அரசியல் செய்தி

தமிழ்நாடு

அடுத்த பா.ஜ., தலைவர் யார் ?

Updated : செப் 02, 2019 | Added : செப் 01, 2019 | கருத்துகள் (117)
Advertisement

சென்னை: தமிழகத்தின் பா.ஜ., மாநில தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த போட்டியில் எச்.ராஜாவும், நயினார் நாகேந்திரனும் முதலிடத்தில் இருப்பதாக தெரிகிறது.






தமிழக பா.ஜ., தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் 2 முறை பதவி வகித்தார். இவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிகிறது. இந்நிலையில் தமிழிசை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தமிழக பா.ஜ., தலைவராக யார் நியமிக்கப்படுவார் என கட்சியில் தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி வட்டாரத்தில் இது குறித்து விசாரித்த போது;தேசிய செயலராக இருக்கும் எச்.ராஜா, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு தலைவராகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கோவையை சேர்ந்தி சி.பி.,ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன், ஏ.பி.முருகானந்தம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் ஆகிய பெயர்களும் அடிபடுகிறது.

எச்.ராஜாவை பொறுத்தவரை, அவர் தற்போது பா.ஜ., தேசிய செயலாளராக உள்ளார். பிராமணர் சமூகத்தை சேர்ந்த இவர் கேரள மாநிலத்தின் பா.ஜ,. பொறுப்பாளராக இருந்த போது அங்கு நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தினார். இவர் தேசிய செயலராக இருந்தாலும் மாநில அரசியலில் முழு அக்கறை செலுத்தி வருகிறார். அவ்வப்போது ஏதேனும் பேசி சர்ச்சையில் சிக்குவார். இதனால் இவருக்கு தலைவர் பொறுப்பு கிடைத்தால் மேலும் பரபரப்பு கூடும்.


நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நயினார்


இது போல் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் நயினார் நாகேந்திரன். அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர். அமித்ஷா முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்த அவர் சமீபத்திய லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு திமுகவுக்கு கடும் போட்டியை கொடுத்தார். அமித்ஷா நேரடி பார்வையில், இவர் இருப்பதால், இவரே தலைவராகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.மேலும் அவர் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர். தமிழிசை நாடார் சமூகத்தை சேர்ந்தவராக இருந்ததால் இந்த முறை ஒரு முக்குலத்தோரை நியமிக்கலாம் என சிலர் யோசனை தெரிவித்துள்ளனர். இவருக்கு பொறுப்பு வழங்கினால் தமிழகம் முழுவதும் கட்சியை வளர்ப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.




பொன்.ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன், ஆகியோர் ஏற்கனவே மாநில தலைவர் பொறுப்பு வகித்து விட்டதால் இந்த இருவருக்கும் வாய்ப்பு குறைவு. அடுத்தபடியாக வானதி சீனிவாசன், ஏ.பி.முருகானந்தம், கே.டி.ராகவன் ஆகியோரது பெயர்களும் பட்டியலில் உள்ளது. கே.டி.ராகவன் பா.ஜ., மாநில பொது செயலராக உள்ளார். இவர் டிவி விவாதங்களில் பங்கேற்று தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர். ஆக தமிழக பா.ஜ., தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்விக்கு விரைவில் விடை தெரியும்.

Advertisement




வாசகர் கருத்து (117)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
08-செப்-201909:30:06 IST Report Abuse
PANDA PANDI இந்த குழப்பத்திற்கும் CONGRESS தான் காரணமாக இருக்குமோ
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
07-செப்-201912:57:17 IST Report Abuse
 Sri,India நயினார் நாகேந்திரன் அவர்கள் மிகத் தகுதி வாய்ந்தவர் .
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
05-செப்-201911:18:24 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை நோட்டவோட போட்டி போடறதுக்கு ஏத்த மாதிரி ஒரு தலைவரை போடுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X