ராகுலின் பேச்சுக்கு காங்., வெட்கப்படணும்| Dinamalar

'ராகுலின் பேச்சுக்கு காங்., வெட்கப்படணும்'

Updated : செப் 03, 2019 | Added : செப் 01, 2019 | கருத்துகள் (11) | |
சில்வாசா: ''ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், காங்., முன்னாள் தலைவர், ராகுலின் பேச்சை, தங்களுக்கு சாதகமாக பாக்., பயன்படுத்திக் கொள்கிறது. இதற்காக, காங்., வெட்கப்பட வேண்டும்,'' என, பா.ஜ., தலைவர், அமித் ஷா, ஆவேசமாக கூறினார்.ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் நீக்கப்பட்டது. இதற்கு பாக்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, ஐ.நா.,வில் சமீபத்தில்
பா.ஜ., தலைவர், அமித் ஷா,bjp,Amit shah,ஜம்மு-காஷ்மீர்,காஷ்மீர்,ராகுல்

சில்வாசா: ''ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், காங்., முன்னாள் தலைவர், ராகுலின் பேச்சை, தங்களுக்கு சாதகமாக பாக்., பயன்படுத்திக் கொள்கிறது. இதற்காக, காங்., வெட்கப்பட வேண்டும்,'' என, பா.ஜ., தலைவர், அமித் ஷா, ஆவேசமாக கூறினார்.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் நீக்கப்பட்டது. இதற்கு பாக்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, ஐ.நா.,வில் சமீபத்தில் பாக்., மனு கொடுத்துள்ளது. அதில், காங்., முன்னாள் தலைவர், ராகுலின் பேச்சையும், பாக்., குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், டாமன் மற்றும் டயூ யூனியன் பிரதேசத்தில் நேற்று நடந்த, பா.ஜ., கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தலைவருமான, அமித் ஷா பேசியதாவது: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியல் சாசனத்தின், 370வது பிரிவை நீக்கியதற்காக, பிரதமர் மோடியை, இந்த நாடே பாராட்டுகிறது. ஆனால், ஒரு சிலர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்., முன்னாள் தலைவர் ராகுல் கூறிய கருத்துகளை, தனக்கு சாதகமாக, பாக்., பயன்படுத்துகிறது. அவருடைய பேச்சை, பாக்., மட்டுமே பாராட்டும். அவருடைய பேச்சுகளுக்கு, காங்., கட்சி வெட்கப்பட வேண்டும்.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு - காஷ்மீரில் ஒரு தோட்டா கூட பாயவில்லை. அங்கு முழு அமைதி நிலவி வருகிறது. நாட்டுடன் முழுமையாக இணைந்துள்ளது. இயல்பு நிலை விரைவில் முழுவதுமாக திரும்பும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X