சந்திரயான் 2 லேண்டர் தனியாக பிரிந்தது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சந்திரயான் 2 லேண்டர் தனியாக பிரிந்தது

Updated : செப் 02, 2019 | Added : செப் 02, 2019 | கருத்துகள் (8)
Share
புதுடில்லி : சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து லேண்டர் 'விக்ரம்' வெற்றிகரமாக தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான் 2 விண்கலத்தை ஜூலை 22 ம் தேதி விண்ணில் ஏவியது. நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தின் முக்கிய பாகமான விக்ரம் என பெயரிடப்பட்ட லேண்டரை தனியாக பிரிப்பதற்காக சந்திரயான் 2 விண்கலத்தின் வேகம்

புதுடில்லி : சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து லேண்டர் 'விக்ரம்' வெற்றிகரமாக தனியாக பிரிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான் 2 விண்கலத்தை ஜூலை 22 ம் தேதி விண்ணில் ஏவியது. நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தின் முக்கிய பாகமான விக்ரம் என பெயரிடப்பட்ட லேண்டரை தனியாக பிரிப்பதற்காக சந்திரயான் 2 விண்கலத்தின் வேகம் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.


latest tamil news



இந்நிலையில், மிக சவாலானதாக கருதப்பட்ட லேண்டரை சந்திரயான் 2 ல் இருந்தும் பிரிக்கும் பணியை இன்று (செப்.,02) பிற்பகல் 1.16 மணிக்கு மேற்கொண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்த சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர் விக்ரம், செப்.,7 அன்று நிலவின் தெற்கு பகுதியில் தரையிறங்கும்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X