால் கண்டறியப்பட்டால் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படவேண்டும் ஹெல்மெட் போடாத போலீஸ்காரன் தவறானவன் என்றால் குடிக்கும் புகைக்கும் வாத்தியார் மட்டும் யோக்கியமானவராகவா இருப்பார்? மேலும் ரசிகர் மன்றம் சாதி சங்க ஈடுபாடும் வேலையை விட்டு தூக்கும் காரணிகளாக இருக்கவேண்டும் ஒரு சில வேலைகளுக்கு ஒரு சிலவிதமான தியாகம் வாழ்க்கை முறைகளே தேவை அவற்றில் சமரசம் செய்துகொள்ள இயலாது
Rate this:
Share this comment
Cancel
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
31-ஆக-201919:42:52 IST Report Abuse
Gnanasekaran Vedachalam ஆராச்சி பட்டம் பயிலும் மாணவர்கள் ஆராச்சியை வழி நடத்துபவர் நிலை அறிந்து பக்குவமாக ஆராச்சியை முடிக்க வேண்டும் என் காலத்தில் அவரை பார்க்க மணி கணக்கில் காத்து இருத்தல் அவருடைய சூழ் நிலை குஸ்ட் ஹவுஸ் கிளப் லீடிங் லைப்ரரி கருத்து அரங்கம் வீடு வரை சென்று ஆராச்சி படிப்பை பல ஆண்டு கற்றதால் சிறந்த மனித வள மேதைகளை உருவாக்கினார்கள் எல்லாம் அவர்களின் சொந்த செலவில் அநாகரிக பேர்வழிகள் அபோழொடு இல்லை இபோழொடு பண பொருளாதாரம் ஆகிவிட்டதால் வீடு வரை செல்ல வேண்டாம் கல்வி வளாகத்தில் அவரிடம் உங்கள் ஆராட்சிக்கு போதுமான தெளிவு உரை பெற்று ஆராச்சியை கால தாமதம் இல்லாமல் நன்கு முடித்து மாபெரும் மேதைகளாக உருவாக வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
31-ஆக-201917:45:47 IST Report Abuse
Endrum Indian மாணவிகளை வீட்டுக்கு கூப்பிடாதே அதற்காக பிரத்யேகமாக ஒரு ரூம் ஒவொரு ப்ரொபசருக்கும் அரேஞ் செய்து தருகின்றோம் அதில் நீங்க நினைப்பதை செய்யலாம் என்பது போல இருக்கின்றது இந்த அறிக்கை. பாலின தவறு செய்தால் கீழே அறுக்கப்படும் அல்லது மரண தண்டனை என்று சட்டம் மாறும் வரை இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும், இதை நிப்பாட்ட முடியாது.
Rate this:
Share this comment
Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
01-செப்-201903:36:51 IST Report Abuse
Watcha Mohideenஉங்கள் கருத்தை மதிக்கின்றேன், அனால் பாலியல் குற்றங்களுக்கு மரணதண்டனையா? இது காட்டுமிராண்டியர்களின் சட்டமாக தெரிகிறதே?முஸ்லிம்கள் இதை தான் சொல்கிறார்கள்.மாற்றான் மனைவியிடம் பாலியல் தொடர்பு வைத்துகொன்டால் குற்றம் இல்லை என்று நீதிமன்றங்கள் சொன்னதே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X