பொது செய்தி

இந்தியா

புதிய போக்குவரத்து விதிமீறல் சட்டம் இன்று முதல் அமல்

Updated : செப் 01, 2019 | Added : செப் 01, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி : போக்குவரத்து விதிகளை மீறினால் பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையிலான திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம், பார்லி., கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்பட்டு, ஆக.,9 அன்று ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இன்று (செப்.,01) முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய

புதுடில்லி : போக்குவரத்து விதிகளை மீறினால் பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையிலான திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.latest tamil news


திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம், பார்லி., கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்பட்டு, ஆக.,9 அன்று ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இன்று (செப்.,01) முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய சட்டத்தின்படி, மது அருந்தி வானம் ஓட்டுபவருக்கு ரூ.10,000 மும், வேகமாக வாகனத்தை ஓட்டுபவர்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.5000 முதல் ரூ.10000 வரை அபராதம் மற்றும் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.


latest tamil newsசீட்பெல்ட், ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம் ரூ.100 லிருந்து ரூ.1000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் செலுத்துவதுடன் 3 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது. மேலும் இந்த புதிய சட்டத்தின்படி, மாநிலத்தின் எந்த பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். அதே போன்று, ஓட்டுனர் உரிமம் காலாவதி ஆவதற்கு ஓராண்டிற்குள் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-செப்-201920:16:29 IST Report Abuse
ஆப்பு அபராதமா கட்டுறதுக்கு மக்களுக்கு வருமானம் வேண்டாமா? அதைப் பெருக்கறதை வுட்டுட்டு எக்கேடு கெட்டுப் போங்க... அபராதத்தை மட்டும் கட்டுங்கன்னு சட்டம் போடுறாங்க. இருக்குற கொஞ்ச நஞ்சப் பொருளாதாரத்தையும் இப்பிடி அபராதம் போட்டே ஒழிச்சு கட்டிருங்க.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02-செப்-201903:15:47 IST Report Abuse
skv srinivasankrishnaveniமிஸ்டர் வருமானம்னான்னாவே வரவனெல்லாம் தான் கார்காலவச்சுருக்கானுக மெயின் ப்ராப்லம் 2 வீலர்களேதான் ஹெல்மெட் போடாமல் வந்து உசிரை எடுக்குதுங்க...
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
01-செப்-201918:27:28 IST Report Abuse
M S RAGHUNATHAN When the Government is going to make roads motorable. Now the monsoon will set and even for a small shower the roads will peel off and people especially 2 wheeler drivers will meet accidents in spite of wearing helmets. If even one such incident happens will the honourable high court order suo moto arrest of the contractors who laid the roads and dismissal of officials involved in inspecting and passing the bills. The courts will only target hapless common citizens. Even today, I saw a police patrol van being driven by the driver without wearing seat belt. Paiy arasu seidhaal pinam thinnum sasthirangal.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
01-செப்-201917:16:21 IST Report Abuse
g.s,rajan Helmets should have proper provisions for hearing ,proper air throw,air flow to avoid sweating ,optimum weight to bear so as to reduce the headaches and backaches to the two wheeler riders.will the supreme and the high courts strictly raise this concerns to the helmet manufacturers regarding this thus benefiting the consumers. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X