ராகுல், சோனியா சிறை செல்வார்கள்: சுப்பிரமணியன் சாமி

Updated : செப் 02, 2019 | Added : செப் 02, 2019 | கருத்துகள் (51)
Advertisement

திருநெல்வேலி: சிதம்பரத்தை தொடர்ந்து காங்., கட்சி தலைவர் சோனியாவும், ராகுலும் சிறை செல்வார்கள் என சுப்பிரமணியன் சாமி தெரிவித்தார்.






பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தமது 80வது பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள சித்திவிநாயகர் கோயிலில் இன்று(செப்.,2) சிறப்பு பூஜை மேற்கொண்டார். திருநெல்வேலியில் அவர் அளித்த பேட்டி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அனுமதியை பெறவும், பாகிஸ்தான் பிடியில் இருந்து காஷ்மீரை முழுமையாக கைப்பற்றவும் பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, திருச்செந்துார் சுப்பிரமணியசாமி கோவிலில் தரிசனம் செய்ய செல்கிறேன்.


பொருளாதார சரிவு ஏற்படும்:

பொருளாதார மந்த நிலையை மாற்ற, மக்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படவேண்டும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எடுத்த தவறான முடிவுகள், தற்போதைய பொருளாதார சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது. முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பொருளாதாரம் தெரியாது. தற்போது பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோருக்கும் பொருளாதாரம் தெரியாது. இவர்களால் சரிந்து உள்ள இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த நான்கு, ஐந்து மாதங்களில் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.






சிதம்பரத்துக்கு 20 ஆண்டு சிறை:

திகார் ஜெயிலுக்கு செல்ல சிதம்பரம் பயப்படுகிறார். வீட்டுக்காவலில் வைக்க கெஞ்சுகிறார். அவர் மீது ஏழு ஊழல் வழக்குகள் உள்ளன. அவரது ஊழல்களுக்கு, 20 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். அவரது மகனும் ஊழலில் ஈடுபட்டுள்ளார். சிதம்பரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல், சோனியா, காங்கிரஸ் ஆட்சியில் மாநிலங்களின் முதல்வர்கள், ஜெயிலுக்கு போகும் நிலை ஏற்படும். திகார் ஜெயிலில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தை நடத்தும் நிலை ஏற்படும்.

தமிழகத்தில் பா.ஜ.,வை வளர்க்க வேண்டுமானால், எதிர்வரும் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி தனித்து போட்டியிட வேண்டும். ஐந்து தொகுதிகளுக்காக மற்ற கட்சிகளிடம் பிச்சை பெறும் நிலையை மாற்றவேண்டும். அப்போதுதான் கட்சி வளரும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்திர லேகா உடனிருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-செப்-201911:22:18 IST Report Abuse
Malick Raja இவர் உள்ளே செல்ல இருப்பதை அறியாமல் பிதற்றுவதுதான் வேடிக்கை ..
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
09-செப்-201916:58:03 IST Report Abuse
s.rajagopalanநீதான்யா பிதற்றுகிறாய் அவரை யாரும் தொட மாட்டார்கள். கோடி வாட்ஸ் மின்சாரம் அவர் அவ்வளவு சரக்கு அவர் கையில் இருக்கிறது. தி மு க காரங்கள் அவர் பற்றி வாய் திறக்கிறாங்களா ? ஏன் ?...
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
04-செப்-201908:17:05 IST Report Abuse
skv srinivasankrishnaveni திரு சுவாமி சொல்றது கரெக்டுங்க பிஜேபி அதிமுக உடனே கூட்டணி என்றதும் நான் ரொம்பவே வருத்தம் ஆனேன், திமுக அண்ட் அதிமுக ரெண்டுமே ஊழல்களில் திளைத்து கொடியே சொத்துசேர்த்துட்ட கட்சிகள்தான் தெரிஞ்சே சாக்கடையே வீழ்ந்ததுபோல என்று நான் குமுறினேன் வெறும் ஓட்டுப்போடும் பிரஜை நான் என்னால் என்ன செய்யமுடியும்
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
04-செப்-201905:27:23 IST Report Abuse
meenakshisundaram இதை விட முக்கியம் முக குடும்பமே சிறை செல்ல வேண்டியது ,இதுக்கு ஏதாவது வழி பண்ணுவதே முக்கியம் .அத விட்டு ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X