பொது செய்தி

இந்தியா

ரயில் டிக்கெட்களுக்கு மீண்டும் சேவைக் கட்டணம் அறிமுகம்

Updated : செப் 01, 2019 | Added : செப் 01, 2019 | கருத்துகள் (18)
Advertisement

புதுடில்லி:'ஆன்லைன்' மூலமாக முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்களுக்கு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேவைக் கட்டணம், மீண்டும் அறிமுகம் செய்யப்படுகிறது. இன்று முதல் இது, அமலுக்கு வருகிறது.






ரயில்களுக்கான முன்பதிவை ஆன்லைன் மூலமாக செய்யும் வசதியை, ரயில்வேயின், ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே உணவு சேவை மற்றும் சுற்றுலா வாரியம் அளித்து வருகிறது. ஆன்லைன் மூலமாக செய்யப்படும், 'இ - டிக்கெட்' முன்பதிவுக்கு, 'ஏசி' வசதியில்லாத பெட்டிக்கு, 20 ரூபாயும், 'ஏசி' வசதி உள்ள பெட்டிக்கு, 40 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது. டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், இந்த சேவைக் கட்டணங்கள், மூன்று ஆண்டுகளுக்கு முன் விலக்கி கொள்ளப்பட்டன.





இதனால், ஐ.ஆர்.சி.டி.சி.,யின் வருவாய் குறைந்தது. அதையடுத்து, சேவைக்கட்டணங்களை மீண்டும் அறிமுகம் செய்ய, ஐ.ஆர்.சி..டி.சி.,க்கு, ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 'ஏசி' வசதி யில்லாத பெட்டிகளுக்கான டிக்கெட்களின் முன்பதிவுக்கு, 15 ரூபாயும்; முதல் வகுப்பு மற்றும் 'ஏசி' வசதி உள்ளபெட்டிகளுக்கான முன்பதிவுக்கு, 30 ரூபாயும் வசூலிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இது, இன்று (செப்.,1) முதல்அமலுக்கு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
01-செப்-201923:04:23 IST Report Abuse
karutthu நீரவ் மோடி,விஜய் மல்லயா போன்ற திருடர்களைப்பிடித்து அவனிடமுள்ள பணத்தை பிடுங்க வக்கில்லாத பி ஜே பி அரசாங்கம் நம்மளை போட்டு தாக்குது .இந்த சனியன் பிடித்த மத்திய அரசு ?உலகம் சுற்றும் மோடிக்கு அமெரிக்கா,ரஷ்யா லண்டன் போன்ற ஊர் சுற்றவே நேரமி ல்லாத மோடிக்கு இதை கவனிக்க நேரம் இருக்காதே
Rate this:
Share this comment
Cancel
01-செப்-201918:58:02 IST Report Abuse
நக்கல் மத்திய அரசுக்கு ஒன்று புரியமாட்டேன் என்கிறது.... தமிழ்நாட்டில் இருப்பவர்கள் கொஞ்சம் வித்யாசமானவர்கள்... எங்களுக்கெல்லாம் இலவசமாகவே கொடுக்கப் படுகிறது... காசு கேட்டாலோ, வேலை செய்ய சொன்னாலோ நாங்கள் போராட்டம் நடத்துவோம்.... அதுக்கு எங்களுக்கு இலவச சாராயம் கிடைக்கும்... முடிஞ்சா ரயில் கட்டணத்தையே எடுத்துட்டு இலவசமா ரயில் விடுங்க... இல்லேன்னா தண்டவாளத்தில் தலையை வைப்போம், ரயில் போன பிறகு...
Rate this:
Share this comment
Cancel
VASEEGARAN - BANGALORE,இந்தியா
01-செப்-201918:41:23 IST Report Abuse
VASEEGARAN கவுண்டர்ல போய் டிக்கெட் வாங்கறவங்களுக்கு சேவை கட்டணம் வசூலித்தால் கூட நியாயம் என்று சொல்லலாம். அங்க ஆள் போட்டு டிக்கெட் விக்கறீங்க.. சம்பளம் குடுக்கணும். ஆன்லைன்ல காசு வாங்கற அளவுக்கு என்னடா சேவை பண்றீங்க? ஒரு முறை சாப்ட்வேர் டெவெலப் பண்ணி விட்டால் வருஷக்கணக்கா அதை வைச்சு தானே ஒட்டிக்கிட்டு இருக்கீங்க.. IRCTC ரயில்வேயின் ஒரு பகுதி தானே.. பதினஞ்சு ரூபாய் சேவைக்கு கிட்டத்தட்ட மூணு ரூபா வரி போடறீங்க. ஆன்லைன்ல விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டலாமே. ஏண்டா பொது மக்களை வதைக்கறீங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X