பொது செய்தி

இந்தியா

8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி கடும் சரிவு

Updated : செப் 02, 2019 | Added : செப் 02, 2019 | கருத்துகள் (66)
Advertisement

புதுடில்லி: நாட்டில் மின்சாரம், நிலக்கரி உள்ளிட்ட, 8 முக்கிய துறைகளின் உற்பத்தி வளர்ச்சி கடும் சரிவை சந்தித்துள்ளது.






இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்சாரம், சிமெண்ட், உரம், சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் எஃகு ஆகிய துறைகளின் உற்பத்தி வளர்ச்சி கடும் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முக்கிய துறைகளின் உற்பத்தி வளர்ச்சி கடந்த 2018, ஜூலையில் 7.3 சதவீதமாக இருந்தது. இந்தாண்டில் இத்துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 2.1 சதவீதமாக குறைந்துள்ளது.





குறிப்பாக, நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் சுத்திகரிப்பு பொருட்கள், ஜூலை மாதத்தில் எதிர்மறையான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இத்துறைகளின் வளர்ச்சி கடந்த 2018 ஏப்ரல் - ஜூலை மாதங்களில் 5.9 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்த நிலையில், 2019 ஏப்ரல் - ஜூலை மாதங்களில், 3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-செப்-201916:54:47 IST Report Abuse
ஆப்பு இதுவரை வளர்ச்சி குறைவுக்கு காரணம் நேத்தி வரைக்கும் ஆண்ட காங்கிரஸ் தான் காரணம்னு ஜல்லியடிச்சாங்க. இண்ணைக்கு அப்பிடி சொல்ல முடியாது. அதான் சீனா மேல, உலகப் பொருளாதாரம்னு சொல்லி சமாளிக்கப் பாக்குறாங்க. ஆட்சிய புடிக்கறது வேறே, பொருளாதாரத்தை மேம்படுத்தறது வேற.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
03-செப்-201916:54:17 IST Report Abuse
Endrum Indian மிக மிக எளிதான ஒரு தேடல் இந்த வரைமுறை. எதனால் இது நிகழ்ந்தது. ஒரு வரியில் சொன்னால் 1) Uber, Ola 2) Amazon, Flipkart 3) Swiggi, Zomato ??? ஏன்?? உ.ம். உபேர் டிரைவர்கள் = 18 மணி நேரம் பணி. அதாவது 18 பேர்கள் (1 மணிநேரம் = ஒரு பயணம்) கார் வாங்கியிருந்தால் ஒரு முறை ஆபீஸ் போய் அங்கே பார்க் செய்து விட்டு 8 மணிநேரம் வேலை செய்து விட்டு மீண்டும் ஒரு மணிநேரம் பயணமா செய்து வீட்டுக்கு வருவார்கள். அதாவது 18 பேர் வாங்க வேண்டிய கார் ஒரு ஊபேரினால் நிறுத்தப்பட்டது. இப்பொழுது எவ்வளவு உபேர் ஓலா இந்த கடந்த நான்கு வருடங்களில் பெருகியிருக்கின்றது என்று பாருங்கள். அதற்கு உபயோகித்த ஸ்டீல் எவ்வளவு??? அந்த ஸ்டீல் தயாரிக்க இரும்பு கனிமத்திலிருந்து கரி உபயோகம் எவ்வளவு ........இப்படி தீர் ஆராய்ந்தால் இந்த நாலு வருட உபேர் , அமேசான் , ஸ்விக்கி பெருகியது எவ்வ்ளவு என்று பாருங்கள். இந்த விளைவு தான் அது. நீங்கள் கார், பைக் ஊடுபவராக இருந்தால் 5 வருடத்திற்கு முன் நீங்கள் பயணம் செய்யும் பொது உங்களுடன் வண்டிகளின் அளவு என்ன இன்று உங்களுடன் வரும் வண்டிகளின் எண்ணிக்கை என்ன நன்கு யோசியுங்கள் இன்று எந்த புறம் சென்றாலும் உங்கள் அருகே எப்போதும் உபேர் , ஸ்விக்கி வண்டியோட்டிகளே மிக மிக அதிகம். ஆகவே நம்முடைய SQC- Statistical Quality Control வல்லுநர்கள் என்ன செய்தார்கள் 4 வருடத்திற்கு முன்பு உபேர் , ஸ்விக்கியால் திடீரென்று பெருகிய அந்த வண்டிகளின் எண்ணிக்கையை கொண்டு ஆட்டோ தொழில் பெருகும், எக்கு தொழில் பெருகும் என்று நீட்டி முழக்கி ஸ்டாட்டிஸ்டிக்ஸ் செய்தார்கள் அது இப்போது படுத்துவிட்டது??அவர்கள் பார்க்க வேண்டியது 7-8-9- வருடத்திற்கு முந்திய நிலை என்ன ஒரு சிறு சதவிகிதம் முறையில் இன்றைய ஆட்டோ, ஸ்டீல், கரி எந்த அளவு பெருகியிருக்கின்றது என்று பார்த்தால் ஒரே நேர் விகிதத்தில் தான் selkindratu. ஆய்வு நடத்துங்கள் உங்களுக்கு நிச்சயம் அது புரியும் . ஆகவே கவலை கொள்ளவேண்டாம் எல்லாம் நல்ல வழியில் தான் செல்கின்றது, இல்லையென்றால் 10 வருட முன் மனிதராக இன்று மாறுங்கள் இல்லை அமேசான் , ஸ்விக்கி , உபேர் தான் எனக்கு பிடித்தது என்றால் நாடு நாசமடையும் எல்லா விதங்களிலும், அதற்குத்தயாராக இருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Mohamed Riswan - chennai,இந்தியா
03-செப்-201915:26:28 IST Report Abuse
Mohamed Riswan உரம் மற்றும் மின் உற்பத்தி பாதிப்பு உடனடியாக சரி செய்யப்படவேண்டிய ஒன்று.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X