மாணவிகளை வீட்டுக்கு கூப்பிடாதே: சென்னை பல்கலை., அதிரடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவிகளை வீட்டுக்கு கூப்பிடாதே: சென்னை பல்கலை., அதிரடி

Updated : ஆக 31, 2019 | Added : ஆக 31, 2019 | கருத்துகள் (28)

சென்னை : மாணவ, மாணவியரை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் கல்வி தொடர்பாக வீடுகளுக்கோ, தனிப்பட்ட இடங்களுக்கோ அழைக்கக் கூடாது என சென்னை பல்கலை., பதிவாளர் சீனிவாசன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.





சென்னை பல்கலை., பதிவாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கல்வி தொடர்பாக மாணவ, மாணவியரை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் தங்களது வீடுகளுக்கோ, தனிப்பட்ட இடங்களுக்கோ அழைக்கக் கூடாது. பல்கலை., ஆசிரியர்கள் அழைத்தால் மாணவர்களும் வீடுகளுக்கு செல்லக் கூடாது. ஆசிரியர்களின் வீடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டால், பல்கலை.,யில் உரிய அனுமதி பெற வேண்டும்.





பாலியல் தொந்தரவு அற்ற வளாகமாக சென்னை பல்கலை., வளாகத்தை மாற்றும் முயற்சி இது. பாலியல் தொந்தரவு இருந்தால், பேராசிரியர் ரீட்டா ஜான் தலைமையிலான குழுவிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். மாணவர்கள், பேராசிரியர்கள் தரப்பினர் தவறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X