அமெரிக்கா சென்றார் முதல்வர் பழனிசாமி

Updated : செப் 03, 2019 | Added : செப் 02, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
அமெரிக்கா,முதல்வர்,பழனிசாமி

லண்டன்: பிரிட்டனில் சுற்றுப்பயணத்தை முடித்த, முதல்வர், இ.பி.எஸ்., அங்கிருந்தபடி அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில், ஆறு நாட்கள் தங்கும் அவர், தொழில் நிறுவனங்களை பார்வையிடுவதோடு, தொழில் முனைவோர்களையும் சந்திக்கிறார்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர், பழனிசாமி ஆகஸ்ட், 28ல், பிரிட்டன் சென்றார். அங்கு, லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனை, ஆம்புலன்ஸ் சேவை செயல்பாடுகளை பார்வையிட்டார். தொழில்முனைவோர்களிடம் பேச்சு நடத்தி, புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார். இதையடுத்து, பிரிட்டனில் இருந்து நேற்றிரவு, அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு, முதல்வர் புறப்பட்டுச் சென்றார். அங்கு, அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிகளை, சந்திக்க உள்ளார். அமெரிக்க வாழ் தமிழர்களிடம் கலந்துரையாட உள்ளார்.

சான் பிரான்ஸ்கோ நகரில் இயங்கும், சிறந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன், முதல்வர் பேச்சு நடத்த உள்ளார். சேலம் தலைவாசலில் அமையவுள்ள, கால்நடை பூங்காவிற்கு தேவைப்படும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள, கலிபோர்னியா நகரில் உள்ள, கால்நடை பண்ணைகளையும், முதல்வர் பார்வையிட உள்ளார். புதுப்பிக்கத்த எரிசக்தி தொடர்பாக, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள,'ப்ளூம் எனர்ஜி' நிறுவனத்தையும் பார்வையிடுகிறார்.

தொடர்ந்து, ஆறு நாட்கள் அமெரிக்காவில் முகாமிடும் முதல்வர், வரும், 7ம் தேதி அங்கிருந்து, துபாய் செல்ல உள்ளார். முதல்வர் பங்கேற்கும், தொழில் முனைவோர்கள் சந்திப்பு கூட்டங்களில் பங்கேற்பதற்காக, அமைச்சர்கள் சம்பத், உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலர், சண்முகம், முதல்வரின் உதவியாளர், கிரிதரன் உள்ளிட்டோர் ஏற்கனவே, அமெரிக்கா சென்றுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
02-செப்-201923:11:13 IST Report Abuse
Girija பஞ்சாயத்து எலெக்டினுக்கு இந்த அமெரிக்க வீடியோ முக்கியம் . " எரியுதே எரியுதே நீ செய்யும் வேலைகளாலே? நெஞ்சு எரியுதா? வயிறு எரியுதா? அதுக்குத்தானே போட்டேன் இந்த டூரை ரொம்ப நாளா . (உருகுதே உருகுதே பாட்டு மெட்டு)
Rate this:
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
02-செப்-201918:26:10 IST Report Abuse
Babu அப்ப,கூடிய விரைவில் அரசு மருத்துவமனையிலும், முனிசிபாலிட்டிகளிலும், அரசு போக்குவரத்து துறையிலும் நவீனங்களை எதிர்பார்க்கலாம்!!! டூரு அதுக்குத்தானுங்களே?
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
02-செப்-201915:35:50 IST Report Abuse
Endrum Indian ஐயோ பாவம் இந்த சாக்குலேயாவது ஏதோ வெளிநாடு சுற்றினால் சரி??????ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லே இந்த வெளிநாட்டு சுற்றுலாவால் டாஸ்மாக் நாட்டுக்கு என்று பிறகு தெரியவரும். இலவசம் என்று சொல்லி பல்லாயிரம் கோடி வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட் செய்கின்றார்கள் அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை, அப்படி நினைக்கத்தோன்றுகின்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X