அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொருளாதாரத்தை தலை நிமிர செய்வது பிரதமரின் கடமை: ஸ்டாலின்

Updated : செப் 01, 2019 | Added : செப் 01, 2019 | கருத்துகள் (127)
Share
Advertisement

சென்னை: இந்திய பொருளாதாரத்தை தலைநிமிர வைக்க வேண்டிய கடமை, பிரதமர் மோடிக்கு இருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.latest tamil newsஇந்திய பொருளாதாரத்தின் இன்றைய நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியிருந்தார். இதுகுறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: இந்திய பொருளாதாரத்தை தலை நிமிர செய்ய, பிரதமர் மோடி சில முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மன்மோகன்சிங் கூறியது போல், அரசியல் பழிவாங்கலை கைவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.


latest tamil newsபொருளாதாரம் பின்னோக்கி செல்கிறது என்பதை நிபுணர்கள் எடுத்துரைத்தும் அரசு கவலைப்படுவதாக தெரியவில்லை. வேலையில்லா திண்டாட்டம் கடந்த 40 ஆண்டு காலமாக இல்லாத அளவுக்கு அதிகமாகி உள்ளது. கிராமப்புற பொருளாதாரம் நலிவடைந்துவிட்டது. பொருளாதார பின்னடைவை மறைப்பது, இமயமலையை, இலையில் உள்ள சோற்றுக்குள் மறைப்பது போன்றது.

எத்தகைய சோதனைகளையும் சமாளித்து சிலிர்த்து எழும் வல்லமை, இந்திய பொருளாதாரத்திற்கு உண்டு. பா.ஜ., அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் இறங்க வேண்டும். பொருளாதார நிபுணர்களைக் கலந்தாலோசித்து முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (127)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
02-செப்-201913:53:32 IST Report Abuse
Idithangi பொருளாதாரம் மோசமாகுது. அப்போ சன் நெட்ஒர்க், ஸ்பீஸ் ஜெட் எல்லாம் இப்போ நஷ்டத்தில்ல இயங்கிட்டு இருக்கு? அவங்க ஷேர் விலை எல்லாம் குறைஞ்சிடுச்சா? இப்போகூட நல்ல பலமான தொகை நன்கொடை கொடுத்தாங்கன்னு செய்தி வந்ததே? சுடலை குரூப் நடத்தும் கம்பெனிகளில் எவ்வளவு லாபம் குறைந்து எத்தனை பேரை வீட்டிற்கு அனுப்பினார்கள்.?
Rate this:
Cancel
Govind - Bangalore,இந்தியா
02-செப்-201913:27:21 IST Report Abuse
Govind You Keep on looting along with Congress. Economy will not change by just pressing a button. If the money pumped for business by Nationalized banks is used properly, Country will not face this crisis. All nationalized banks are improperly managed and the top managements are appointed by Useless Politicians (Congress/DMK) and they give loan to these rowdy elements. No action can also be taken against Bank Management/Political Kingpin) as they are politically strong. All are looters and this is how it will be Please do not advise or give statements at least (Useless Elements)
Rate this:
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
02-செப்-201913:25:58 IST Report Abuse
Dr.C.S.Rangarajan பொருளாதாரம் பின்னோக்கி செல்வதாக 'காற்று என்காதிலே சொன்னது' 'நேற்று இல்லாது' இன்றிருக்கும் மாற்றத்தை சுப்பனும், குப்பனும் கணக்கில் கொள்ளவில்லையே? பொருளாதாரம் பின்னோக்கி செல்வதை அறிந்தோர் தடைபோட 'மாமருந்தொன்றை' தர விழையாததேன்? காரணிகள் உள்நாட்டில் 'விளைந்ததா' அல்லது உலகில் பலநாடுகள் பொருளாதார தேக்கநிலைக்கு ஆட்பட்டதுபோல் நாமும் அந்நிலைதனை தவிர்க்க முயலாதிருப்போமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X