காஷ்மீரில் ஊடுருவல் முயற்சிகள் தவிடுபொடி; 8 மாதத்தில் 139 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Updated : செப் 03, 2019 | Added : செப் 01, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
காஷ்மீர், ஊடுருவல்,முயற்சி,தவிடுபொடி,8 மாதத்தில்,139 பயங்கரவாதிகள்,சுட்டுக் கொலை

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி, தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், காஷ்மீரில் குழப்பம் ஏற்படுத்த, பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அவர்களின் அனைத்து சதித் திட்டங்களையும், பாதுகாப்பு படையினர் தவிடுபொடியாக்கி வருகின்றனர். கடந்த எட்டு மாதங்களில், 139 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு, நம் அண்டை நாடான, பாக்., கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பல்வேறு சர்வதேச அமைப்புகளிலும், இந்த பிரச்னையை எழுப்பி வருகிறது. தொடர்ந்து, இந்த திட்டங்கள் தோல்வியடைவதால், பாக்., அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில், காஷ்மீரில் அமைதி ஏற்படுவதை தடுக்கும் வகையில், பாகிஸ்தானில் இருந்து, பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி அதிகரித்துள்ளதாக, பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.


சிறப்பு அந்தஸ்து:

இது குறித்து, ராணுவ உயரதிகாரிகள் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில், இந்தாண்டு ஜனவரி, 1 முதல், ஆக., 29 வரையில், எல்லையில் நடந்த சண்டை உட்பட பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில், 139 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தைச் சேர்ந்த, 29 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம், 5ம் தேதி சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அதன்பின் நடந்த சம்பவங்களில், ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து எல்லையைத் தாண்டி ஊடுருவும் முயற்சிகள், கடந்த சில மாதங்களாக குறைந்திருந்தன. ஆனால், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அது, அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து, ஊடுருவுவதற்காக, 350 பயங்கரவாதிகள் காத்து இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோல், 40 பயங்கர வாதிகள் ஊடுருவியுள்ளதாகவும் உளவு தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதிகரிப்பு:

கடந்த மாதத்தில், ஒவ்வொரு நாளும், ஊடுருவுவதற்கான முயற்சிகளை, பாக்., ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் மேற்கொண்டனர்; அவை முறியடிக்கப்பட்டன. எல்லையில், அத்துமீறி தாக்குதல் நடத்துவதும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


கட்டுப்பாடுகள் தளர்வு:

காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், மேலும் சில பகுதிகளில் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும், இயல்பு நிலை முழுவதுமாக திரும்பவில்லை. ஸ்ரீநகரில், 105 காவல் நிலையங்களில், 82 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 'மொபைல் போன், இன்டர்நெட்' வசதி தொடர்ந்து முடங்கி உள்ளது. இதற்கிடையே, 1999ல் நடந்த கார்கில் போருக்கு பின் அமைக்கப்பட்ட, 'பயர் அண்டு பியூரி கார்ப்ஸ்' என்ற அதிரடிப் படையின், 20வது ஆண்டு நிறுவன தினம், லடாக்கில் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


எல்லையில் பாக்., தாக்குதல்:

கட்டுப்பாடு எல்லை கோடு பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., தரப்பில் இருந்து, நேற்று திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், கட்டுப்பாடு எல்லை கோடு அமைந்துள்ள, பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில், ராணுவ தலைமை தளபதி, பிபின் ராவத், இரண்டு நாட்களாக முகாமிட்டிருந்தார். நம் படையினரின் ஆயத்த நிலை குறித்த ஆய்வை முடித்து, நேற்று முன்தினம் அவர் டில்லி திரும்பினார். இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில், கட்டுப்பாடு எல்லை கோடு பகுதியில், நேற்று மதியம், 1:00 மணியளவில், பாக்., படையினர் திடீர் தாக்குதல் துவக்கினர். சிறிய ரக பீரங்கி மற்றும் துப்பாக்கிகளை பயன்படுத்தி, அவர்கள் தாக்குதல் நடத்தினர். நம் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். ஜூலை மாதத்தில் இருந்து, பாக்., படையினர் அத்துமீறி அவ்வப்போது நடத்தி வரும் தாக்குதல்களில், இதுவரை, இந்திய வீரர்கள் ஐந்து பேர், 10 மாத குழந்தை உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். பாக்., தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல் இல்லை.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-செப்-201921:42:58 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா எல்லை தாண்டும் பயங்கரவாதிகளை கொல்வது மிக எளிது ஆனால் எல்லைக்குள்ளிருந்து எல்லை தாண்டும் பயங்கரவாதிகளை என்ன செய்வது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X