பொது செய்தி

இந்தியா

அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் சேர்ப்பு

Updated : செப் 02, 2019 | Added : செப் 02, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி : அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, அப்பாச்சி ரகத்தைச் சேர்ந்த எட்டு ஹெலிகாப்டர்கள், நாளை(செப்.,3) இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட உள்ளன.அதி நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய, தாக்குதல் வகையைச் சேர்ந்த, ஏ.எச்., - 64இ என்ற, அப்பாச்சி ரக ஹெலிகாப்டர், அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. தற்போது, உலகில் உள்ள, அதி நவீன, தாக்குதல் திறன் உடைய ஹெலிகாப்டர்களில்,

புதுடில்லி : அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, அப்பாச்சி ரகத்தைச் சேர்ந்த எட்டு ஹெலிகாப்டர்கள், நாளை(செப்.,3) இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட உள்ளன.



latest tamil news



அதி நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய, தாக்குதல் வகையைச் சேர்ந்த, ஏ.எச்., - 64இ என்ற, அப்பாச்சி ரக ஹெலிகாப்டர், அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. தற்போது, உலகில் உள்ள, அதி நவீன, தாக்குதல் திறன் உடைய ஹெலிகாப்டர்களில், இது தான், முதலிடத்தில் உள்ளது.


latest tamil news



அமெரிக்காவிடமிருந்து, 22 ஹெலிகாப்டர்களை வாங்க, மத்திய அரசு, 2015ல் ஒப்பந்தம் செய்தது. முதல் கட்டமாக, சில ஹெலிகாப்டர்கள் மட்டும், ஜூலையில், இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, பஞ்சாப் மாநிலம், பதான் கோட்டில் உள்ள விமானப் படை தளத்தில், எட்டு ஹெலிகாப்டர்கள், நாளை, இந்திய ராணுவத்தில் முறைப்படி சேர்க்கப்படுகின்றன. இந்த விழாவில், விமானப் படை தளதிபதி, பி.எஸ்.தனோவா பங்கேற்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
03-செப்-201911:39:47 IST Report Abuse
Lion Drsekar முதல் சோதனையை எங்கள் தமிழகத்தில் தலை நிமிர்ந்து நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டு இருக்கும், யு டியூபில் தங்களது படைப்பினை போட்டுக்கொண்டு வரும் வெறியர்கள் மற்றும் அவர்கள் முகாம்களில் போட்டு பரிசோதனை செய்வது நல்லது, சமூக விரோதிகளுன் அழிவார்கள், நடக்காது இருந்தாலும் நமக்கு நாமே ஆறுதல் , வேறு வழி இல்லை, வந்தே மாதரம்
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
03-செப்-201910:58:14 IST Report Abuse
சீனி நல்ல செய்தி. பொன்விழா காணும் ராணுவத்திற்க்கும் விமானப்படைக்கும் வாழ்த்துக்கள் ரபேல் வந்தப்புறம் தான் பக்கிகள் எல்லையில் வாலாட்டுவது நிற்க்கும்.
Rate this:
Cancel
Krish - Chennai ,இந்தியா
03-செப்-201907:43:02 IST Report Abuse
Krish இந்தியா ராணுவம் நவீனமாக மாறுகிறது. தொழில் நுட்பங்களை கற்று அறிந்து உள்ளூரிலும் தயாரிக்க பார்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X