அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தமிழிசையின் உயர்வு மகிழ்ச்சி தருகிறது'

Updated : செப் 03, 2019 | Added : செப் 02, 2019 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை: ''உழைப்பாலும், ஆற்றலாலும் தமிழிசை உயர்வு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என, தமிழிசையின் தந்தையும், காங்., மூத்த தலைவருமான, குமரி அனந்தன் தெரிவித்தார்.தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, அவரது தந்தையும், தமிழக காங்., மூத்த தலைவருமான, குமரி அனந்தன் கூறுகையில், ''தமிழிசை உழைப்பாலும்,
தமிழிசை,உயர்வு,மகிழ்ச்சி

சென்னை: ''உழைப்பாலும், ஆற்றலாலும் தமிழிசை உயர்வு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என, தமிழிசையின் தந்தையும், காங்., மூத்த தலைவருமான, குமரி அனந்தன் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, அவரது தந்தையும், தமிழக காங்., மூத்த தலைவருமான, குமரி அனந்தன் கூறுகையில், ''தமிழிசை உழைப்பாலும், ஆற்றலாலும், கவர்னர் என்ற நிலைக்கு உயர்வு பெற்றிருப்பது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வேறு எதுவும் சொல்வதற்கில்லை,'' என்றார்.

தி.மு.க., தலைவர், ஸ்டாலின்: பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்திலிருந்து, தெலுங்கானா மாநில கவர்னராக பொறுப்பேற்கும் தமிழிசைக்கு வாழ்த்துக்கள். அடித்தட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளை, எந்நாளும் அவர் பாதுகாப்பார் என, நம்புகிறேன்.

தமிழக காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி: தமிழிசையை வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன். கொள்கை ரீதியாக கடுமையான கருத்து வேறுபாடுகளுக்கு இடையில், மிகுந்த நாகரிகத்தோடு, கருத்து மோதல்களை நடத்தியவர் தமிழிசை. அவருக்கு கவர்னர் பதவி அளித்திருப்பது மிகவும் பொருத்தம்.

பா.ஜ.,வை சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன்: ஐந்து ஆண்டுகளாக, தமிழக பா.ஜ., தலைவராக தமிழிசை சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவரது சேவையை பாராட்டி, தெலுங்கானா கவர்னர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: கடுமையான உழைப்பாளி. எத்தனை அவதுாறுகள் அவர் மீது பரப்பப்பட்டாலும், அதை பொருட்படுத்தாமல், தன் கடமையில் கண்ணும், கருத்துமாக செயல்பட்டதற்கு, கவர்னர் பதவி பரிசாக கிடைத்துள்ளது.

த.மா.கா., தலைவர் வாசன்: மக்கள் வழி, இயக்க பணி என, இரண்டுக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுத்து, மிகப்பெரிய அளவில், மக்கள் பணியாற்றி வருபவர் தமிழிசை. மத்திய அரசின் திட்டங்கள், நகரம் முதல் கிராமம் வரை சென்றடைய, பணியாற்றி வருகிறார். அவரது கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது; வாழ்த்துக்கள்.

தி.மு.க., மாநில மகளிரணி செயலர், கனிமொழி: சுழன்று பணியாற்றியவர் தமிழிசை. அவர், தெலுங்கானா மக்களுக்காக சிறப்பாக பணியாற்றுவார் என, நம்புகிறேன். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

லண்டன் சென்றுள்ள முதல்வர், இ.பி.எஸ்., தொலைபேசி வழியாக, தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தார். துணை முதல்வர், பன்னீர்செல்வமும், தொலைபேசியில் வாழ்த்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
03-செப்-201909:19:42 IST Report Abuse
oce அன்றைய காங்கிரஸில் குமரி அனந்தன் ஒரு தலை சிறந்த பேச்சாளர். அன்றைய தமிழக காங்கிரஸில் இருந்தவர்களில் தமிழை அழகானா திருத்தமான உச்சரிப்பில் மேடைகளில் கொண்டு வந்தவர். தமிழின் மீதுள்ள பறறினால் தன் மகளுக்கும் அதே பெயரை சூட்டியுள்ளார். வாழ்க அன்னாரின் தமிழ் தொண்டு.
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
03-செப்-201909:11:04 IST Report Abuse
oce உனதின்னா மட்டும் பெரிசா பீத்திக்க. ஒண்ணுமில்ல
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
03-செப்-201901:09:43 IST Report Abuse
.Dr.A.Joseph பொதுவாக பொதுத் தேர்தல்களில் பொதுமக்களால் நிராகரிக்கப் படுபவர்களுக்கு அரசியல் கட்சிகள் அரசு பதவி அளிப்பது கேவலமான முன்னுதாரணம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X