'ராகுலின் பேச்சுக்கு காங்., வெட்கப்படணும்'

Updated : செப் 03, 2019 | Added : செப் 01, 2019 | கருத்துகள் (11) | |
Advertisement
சில்வாசா: ''ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், காங்., முன்னாள் தலைவர், ராகுலின் பேச்சை, தங்களுக்கு சாதகமாக பாக்., பயன்படுத்திக் கொள்கிறது. இதற்காக, காங்., வெட்கப்பட வேண்டும்,'' என, பா.ஜ., தலைவர், அமித் ஷா, ஆவேசமாக கூறினார்.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் நீக்கப்பட்டது. இதற்கு பாக்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, ஐ.நா.,வில் சமீபத்தில்
பா.ஜ., தலைவர், அமித் ஷா,bjp,Amit shah,ஜம்மு-காஷ்மீர்,காஷ்மீர்,ராகுல்

சில்வாசா: ''ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், காங்., முன்னாள் தலைவர், ராகுலின் பேச்சை, தங்களுக்கு சாதகமாக பாக்., பயன்படுத்திக் கொள்கிறது. இதற்காக, காங்., வெட்கப்பட வேண்டும்,'' என, பா.ஜ., தலைவர், அமித் ஷா, ஆவேசமாக கூறினார்.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் நீக்கப்பட்டது. இதற்கு பாக்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, ஐ.நா.,வில் சமீபத்தில் பாக்., மனு கொடுத்துள்ளது. அதில், காங்., முன்னாள் தலைவர், ராகுலின் பேச்சையும், பாக்., குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், டாமன் மற்றும் டயூ யூனியன் பிரதேசத்தில் நேற்று நடந்த, பா.ஜ., கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தலைவருமான, அமித் ஷா பேசியதாவது: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல் சாசனத்தின், 370வது பிரிவை நீக்கியதற்காக, பிரதமர் மோடியை, இந்த நாடே பாராட்டுகிறது. ஆனால், ஒரு சிலர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்., முன்னாள் தலைவர் ராகுல் கூறிய கருத்துகளை, தனக்கு சாதகமாக, பாக்., பயன்படுத்துகிறது. அவருடைய பேச்சை, பாக்., மட்டுமே பாராட்டும். அவருடைய பேச்சுகளுக்கு, காங்., கட்சி வெட்கப்பட வேண்டும்.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு - காஷ்மீரில் ஒரு தோட்டா கூட பாயவில்லை. அங்கு முழு அமைதி நிலவி வருகிறது. நாட்டுடன் முழுமையாக இணைந்துள்ளது. இயல்பு நிலை விரைவில் முழுவதுமாக திரும்பும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anbu - London,யுனைடெட் கிங்டம்
02-செப்-201918:51:58 IST Report Abuse
anbu ஐயா வெட்கம் இன்னா இன்னாங்க அது? கிலோ இன்னா விலையுங்கோ. 70 வருசமாச்சு கேள்விப்பட்டதில்லைங்கோ. நாங்க கல்யாணம்,கருமாதி,கஞ்சி குடிக்குமிடம்,ஒன்னு ரெண்டு போற இடம் என்று எங்கே போனாலும் மைக்கு கிடைச்சாலும் ,இல்லாவிட்டாலும் இப்படித்தான் உளறுவோமுங்க.
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
02-செப்-201916:44:29 IST Report Abuse
s t rajan காங்கிரஸ் என்பதே அவமானம் தான்.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
03-செப்-201904:11:28 IST Report Abuse
skv srinivasankrishnaveniஇந்தகன்க்ரேஸ் இல்லீங்கோ கான் கிரேஸ்...
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
02-செப்-201915:32:25 IST Report Abuse
Loganathaiyyan அய்யே எங்களுக்கெல்லாம் வெட்கம் மானம் சூடு சொரணை எல்லாம் கிடையாதில்லே, எங்களுக்கு தெரிவது பணம் பணம் பணம் அவ்வளவு தான் - இப்படிக்கு காங்கிரஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X