சோனியா, ராகுலுக்கு சிறப்பு பாதுகாப்பு வாபஸ்?

Updated : செப் 01, 2019 | Added : ஆக 31, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சமீபத்தில், முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த, எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பு, வாபஸ் பெறப்பட்டது. பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பை, எஸ்.பி.ஜி., தான் கவனித்துக் கொள்கிறது. இந்த வகையில், சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவிற்கு, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு வழங்கப்பட்டு
டில்லி உஷ், சோனியா, ராகுல், பிரியங்கா, பா.ஜ., மோடி, ரமேஷ்போக்ரியால், கவர்னர், அமித்ஷா, சிறப்பு பாதுகாப்பு வாபஸ்?

சமீபத்தில், முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு அளிக்கப்பட்டு வந்த, எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பு, வாபஸ் பெறப்பட்டது. பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பை, எஸ்.பி.ஜி., தான் கவனித்துக் கொள்கிறது. இந்த வகையில், சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவிற்கு, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தை திருத்தம் செய்ய, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதாவது, இனி பிரதமர் மற்றும் அவரது குடும்பத்திற்கு மட்டுமே, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு தரப்படும்; முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு கிடையாது என, சட்ட திருத்தம் செய்யப்பட உள்ளது.பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில், இந்த சட்ட திருத்தத்தை தாக்கல் செய்ய, பா.ஜ., அரசு திட்டமிட்டுள்ளது. இது நிறைவேறினால், சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவிற்கு, எஸ்.பி.ஜி., பாதுகாப்பு கிடைக்காது. ஆனால், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் பாதுகாப்பு வழங்கப்படும். 'இதை, பழி வாங்கும் நடவடிக்கை என, காங்கிரஸ் பெரிதுபடுத்தும்; ஆனாலும், நாங்கள் இதை செய்தே தீருவோம்' என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.


மோடி, அமித் ஷாவுடன்யார் அதிக நெருக்கம்?தென் மாநிலங்களில், தற்போது பணியில் உள்ள, இரண்டு கவர்னர்களின் பதவிக்காலம் எப்போதோ முடிந்து விட்டது. இருப்பினும், அவர்கள் தொடர்ந்து கவர்னர்களாக பணியாற்றி வருகின்றனர். அதில் ஒருவர், 12 ஆண்டுகளாக கவர்னராக உள்ளார்; மற்றொருவர், ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும், தினமும் போனில் பேசி வருகின்றனராம். ஒருவர், இன்னொருவரிடம், 'நீங்கள் மிகவும் பவர்புல்; அடிக்கடி டில்லி சென்று பிரதமரை சந்திக்கிறீர்கள்; அதனால், உங்களுக்கு எந்த பிரச்னையும் வராது; நீங்கள் தொடர்ந்து கவர்னராக நீடிப்பீர்கள்' என்றாராம்.உடனே இன்னொருவர், 'உங்கள் மீதும் யாரும் கை வைக்க மாட்டார்கள்; நீங்கள் அமித் ஷாவிற்கு நெருக்கம்; நீங்களும் கவர்னராக தொடர்வீர்கள்; நான் என்ன தான் பிரதமரை சந்தித்தாலும், பதவியில் தொடர்வேனா என்பது சந்தேகம் தான்' என்றாராம்.இதற்கிடையே, பா.ஜ.,வில் உள்ள மூத்த தலைவர்கள் சிலர், தங்களுக்கு கவர்னர் பதவி வேண்டும் என, மேலிடத்தை நச்சரித்து வருகின்றனர்.


செய்வினை கோளாறால் பா.ஜ., தலைவர்கள் மரணம்?சமீபத்தில், பா.ஜ., மூத்த தலைவர், சுஷ்மா ஸ்வராஜ் காலமானார். அவரைத் தொடர்ந்து, அருண் ஜெட்லியும் காலமானார். இப்படி சீனியர் தலைவர்கள், ஒருவர் பின் ஒருவராக மரணமடைவதற்கு செய்வினை காரணமாக இருக்குமோ என, சில, பா.ஜ., தலைவர்கள் பேசத் துவங்கினர். குறிப்பாக, பா.ஜ., பெண், எம்.பி., சாத்வி பிரக்யா, இதை வெளிப்படையாகவே பேசிவிட்டார். பில்லி சூன்யத்தால் தான், பா.ஜ., தலைவர்கள் இறந்து போயினர் என, ஒரு போடு போட்டார். இவருடைய பேச்சு, பா.ஜ., மேலிடத்திற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த, 2009ல், அப்போதைய பிரதமர், மன்மோகன் சிங், 'பா.ஜ.,வினர் எனக்கு எதிராக யாகம் செய்கின்றனர்' என, குற்றம் சாட்டியிருந்தார். இதை, வன்மையாகக் கண்டித்தனர், பா.ஜ., தலைவர்கள். 'இப்போது, பா.ஜ.,வே பில்லி சூன்யம் என சொன்னால் என்ன அர்த்தம்' என, கேள்வி எழுப்புகின்றனர் காங்கிரசார்.இன்னொரு பக்கம், மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், ரமேஷ் போக்ரியால் வாய்க்கு வந்தபடி பேசி, சர்ச்சையை கிளப்பி வருகிறார். 'அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா, சமஸ்கிருதத்தை வைத்து தான் ஆராய்ச்சி நடத்துகிறது; விஞ்ஞானத்தை விட சிறந்தது ஜோதிடம்' எனறெல்லாம் கூறி, பலரையும் அதிர வைத்தார். சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பிரதமர் மோடி இதைப் பற்றி பேசியிருக்கிறார். சர்ச்சையை கிளப்பும் விஷயங்களை யாரும் பேசவே கூடாது என, அவர் அமைச்சர்களுக்கு கடிவாளம் போட்டிருக்கிறார். 'நீங்கள் பேசும் அனாவசிய பேச்சுகளுக்கு தான், 'மீடியா' முதலிடம் கொடுக்கும்; நீங்கள் செய்த நல்ல விஷயங்கள், 'ஹைலைட்' ஆகாது; எனவே, அமைச்சர்கள் கண்டதையும் பேசக் கூடாது' என, உத்தரவிட்டுள்ளார் பிரதமர்.முந்தைய, பா.ஜ., அரசில், பிரகாஷ் ஜாவடேகர் தான், மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தார். அவர் செய்த நல்ல விஷயங்களையெல்லாம், இப்போதைய அமைச்சர், ரமேஷ் போக்ரியால் ஒழித்துக் கட்டி வருகிறார் என வருத்தப்பட்டாராம் மோடி. விரைவில், இவர், வேறு துறைக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது என, சொல்லப்படுகிறது. போக்ரியாலுக்கு, மனித வள மேம்பாட்டு துறையை ஒதுக்கிய போது, பா.ஜ., தலைவர்கள், இவருக்குப் போய் இந்த துறையா என ஆச்சரியப்பட்டனர்.


அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்தும், 'ரேடியோ'மறைந்த, முன்னாள் நிதி அமைச்சர், அருண் ஜெட்லியின் நண்பர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பலரும், அவருடைய வீட்டிற்கு சென்று இப்போதும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெட்லியின் வீடு, டில்லியில், கைலாஷ் காலனியில் உள்ளது. அங்கு, அவர், வழக்கமாக அமரும் இடத்தில், அவருடைய பெரிய போட்டோவை வைத்துள்ளனர். அதற்குப் பக்கத்தில், 'ரேடியோ' ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரேடியோவில், 5000க்கும் அதிகமான சினிமா, பஜன் பாடல்கள் உள்ளன. குறிப்பாக, பழைய சினிமா பாடல்கள் அதிகம்.ஜெட்லி, பழைய ஹிந்தி சினிமா பாடல்களை ரசித்து கேட்பார். குறிப்பாக, வேலையில், 'டென்ஷனாக' இருக்கும் போது, இந்த ரேடியோவில் தான் பழைய பாடல்களை கேட்பாராம்; கூடவே இவரும் பாடுவாராம். அதனால், ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவர் உபயோகித்த ரேடியோவும் போட்டோவிற்கு பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
21-செப்-201918:00:31 IST Report Abuse
Sathya Dhara சரியான தீர்ப்பு. போலீஸ் பாதுகாப்பும் தேவை இல்லை. இது ஆடம்பரம். மக்களின் வரிப்பணத்தில் வெட்டி செலவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X