ஆகஸ்ட் ஜிஎஸ்டி வசூல் ரூ.98,202 கோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆகஸ்ட் ஜிஎஸ்டி வசூல் ரூ.98,202 கோடி

Updated : செப் 01, 2019 | Added : செப் 01, 2019 | கருத்துகள் (10)
Share
GST collection,  August,ஜிஎஸ்டி,

புதுடில்லி: கடந்த ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் 98,202 கோடி ரூபாய் என மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் 1.02 லட்சம் கோடி ஆக இருந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல், ரூ.93.960 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு ஜிஎஸ்டி வசூல், ஒரு லட்சம் கோடிக்கு கீழ் வசூலாகியுள்ளது இது இரண்டாவது முறை ஆகும். முன்னதாக கடந்த ஜூன் மாதம் ரூ.99,939 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வசூல் 98,202 வசூல் ஆகியுள்ளது.

சிஜிஎஸ்டி - ரூ.17,733 கோடி

எஸ்ஜிஎஸ்டி - ரூ.24,239 கோடி,

ஐஜிஎஸ்டி-48,958 கோடி( இறக்குமதியில் கிடைத்த 24,818 கோடியை சேர்த்து)

செஸ் வரி - 7,273 கோடி( இறக்குமதியில் கிடைத்த 841 கோடியை சேர்த்து) வசூல் ஆகியுள்ளது என நிதி அமைச்சகம் கூறியுள்ளது.


latest tamil news




மேலும் ஜூலை மாதத்தில் இருந்து 31 ஆக., வரை தாக்கல் செய்யப்பட்ட ஜிஎஸ்டிஆர் 3B கணக்கு 75.80 லட்சம் எனவும் கூறியுள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X