ஊழல் வழக்கு : மாஜி அமைச்சர்களுக்கு சிறை

Updated : செப் 01, 2019 | Added : செப் 01, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
மும்பை : மகாராஷ்டிராவில் வீட்டு வசதி திட்ட ஊழல் வழக்கில் சிக்கிய சிவசேனா கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சருக்கு ரூ.100 கோடி அபராதமும், 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேசியவாத காங்., கட்சியின் முன்னாள் அமைச்சர் குலாப்ராவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் 1990 ம் ஆண்டு

மும்பை : மகாராஷ்டிராவில் வீட்டு வசதி திட்ட ஊழல் வழக்கில் சிக்கிய சிவசேனா கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சருக்கு ரூ.100 கோடி அபராதமும், 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேசியவாத காங்., கட்சியின் முன்னாள் அமைச்சர் குலாப்ராவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் 1990 ம் ஆண்டு தொகுப்பு வீடுகள் கட்டி தருவதற்காக கொண்டு வரப்பட்ட கார்குல் வீட்டு வசதி திட்டத்தில் ரூ.29 கோடி ஊழல் செய்ததாக சிவசேனா கட்சியை சேர்ந்த சுரேஷ் ஜெயின் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2012 ம் ஆண்டு கைது செய்யப்பட்ட சுரேஷ் ஜெயின், சுப்ரீம் கோர்ட்டில் ஜாமின் பெற்று, ஓராண்டிற்கு பிறகு வெளியே வந்தார்.


latest tamil news



இவ்வழக்கில் தேசியவாத காங்., கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் குலாப்ராவ் டியோகர் உள்ளிட்ட 48 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் துலே மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுருஷ்ட்டி நீல்காந்த், சுரேஷ் ஜெயினுக்கு ரூ.100 கோடி அபராதமும், 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். குலாப்ராவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், அதிகாரிகள் உள்ளிட்ட 46 பேருக்கு 3 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sudharman - chennai,இந்தியா
01-செப்-201923:46:39 IST Report Abuse
sudharman உங்க தின மலரிலே சொல்லி இருக்கீங்க . சிவசேனாவும் பிஜேபி தனி தனியா போட்டியிட (சட்டசபை) போறாங்கன்னு. அதுக்காகவே இருக்கலாம் உடன் தீர்ப்புக்கு . எல்லாம் அரசியலே. நீதி யார் செய்தலும் கண்டுக்க மாட்டோம். எதிர் கட்சி என்றல் பாய்வோம்
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01-செப்-201919:01:04 IST Report Abuse
skv srinivasankrishnaveni appo edhanaal பசிக்குமட்டும் விதி விலக்கு பலமுறை நிதிமந்திரியா இருந்ததாலா?நீதி நியாயம் என்றால் ஒண்ணுதான் விளக்கேனனை போல வழவழகொழகொழன்னு என்னய்யா கண்றாவி இது. உலகம் முழுக்க சொத்துக்களா வாங்கினால் ப்ராடுதானுங்கோ நேர்மையானது எல்லாம் நம்ம நாட்டின்பணம் மாட்டிக்கலேன்னா உயர்வா மாட்டிண்டால் தாழ்வா வெட்கமாயில்லீங்களா ஜெயாவை சிபிஐ கைது செய்தபோது ஓடி ஒளியாலேயே இவங்கலாட்டாம் ஜாமீனிலேயே வாழ்ந்தாங்களா ?பிராடு எவன் செய்தாலும் பிராடுதான் ஓகே
Rate this:
Cancel
G Mahalingam - Delhi,இந்தியா
01-செப்-201918:37:37 IST Report Abuse
G  Mahalingam ஊழல் செய்வதற்கு முன் பிளான் போட்டு, ஆதாரங்கள் கிடைக்க முடியாதபடி கொள்ளை அடிப்பதில் திரவிட கட்சிகள் திறமைசாலிகள். பிற மாநிலவத்தவர் இவரிடம் பாடம் கற்று கொள்ளை அடிக்க கற்று கொள்ளுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X