தமிழகத்தில் பிறந்த முதல் பெண் கவர்னராகிறார் தமிழிசை

Updated : செப் 01, 2019 | Added : செப் 01, 2019 | கருத்துகள் (241)
Advertisement
Tamilisai Soundararajan,தமிழிசை,தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானா கவர்னர், governor, Telengana

புதுடில்லி: தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் பர்மாவில் பிறந்த தமிழ்பெண்ணான ஜோதி வெங்கடாசலம் என்பவர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கேரள கவர்னர் பதவியில் ( 1977 முதல் 1982 வரை) இருந்தார். தமிழகத்தில் பிறந்த முதல் பெண் கவர்னர் என்ற பெருமையை தமிழிசை பெறுகிறார்.

இது தொடர்பாக ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவில் ;


5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். தெலங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.




தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்திரராஜன்
மஹாராஷ்டிரா கவர்னராக பகத் சிங் கோஷ்யாரி
ஹிமாச்சல் கவர்னராக பண்டாரு தத்தாத்ரேயா
கேரள கவர்னராக ஆரிப் முகமது கான்
ஹிமாச்சல் கவர்னராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா, ராஜஸ்தான் கவர்னராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


நன்றியை தெரிவிக்கிறேன்


கவர்னராக நியமிக்கப்பட்டது தொடர்பாக தமிழிசை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: கவர்னர் நியமனம் மகிழ்ச்சி அளிக்கிறது. கடுமையான உழைப்பிற்கு பா.ஜ., அங்கீகாரம் தரும் என்பதை பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர் அமித்ஷாவும் நிரூபித்துள்ளனர். எனக்கு ஆதரவு அளித்த தமிழக அரசியல் தலைவர்கள், குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்து கொள்கிறேன். பா.ஜ., தலைவராக இருந்த எனக்கு அதை விட மிகப்பெரிய பதவியை கட்சி தலைமை கொடுத்துள்ளது. தமிழக பா.ஜ., தலைவராக எனது பதவிக்காலம், டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (241)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
07-செப்-201911:51:56 IST Report Abuse
Matt P இவர் பாஜகவில் சேர்ந்தபோது குமரி அனந்தன் சொன்னாராம் ...மக்களே இப்படி செய்துட்டியே …...இப்போது பெருமைப்பட்டிருப்பார்
Rate this:
Share this comment
Cancel
K.Lekshmisaran - Suchindrum,இந்தியா
06-செப்-201906:55:32 IST Report Abuse
K.Lekshmisaran ஜோதி வெங்கடாச்சலம் ்? ஐஸ் ஷி எ தமிழின்?
Rate this:
Share this comment
Cancel
Sundar - Madurai,இந்தியா
02-செப்-201915:04:12 IST Report Abuse
Sundar She is deserved for this post. கடினமான உழைப்பு. பிஜேபிஇல் உழைப்பிற்கு மரியாதை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X