"சாரே ஜகான் சே அச்சா" பாடிய பாக்., தலைவர்

Updated : செப் 01, 2019 | Added : செப் 01, 2019 | கருத்துகள் (25)
Advertisement

லண்டன்: பாகிஸ்தானை சேர்ந்த எம்கியூஎம் கட்சியின் தலைவரான அல்டாப் ஹூசைன், "சாரே ஜகான் சே அச்சா" பாடலை பாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







தற்போது லண்டனில் வசித்து வரும் ஹூசைன், கட்சி தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை பாக்., நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்திய மக்களின் ஆதரவுடனேயே இந்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.




காஷ்மீர் விவகாரத்தை வைத்து பாக்., மக்களை 72 ஆண்டுகளாக பாக்., அரசு தவறாக வழிநடத்தி வருகிறது. காஷ்மீரை பிரிக்கவும், எல்லை தாண்டி தாக்குதல் நடத்தவுமே பாக்.,ல் உள்ள பழங்குடியிட மக்களை பாக்., பயன்படுத்தி வருகிறது. காஷ்மீரை கைப்பற்ற பாக்., 4 முறை போர் தொடுத்தது. ஆனால் 4 முறையும் பாக்., தோல்வியையே சந்தித்தது. இருந்தும் இந்தியா மீது தாக்குதல் நடத்துவதை பாக்., நிறுத்தவில்லை. தொடர்ந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவி, தாக்குதல் நடத்தி வருகிறது.




இரு நாடுகளுக்குள் ஒரே சமயத்தில் தான் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் , பொருளாதாரம் முதல் தொழில்நுட்பம் வரை இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. பாக்., இன்னும் இந்தியாவிற்கு பின்னாலேயே உள்ளது. பாக்.,ல் ஊழல் மட்டுமே உள்ளது; ஜனநாயகம் இல்லை. உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தான் பாக்.,ல் அதிக சக்தி வாய்ந்த அமைப்பாக உள்ளது என்றார். பாக்., அரசை கடுமையாக விமர்சித்து பேசிய ஹூசைன் தொடர்ந்து, "சாரே ஜகான் சே அச்சா" பாடலை பாடினார். இதை பாக்., தலைவர்கள் பலரும் எதிர்த்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rohin - jk ,இந்தியா
02-செப்-201911:49:41 IST Report Abuse
Rohin அல்டப் ஹுஸைனிற்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம் செய்வதற்காக, சுடலை கான், குருமா பாய், சூட்கேஸ் கோவாலு, ஓசி கீரிமணி ஆகியோர் அவசரமாக லண்டன் புறப்படுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Rohin - jk ,இந்தியா
02-செப்-201911:39:26 IST Report Abuse
Rohin அல்தாப் ஹுசைன் அவர்களுக்கு பப்பு, சுடலை சூசை, குருமா, சூட்கேஸ் கோவாலு, ஓசி சோறு கீரிமனி போன்ற தலீவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, நாடு முழுவதும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்
Rate this:
Share this comment
Cancel
S.V.SRINIVASAN - Chennai,இந்தியா
02-செப்-201911:04:35 IST Report Abuse
S.V.SRINIVASAN உண்மை சொன்னால் பாக்கிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும். தனி பட்ட முறையில் திரு அல்டாப்ப் ஹுசைன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X