பொது செய்தி

இந்தியா

குடிமக்கள் பதிவேடு: அசாமில் 19 லட்சம் பேர் ‛அவுட்'

Updated : ஆக 31, 2019 | Added : ஆக 31, 2019 | கருத்துகள் (20)
Advertisement
AssamNRC, Assam Citizens List, NRC, குடிமக்கள் வரைவு பதிவேடு,

கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான இறுதிப் பட்டியல், இன்று (ஆக.,31) வெளியிடப்பட்டது. பட்டியலில் 3.11 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர். 19 லட்சம் பேர் சேர்க்கப்படவில்லை.

அசாம் மாநிலத்தில், அண்டை நாடான, வங்கதேசத்தை சேர்ந்த பலர், சட்டவிரோதமாக வசிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வேறு நாடுகளை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களை வெளியேற்றும் வகையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிட, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன.
இதன்படி, அசாமை சேர்ந்தவர்கள், தகுந்த சான்றிதழ்களை கொடுத்து, தங்கள் பெயர்களை பதிவு செய்யும்படி உத்தரவிடப்பட்டது. இதன் அடிப்படையில், கடந்தாண்டு ஜூலையில், வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 41 லட்சத்துக்கும் அதிகமானோர் பெயர்கள் விடுபட்டிருந்தன. இதனால், அசாமில், பதற்றமும், பரபரப்பும் நிலவியது.இதையடுத்து, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்காக, மறு பதிவு செய்யும் நடைமுறை தொடர்ந்து வந்த நிலையில், இன்று இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது





இது தொடர்பாக என்ஆர்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜீலா கூறுகையில், இறுதி பட்டியலில் 3,11,21,004 பேர் இடம்பெற்றுள்ளனர். 19,06,657 பேர் பட்டியலில் இடம்பெறவில்லை. அவர்கள், பட்டியலில் உரிய ஆவணங்கள் வழங்கவில்லை. இந்த பட்டியலில் திருப்தி இல்லாதவர்கள், வெளிநாட்டினவருக்கான தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என்றார்.
பட்டியல் வெளியீடு காரணமாக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amreen - Utah,யூ.எஸ்.ஏ
31-ஆக-201921:16:49 IST Report Abuse
Amreen வங்காள தேச குடிமக்கள் இங்கு வந்து குடியேறி புழுக்களை போல பிள்ளை பெரும் நாகரீக மற்ற கூட்டம். ரோஹிங்கிய முஸ்லிம்களும் இதில் அடக்கம்.
Rate this:
Share this comment
Cancel
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
31-ஆக-201917:52:55 IST Report Abuse
Tamilachi yennamo இங்க பிறந்து வளர்ந்த இந்த நாட்டு குடிமக்களுக்கு குடியுரிமை ரத்து செய்யப்பட்டதுபோல சும்மா பொங்கறீங்க...எல்லாம் பங்களாதேஷ்ல இருந்து திருட்டுத்தனமா குடியேறிய ரோஹிங்கிய முஸ்லிம்களும் ஒரு சில மற்ற மதத்தவரும் தான்...அவர்களுக்கு இவ்வளவு நாள் நம்ம நாட்டில் தங்கி ஜனத்தொகையை பெருக்கி அவர்கள் மூலம் குற்றங்களும் தேச விரோத செயல்களையும் செய்தது போதும்...இங்க உள்ள இருக்கற முஸ்லிம்களை வெச்சுக்கிட்டே நம்மளால தீவிர வாதத்தை கட்டு படுத்த முடியவில்லை..இப்போது இந்த தலைவலி தேவை இல்லாதது....மியானமர் அரசு இவர்களை வெளியே துரத்தியபோது யாரும் எதுவும் செய்ய வில்லை...அவர்கள் உறுதியாக இருந்து இவர்களை வெளியேற்றினர்...அதேபோல் மத்திய அரசு இதில் உறுதியாக இருந்து இவர்களை வெளியேற்ற வேண்டும்...இவர்கள் கொள்ளை மற்றும் கொலைகார தீவிரவாத கும்பல்...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
31-ஆக-201917:49:45 IST Report Abuse
Endrum Indian இப்போ பார்க்கணுமே முஸ்லீம் பேகம் மும்தாஜை - மோடியின் அரசு முஸ்லிம்களுக்கு எதிரானது என்று பெரிய அறிவாளி அதாவது அறிவிலியாக அறிக்கை விடுமே பார்க்கணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X