பொது செய்தி

தமிழ்நாடு

வரி செலுத்துவோரை துன்புறுத்தக் கூடாது; அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுரை

Updated : செப் 03, 2019 | Added : செப் 02, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
நிர்மலா சீதாராமன்,நிர்மலா,அதிகாரி, அறிவுரை,துன்புறுத்தக் கூடாது

சென்னை : ''வருவாய் இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் வரி செலுத்துவோரை துன்புறுத்தக் கூடாது'' என வரித் துறை அதிகாரிகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.

வருமான வரி ஜி.எஸ்.டி. மற்றும் சுங்க வரித் துறை அதிகாரிகள் மற்றும் வணிகர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பின் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: வரித்துறை அதிகாரிகளுடன் ஆறாவது ஆலோசனை கூட்டம் தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளது. வரி செலுத்துவோருக்கு தேவையான வசதிகளை அதிகாரிகள் செய்து தர வேண்டும் என்பதே இந்த கூட்டத்தின் நோக்கம். வருவாயை பெருக்குவதற்கும் வரி வசூல் இலக்கை அடைவதற்கும் வரி செலுத்துவோரை அதிகாரிகள் துன்புறுத்தவோ; அழுத்தம் தரவோ கூடாது.

வாகன உற்பத்திக்கான ஜி.எஸ்.டி.யை குறைப்பது குறித்து அதன் கவுன்சில் முடிவெடுக்கும்; அதற்கு மத்திய நிதித் துறை சார்பில் பரிந்துரை செய்யப்படும். வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளதால் 1 சதவீதம் கூட அதிகாரிகள் ஊழியர்கள் வேலை இழப்புகள் இருக்காது; எந்த வங்கிகளும் மூடப்படாது. வங்கிகள் மூடப்படும் என்பது தவறான தகவல். ஏற்கனவே வங்கிகளை இணைத்தபோதும் ஒருவருக்கு கூட வேலை இழப்பு ஏற்படவில்லை.

பொருளாதார பின்னடைவால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்திருப்பதாக கூறுவதற்கு எந்த புள்ளி விபரமும் இல்லை. அமைப்பு ரீதியிலான துறைகளில் வேலை செய்வோர் குறித்த புள்ளி விபரம் உள்ளது. ஆனால் சிறு குறு நிறுவனங்கள் போன்ற அமைப்புசாரா தொழில்களில் எத்தனை பேர் வேலை செய்கின்றனர் என்பதற்கான ஆவணங்கள் இல்லை. இந்த ஆவணங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாகன உற்பத்தி வீழ்ச்சிக்கான காரணங்கள் குறித்து துறை நிறுவனங்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இது மட்டுமின்றி அனைத்து துறையைச் சேர்ந்த நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. அவர்கள் வழங்கும் தகவல்களை அரசுக்கு அனுப்பி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொருளாதார வீழ்ச்சி குறித்து அனைத்து துறைகளுடனும் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை கூட்டத்தில் மத்திய வருவாய்த் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே நேரடி வரி விதிப்பு வாரிய தலைவர் பி.சி.மோடி மத்திய மறைமுக மற்றும் சுங்க வரி வாரிய தலைவர் பி.கே.தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.


'தொழிற்துறையினர் கோரிக்கைகளை நிறைவேற்ற தயார்'

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: வங்கிகளை இணைக்கும் போது அருகருகே ஏராளமான கிளைகள் இருந்தால் அவற்றை உடனடியாக இணைக்க மாட்டோம். வங்கி கிளைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தால் அவை அப்படியே செயல்படும். வங்கிகள் இணையும் போது இருக்கும் இடத்திலிருந்து இல்லாத இடத்திற்கு பணத்தை நகர்த்துகிறோம். இவ்வாறு செய்வதால் அதிக கடன் வழங்க முடியும். தொழில் வளம் பெருகும்; வங்கிகளுக்கு லாபம் பெருகும். இதை மனதில் வைத்தே பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைக்க திட்டமிடப் பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் பிரச்னை உள்ள துறைகளை சேர்ந்தவர்களை சந்தித்து வருகிறேன். அவர்கள் கோரும் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. எல்லா துறைகளுக்கும் ஒரே தீர்வு பொருந்தாது. தொழில் வளர்ச்சிக்கு தேவையானவற்றை தொழில் துறையினர் கேட்டால் அவற்றை செய்து தர மத்திய அரசு தயாராக இருக்கிறது. அப்போது துறைகள் இயல்பாக முன்னேற்றம் அடையும். இந்திய ரிசர்வ் வங்கி வழங்க உள்ள 1.76 லட்சம் கோடி ரூபாயை பயன்படுத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மத்திய அரசு எடுத்து வரும் பொருளாதார நடவடிக்கைகளின் பலனை மக்களிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
02-செப்-201923:18:48 IST Report Abuse
Girija யாருக்காவது தைரியம் இருக்கா ? சுவாமி சொன்னதை "ஜெட்லீ. பியூஸ், நிர்மலா அவர்களுக்கெல்லாம் பொருளாதாரம் தெரியாது " குறித்து நிர்மலாவிடம் கேட்க யாருக்கு தைரியம் இருக்கு?
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
02-செப்-201914:38:03 IST Report Abuse
J.Isaac யானை வேளாண்மைக்குள் நுழைந்திருக்கிறது
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
02-செப்-201913:52:57 IST Report Abuse
J.Isaac நன்றாக இருக்கிற பிளக் டாப்பிங் சாலையை வொயிட் சாலையாக மாற்ற கி.மீக்கு பதிணான்கு கோடி ரூபாய் கான்டிராக்ட் கொடுத்து மக்கள் வரி பணத்தை வீணடிப்பது பொருளாதார வளர்ச்சியை கொடுக்குமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X