பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருது

Updated : செப் 02, 2019 | Added : செப் 02, 2019 | கருத்துகள் (39)
Share
புதுடில்லி: தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய பிரதமர் மோடிக்கு, அமெரிக்காவின் பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் உயரிய விருது வழங்கப்பட உள்ளது.மக்களின் ஆரோக்கியம் மற்றும் நாட்டின் சுகாதார மேம்பாட்டிற்காக ‛துாய்மை இந்தியா' திட்டத்தை, கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அனைத்து மக்களுக்கும் கழிப்பிட வசதி செய்து கொடுப்பது,

புதுடில்லி: தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய பிரதமர் மோடிக்கு, அமெரிக்காவின் பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் உயரிய விருது வழங்கப்பட உள்ளது.



latest tamil news



மக்களின் ஆரோக்கியம் மற்றும் நாட்டின் சுகாதார மேம்பாட்டிற்காக ‛துாய்மை இந்தியா' திட்டத்தை, கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அனைத்து மக்களுக்கும் கழிப்பிட வசதி செய்து கொடுப்பது, கிராமங்கள் மற்றும் நகரங்களை துாய்மையாக பராமரிப்பது போன்றவை இந்த திட்டத்தின் நோக்கம்.


latest tamil news



இந்நிலையில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு, அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்பட உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபரும், உலகின் மிகப்பெரும் செல்வந்தர்களுல் ஒருவருமான பில்கேட்ஸின், 'பில் - மெலின்டா கேட்ஸ்' தொண்டு நிறுவனம் விருது வழங்க உள்ளது. ஐ.நா., கூட்டத்தில் கலந்து கொள்ள இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு, அங்கு விருது வழங்கப்பட உள்ளது. இதனை பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் ஜித்தேந்திரா சிங், டுவிட்டரில் உறுதி செய்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X