லஞ்ச ஒழிப்பில் குறை; விழிக்குமா துறை? - 'பார்' ஓனருடன் கைநனைத்த போலீசை பார்!

Updated : செப் 03, 2019 | Added : செப் 03, 2019 | |
Advertisement
'கணபதியே வருவாய்....' என, பல இடங்களி்ல் ஒலி பெருக்கி முழங்க, வாழைக்கம்பம், மாவிலை தோரணம், பறையிசை என, விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டி கொண்டிருந்தது.சித்ராவின் தெருவிலுள்ள விநாயகர் கோவிலுக்கு செல்ல, மித்ராவும் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தாள்.''பரவாயில்லையே மித்து. சொன்னபடி சரியான நேரத்துக்கு வந்துட்டியே'' என சிரித்தாள் சித்ரா.''அக்கா... இங்கே ரோடு
லஞ்ச ஒழிப்பில் குறை; விழிக்குமா துறை? -  'பார்' ஓனருடன் கைநனைத்த போலீசை பார்!

'கணபதியே வருவாய்....' என, பல இடங்களி்ல் ஒலி பெருக்கி முழங்க, வாழைக்கம்பம், மாவிலை தோரணம், பறையிசை என, விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டி கொண்டிருந்தது.சித்ராவின் தெருவிலுள்ள விநாயகர் கோவிலுக்கு செல்ல, மித்ராவும் சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தாள்.''பரவாயில்லையே மித்து. சொன்னபடி சரியான நேரத்துக்கு வந்துட்டியே'' என சிரித்தாள் சித்ரா.
''அக்கா... இங்கே ரோடு நல்லாருக்குது. சீக்கிரமா வந்துட்டேன். ஆனால், அங்கே என்ன காரணத்துக்காக, ரோடு போடாம இருக்காங்கன்னு தெரியலையே'' என்றாள்.''ரோடு போடறதுனா, அதிகாரிகளுக்கு கொள்ளை பிரியமாச்சே. அதுல என்ன பிரச்னை''''அதுதான் யாருக்குமே தெரியலை. அவிநாசிக்கு பக்கத்தில், புலிப்பார் கிராமத்தில், மழையால சேதமான ரோட்டை சீரமைக்க சொல்லி, அப்பகுதி மக்கள் பல இடங்களில், பலமுறை மனு கொடுத்தாங்க''''கலெக்டரும் உடனே ரோடு போடுங்கனு ஆர்டரும் போட்டுட்டாரு.
இருந்தாலும், டி.ஆர்.டி.ஏ.,வுல இருந்து 'பைல்' மூவ் ஆகாம நிற்குதாம். அதுக்கு என்னதான் செய்யனும்னு தெரியாம, மக்கள் ஒரு வருஷமா அலைஞ்சுட்டே இருக்காங்காக்கா''''ஒருவேளை 'மேட்டர்' கொடுத்தாதான், பைல் மூவ் ஆகும்போல... அப்ப கலெக்டர் ஆர்டருக்கு மரியாதை இவ்வளவுதானா மித்து?'' பேசிக்கொண்ட இருவரும், கோவிலுக்குள் நுழைந்தனர்.
விநாயகருக்கு நடக்கும் அபிேஷகத்தை காண பக்தர்கள் கூட்டம் முண்டியடித்தது. ''அந்த மண்டபத்தில் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணலாம்க்கா...''மித்ரா சொன்னதும், சித்ராவும் சென்று அமர்ந்தாள்.''அக்கா... கண்டிஷன் பட்டாவை, கட்சிக்காரங்க 'கரெக்ட்' பண்ணிய விஷயம் தெரியுமா?''''அடி... இது எங்க நடந்தது?''''நெருப்பெரிச்சல் கிராமத்துல, சிலருக்க 'கண்டிஷன்' பட்டா கொடுத்திருங்காங்க. ரியல் எஸ்டேட் ஆசாமிங்க உள்ளே புகுந்து, அதனை விலைக்கு வாங்கிட்டாங்க. அதிகாரி உத்தரவுப்படி, 'கண்டிஷன்' பட்டாவை ஏற்கனவே ரத்து பண்ணிட்டாங்க,''''இருந்தாலும், 'மாமூல்' அதிகாரிகளை 'வளைச்சு' வீட்டுமனை பிரிச்சு, வீடு கட்டற வேலையும் வெகுஜோரா போயிட்டு இருக்காம். மாவட்ட நிர்வாகமும் இதை கண்டுக்கலை.
உள்ளூர் திட்டக்குழுமமும், எப்படி அனுமதி கொடுத்தாங்கனு தெரியலை. கலெக்டர் அதிரடி ஆய்வு செஞ்சு, பட்டாவை கேன்சல் பண்ணி, அரசு திட்டத்துக்காவது இடத்த பயன்படுத்தினா, பரவாயில்லை,''விநாயகருக்கு அபிேஷகம் முடிந்து அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.
சன்னதி வரை சென்று பார்த்து விட்டு வந்த, மித்ரா, ''அக்கா... எப்படியும் இன்னும் பூஜைக்கு அரை மணி நேரம் ஆயிரும் போல...''என்றாள்.''ஆகட்டும், பொறுமையா கும்பிடலாம்,''என்ற சித்ராவிடம், ''அக்கா... இந்த மொபைல் போன் நெட்வொர்க்கே சரியாக கிடைப்பதில்லைங்க்கா... உங்ளுக்கெப்படி?''''எனக்கு மட்டுமல்ல... லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கே அப்படித்தான் போலிருக்கு...'' என்றாள்.''என்னக்கா... சொல்றீங்க?''''உண்மைதான்டி. மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிக்கு சி.யு.ஜி. சிம் கார்டு கொடுத்திருக்காங்க.
ஆனால், டி.எஸ்.பி.,யின் அந்த எண் வேலை செய்வதில்லை. சின்ன அதிகாரியோ, போனையே எடுப்பதில்லையாம். ஏதேனும் புகார், தகவல் தர முயற்சித்தாலும், அலுவலக 'லேண்ட்லைன்' போன் மட்டுமே சில நேரங்களில், பயன்படுகிறது. லஞ்ச ஒழிப்பு துறை இப்படியிருந்தால், எப்படின்னு பொதுமக்கள் 'செம காண்டுல' இருக்காங்களாம்,''''நீங்க சொல்றது சரிதாங்க... எந்தவொரு அரசு அதிகாரியும், மக்களுடன் தொடர்பிலிருந்தான் நல்லது. இங்க பாருங்க... இந்த டிரான்ஸ்போர்ட் அதிகாரிங்க, எந்நிகழ்ச்சிக்கு போறதில்லையாம்?''''அவங்களுமா?''''ஆமாங்க்கா... வருவாய் துறையினர் நடத்தும் எந்த குறை கேட்பு நிகழ்ச்சியிலும், டிரான்ஸ்போர்ட் அதிகாரிகள் கலந்து கொள்வதே இல்லையாம். பஸ்கள் இயக்கம் குறித்த பிரச்னைகள், புகார்கள் வந்தால், உரிய அலுவலகத்திலிருந்து அனுப்பி வைத்தாலும், நடவடிக்கை, பதில் எதுவும் கிடையாதாம். இதனால, அவங்க மேல அதிருப்தியில் உள்ள மாவட்ட நிர்வாகம், நிர்வாக மேலாளருக்கு புகார் அனுப்ப முடிவு செஞ்சிருக்காங்களாம்,'' ஆதங்கப்பட்டாள் மித்ரா.அப்போது, கோவிலுக்குள் வட மாநில தொழிலாளர்கள் நுழைந்து, 'கணபதி பப்பா மோர்யா...' என பஜனை பாடி சென்றனர்.
அதைப்பார்த்த சித்ரா, ''இவங்களை பார்த்ததுதான், வெண்ணெய்க்கு பேர் போன ஊர் போலீசாரின் செயல் நினைவுக்கு வருது,''என்றாள்.''அப்படி, அவங்க என்ன பண்ணிட்டாங்க்கா?''''அந்த போலீஸ்காரங்க ரெகுலரா, 'சிட்கோ' முன்னாடி நின்னுட்டு, டூ வீலர் கேஸ் புடிக்கறதில் மட்டுமே குறியா இருக்காங்களாம்.
அதிலும், வட மாநில தொழிலாளர் வந்தா, ஏக குஷியாம்,''''மொழி பிரச்னை இருக்கறதால, மிரட்டியே 'பைனை' விட அதிகமாக தொகை கறந்திடறாங்களாம். இதனால, சிட்கோ வளாகத்துல இருந்து வெளியே வந்துட்டு போகவே பயமா இருக்குனு, வெளிமாநில தொழிலாளர்கள் புலம்புறாங்களாம்,''''ஏங்க்கா... என்னதான், சட்டம் தன் கடமையை செய்யும்னாலும், ஒரு எல்லை வேண்டாம். அவங்களும், ஊர் விட்டு ஊர் பிழைக்க வந்துருக்காங்க. அதை தெரிஞ்சுட்டு, ஒரு நியாயத்தோட நடக்க வேண்டாமா?''ஆதங்கப்பட்டாள் சித்ரா.'அக்கா... அதே ஊரில், 'டாஸ்மாக்' பார் நடத்துற ஒருத்தர், போலீஸ்காரங்களை கூப்பிட்டு, கெடா வெட்டி விருந்து வைச்சாராம். அந்தளவுக்கு, 'பார்காரரிடம், நம்ம போலீஸ்காரங்க 'பாசத்தை' காட்டறாங்க,'' என்றாள் மித்ரா.
''கரெக்ட்தான் மித்து. அப்பதான், அவங்க ஒழுங்கா வருவாங்க...''என்ற சித்ரா, தண்ணீர் குடித்தாள்.மித்ராவும் தண்ணீர் குடித்து விட்டு, ''அக்கா... சவுத் போலீசில் சிலர் செய்யற அட்டகாசம் தாங்க முடியலையாம்,''''ஆமாம்... அங்க ஒருத்தர், எப்பவும் 'மப்டியிலே' டியூட்டி பார்த்திட்டு இருக்காரு பேசினோம்.
இப்போ, ஒரு குட்டி அதிகாரியும் தன்னிஷ்டத்துக்கு சும்மா பூந்து வெளையாடறார். ஏதாவது வண்டி திருட்டு போச்சுனா, எப்.ஐ.ஆர்.,ல் ஆரம்பிச்சு, வண்டியை பிடிச்சு கொடுக்கற வரைக்கும், 'மேட்டர்'ஓட்டித்தான், வேற வேலை செய்யறாராம். அதனால, அவர் காட்டில் எப்பவுமே 'ப' மழை கொட்டுதாம்,''''ஓேஹா... அந்த 'துரையும்' ஆரம்பிச்சுட்டாரா? சுத்தம். அக்கா.. இதேமாதிரி கோழிகளை லவட்டி வந்த ஆசாமிகளை பிடித்து கொடுத்து, போலீசார் கோட்டை விட்டதில், சம்பந்தப்பட்ட போலீசாரை, எஸ்.பி., வறுத்தது தெரியுமா?''''அடடா.. புது எஸ்.பி.,யா? ஆச்சரியமா இருக்கே?''''ஆமாங்க்கா. வெள்ளையான கோவில் ஊரில், விவசாய தோட்டத்தில் கோழிகள் அடிக்கடி திருட்டு போச்சு. போலீஸ்கிட்ட சொல்லியும் கண்டுக்கலையாம். போன வாரத்தில், கோழி திருடர்களை அமுக்கிய பொதுமக்கள், தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைச்சாங்களாம்,''''விசாரிச்ச அதிகாரி, அவங்களை அனுப்பி வச்சுட்டாரு. இந்த விஷயம் எஸ்.பி., காதுக்கு போயி, அதிகாரியை கடிந்து கொண்டாராம்.
அதனால, 'காண்டான' அந்த அதிகாரி, ஸ்டேஷன் அதிகாரிகிட்ட சும்மா பொறிஞ்சு தள்ளிட்டாராம். அதுக்கப்பறம், அந்த மூணு பேரை மறுபடியும் புடுச்சு 'ரிமாண்ட்' பண்ணாங்களாம்,''இந்த கோபத்தை மொத்தமாக, இன்ஸ்பெக்டர் கிட்ட காட்டிய டி.எஸ்.பி., சும்மா பொறிந்து தள்ளியிருக்காரு. அதுக்கு அப்புறம், மூனு பேரை போலீசார் பிடித்து ரிமாண்ட் பண்ணியிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
''இப்படி அதிகாரிங்க, அடிக்கடி சாட்டையை கையில் எடுத்தால் மட்டுமே, சரியா வரும்போல மித்து... அதே மாதிரி, காங்கயம் தாலுகா ஆபீசிலும், லஞ்சம் கொடி கட்டி பறக்குதாம்,''''யாருக்கா.. அந்த புண்ணியவான்?''''ஒரு துணை அதிகாரிதான். பொதுமக்கள், விவசாயி என, பலரிடமும் கொடிக்காசு என கூறி, பல ஆயிரக்கணக்கான ரூபாயை லவட்டிடறார்.இவரு, ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக 'குப்பை' கொட்டுவதால், வசூலில் கில்லாடியாம்.
அதோடில்லாமல், அவரோட மனைவியும், அதே ஊரில் ஆர்.ஐ.,யாம்,''''இதனால, யாருகிட்ட, எவ்ளோ 'டார்கெட்'னு, பக்காவாக 'ஸ்கெட்ச்' போட்டு வேலை செய்யற அதிகாரியை, கலெக்டர்தான் கண்டுக்கணும்,''என்றாள் மித்ரா.'இன்றைய கட்டளைதார், செந்தில்நாதன், சாந்தி இருவரும், முனனால் வரவும்,' என 'மைக்கில்' அறிவிக்கப்பட்டது. உடனே, மணியோசையுடன், ''விநாயக பெருமானுக்கு அரோகரா'என்ற கோஷம் கேட்கவே, இருவரும் எழுந்து சன்னதி நோக்கி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X