டெக்சாசில் மீண்டும் துப்பாக்கிச்சூடு : 5 பேர் பலி

Updated : செப் 01, 2019 | Added : செப் 01, 2019 | கருத்துகள் (9)
Advertisement

வாஷிங்டன் : அமெரிக்காவின் டெக்சாசில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 21 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேற்கு டெக்சாசில் உள்ள மிட்லேண்ட் பகுதியில் வாகனத்தில் சென்ற ஒருவர், அப்பகுதியில் இருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், தபால் கொண்டு செல்லும் லாரியை கடத்திச் சென்றுள்ளார். அவரை துரத்திச் சென்ற போலீசார், லாரியை மடக்கி பிடித்துள்ளனர். அப்போது போலீசார் மீதும் அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
தொடர்ந்து போலீசாருக்கும், தாக்குதல் நடத்திய நபருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கொல்லப்பட்டார். 30 வயது இளைஞரான அந்த நபர், எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்ற காரணம் தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கண்டனமும், வருத்தமும் தெரிவித்துள்ளார். டென்சாசின் எல் பாசோ பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 22 பேர் பலியான சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan - tamilnadu,இந்தியா
01-செப்-201912:08:52 IST Report Abuse
hasan பொருளாதார மந்த நிலை காரணமோ ?
Rate this:
Share this comment
Cancel
venkat - chennai,இந்தியா
01-செப்-201910:37:36 IST Report Abuse
venkat அமெரிக்காவை விவரம் புரியாது குறை சொல்லுவதை விட, நம்மூர் சாலை விபத்துக் கொலைகளை கணக்கிட்டுப் பார்த்தால், சிறப்பான நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் நீதித்துறை செயல்படும், தண்டனை தரும் அமெரிக்காவை விட்டு, நமது ஊர் திறமையற்ற ஆட்சி அதிகார வர்கத்தை குறை சொல்லுவது உங்கள் முதல் கடமை என்பது விளங்கும். நியூயார்க் டைம்ஸ் 181218 செய்திப்படி, அமெரிக்காவில் 2017ல் நடந்த துப்பாக்கி உயிரிழப்புகள் 39,773. ஆனால் இதில் தற்கொலை விடுத்து கொன்றது மூன்றில் ஒரு பங்கு (அதாவது சுமார் 13300). இதற்கு மாறாக இந்தியாவில் 2016 ல் நடந்த சாலை விபத்துக் கொலை அரசின்படி 1,50,785 WHO உசிதப்படி 2,99,091 உங்களை சுற்றி தினம் நடக்கும் இந்த பல்லாயிரக்கக் கணக்கான விபத்துக் கொலைகளுக்கு காரணம் கவனக் குறைவு என்பதோடு, நெடுஞ்சாலை உள்ளாட்சி போக்குவரத்து அலட்சிய ஊழல் மாமூல் காவலரையே பெரிதும் சாரும்.
Rate this:
Share this comment
JSS - Nassau,பெர்முடா
01-செப்-201912:15:03 IST Report Abuse
JSSநீங்கள் சொல்வது சரியே ஆயினும். அமெரிக்காவில் மன நலம் கெட்டவர்களின் குற்ற கொலைகள் நியாய படுத்த முடியாதவை. இந்தியாவிலும் அத்தகைய கொலைகள் சராசரி மனிதனின் வாழ்க்கையில் நடக்கின்றன. உதாரணம் காதல் கொலைகள். ஆனால் நெடுஞ்சாலைகளில் இறப்பவர்களின் எண்ணிக்கைக்கு அரசே பொறுப்பு....
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
01-செப்-201910:04:00 IST Report Abuse
 Muruga Vel டெக்சாஸில் ஷாப்பிங் மால் போகவே திக் திக் என்று இருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X