பொது செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை எப்போது? பணிமூன்று மாதத்தில் துவங்கும் என அதிகாரிகள் உறுதி

Added : செப் 02, 2019
Share
Advertisement
உடுமலை:பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பணி, மூன்றுமாதத்தில் துவங்கும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) மூலம், பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்., 83), 136 கி.மீ., நீளம் உள்ள ரோடு, 2,500 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது.தேசிய நெடுஞ்சாலையில், பிரதான ரோடுகளான, மாநில, மாவட்ட சாலைகள் இணையும் பகுதியில், 60

உடுமலை:பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பணி, மூன்றுமாதத்தில் துவங்கும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) மூலம், பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்., 83), 136 கி.மீ., நீளம் உள்ள ரோடு, 2,500 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலையில், பிரதான ரோடுகளான, மாநில, மாவட்ட சாலைகள் இணையும் பகுதியில், 60 இடங்களில், சுரங்க மற்றும் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படுகின்றன.அமராவதி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலமும், உடுமலை நகருக்கு, தற்போதுள்ள ரோட்டுடன், புதிதாக ஒரு ரோடு அமைகிறது.இதற்கான அணுகுச்சாலைகள், மூணாறு ரோடு, ஆனைமலை ரோடு, திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடு என ரோடுகளை, புற நகரப்பகுதியிலேயே, இணைக்கும் வகையில் ரோடுகள் அமைகின்றன. புதிதாக அமையவுள்ள ரோட்டிலிருந்து, நகர பகுதிக்குள் வரவும், இணைப்பு ரோடுகள் அமைக்கப்படுகிறது.
இதற்காக, ரோட்டின் இருபுறமும், 2,429 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிட்டு, சர்வே பணிகளும், நிலத்திற்கான இழப்பீடு, நிலைப்பயிர்கள், கிணறு, போர்வெல் மற்றும் கட்டடங்களுக்கு மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும் பணி நடந்து வருகிறது.திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம், ஒட்டன்சத்திரம் - மடத்துக்குளம், மடத்துக்குளம் - பொள்ளாச்சி என, மூன்று பகுதிகளாக பிரித்து பணிகள் நடக்க உள்ளன.
ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவன ஊழியர்கள், மண் ஆய்வு, போக்குவரத்து சர்வே உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து பணிகளும் நிறைவு பெற்று, மூன்று மாதத்தில், தேசிய நெடுஞ்சாலை பணி துவங்கும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.இழப்பீடு வழங்கும் பணி தீவிரம்'நகாய்' அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு டெண்டர் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரை, எடுக்கப்படும் நிலங்களுக்கான மதிப்பீடு நிர்ணயித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடுமலையில், இரு கிராமங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரு மாதத்தில், முழுமையாக நிலம் எடுப்புக்கான இழப்பீடு தொகை வழங்கும் பணி நிறைவு பெறும். தற்போது, ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் ஆரம்ப கட்ட பணிகளை துவக்கியுள்ளது. மூன்று மாதத்தில், நான்கு வழிச்சாலை பணிகள் துவங்கும்', என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X