போரை பாக்., துவக்காது: இம்ரான்கான் அறிவிப்பு

Updated : செப் 03, 2019 | Added : செப் 03, 2019 | கருத்துகள் (53)
Share
Advertisement

லாகூர் : ''பாகிஸ்தான் இந்தியாவுடன் ஒரு போதும் முதலாவதாக போரை துவக்காது; அணு ஆயுதங்களையும் பயன்படுத்தாது'' என இம்ரான் கூறியுள்ளார்.



latest tamil news



பாகிஸ்தானில் உள்ள லாகூரில் கவர்னர் இல்லத்தில் நடந்த சீக்கியர்கள் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாங்கள் யார் மீதும் போரை துவக்க மாட்டோம். இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத பலம் பெற்ற நாடுகள். இந்த இரு நாடுகள் இடையே பதற்றம் நீடிப்பது உலகிற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும். பாகிஸ்தான் முதலாவதாக அணு ஆயுதங்களை ஒரு போதும் பயன்படுத்தாது. ஒரு பிரச்னைக்கு போர் எப்போதும் ஒரு தீர்வாக அமையாது என்பதை இந்தியாவுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

போரில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கும் இழப்பு தான். போர் மூண்டால் அடுத்தடுத்து பல பிரச்னைகளும் உருவாகும். முன்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசியுள்ளேன். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு பொதுவாக சில பிரச்னைகள் உள்ளன என்பதை எடுத்துக் கூறினேன். வெப்பமயமாதல் குறித்து பேசினேன். புகையும் வெடிகுண்டின் மீது அமர்ந்துள்ளோம் என்று தெரிவித்தேன். இது போன்ற பிரச்னைகளுக்கு நாம் தீர்வு காணா விட்டால் இரு நாடுகளிலும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும்.


latest tamil news



காஷ்மீர் பிரச்னை குறித்தும் நாம் இருவரும் ஒன்று பட்டு தீர்வு காணலாம் என்றும் கூறினேன். ஆனால் என்னுடைய முயற்சிகள் இந்தியா தரப்பில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. நாம் என்ன சொன்னாலும் இந்தியா ஒரு 'சூப்பர் பவர்' நாடு போல நடந்து கொள்கிறது. பேச்சு நடத்த வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக்கூடாது என்பதை நமக்கு உத்தரவிடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
04-செப்-201905:33:46 IST Report Abuse
meenakshisundaram வேணும்னா நீங்க ஆரம்பியுங்க ,நாங்க முடிச்சு வைக்கிறோம்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
03-செப்-201920:09:43 IST Report Abuse
Sampath Kumar அப்ப கிரிக்கெட் விளையாடி பாக்கலாம் என்று சொல்லாம சொல்லுகிறார்
Rate this:
Cancel
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
03-செப்-201919:45:28 IST Report Abuse
KumariKrishnan Bjp மிஸ்டர் இம்ரான்கான் அவர்களே "POK "- என்று ஆங்கிலத்தில் உலகம் முழுமையும் சொல்கிறார்களே அதன் விரிவாக்கம் என்ன தெரியுமா உங்களுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஸ்மீர் என்பதுதான் அதன் விரிவாக்கம் யாரிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட்டது? எங்களிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்டது அந்த POK பகுதியை என்று விட்டுவிட்டு ஓடுவீர்கள் என்பதுதான் பேசவேண்டிய விசயம் அதை பேசுவதற்கும் நீங்கள் பயங்கரவாதத்தை நிறுத்தவேண்டும் G 7 நாடுகளின் மகாநாட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, அமேரிக்க ஜனாதிபதியின் அருகில் அமர்ந்து உலக பத்திரிக்கையாளர்களை சந்திக்கும்போது, எங்கள் பிரதமர் என்ன சொன்னார் தெரியுமா? “ 1947 க்கு முன்னால் பாகிஸ்தான் இந்தியாவின் பகுதியாகத்தான் இருந்தது பாகிஸ்தானுடனான பிரச்சனையை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம் இந்த விசயத்தில் இன்னொரு நாடு தலையிட தேவையில்லை” என்று பேசவேண்டியது POK தான் என்று உள்துறை அமைச்சரும் ராணுவ அமைச்சரும் ஏற்கெனவே விளக்கிவிட்டார்கள் இந்த அணுக்குண்டு மிரட்டல் எல்லாம் மோடியிடம் செல்லுபடி ஆகாது எங்களிடமும் அணுக்குண்டு இருக்கிறது, எங்களிடமும் அணுக்குண்டு இருக்கிறது என்று எத்தனை முறைதான் தேய்ந்துபோன ரிக்காடாக பேசுவீர்கள்? உங்கள் அணுக்குண்டு என்ன செய்யும் என்பதும், எதை எப்படி செய்யவேண்டும் என்பதும் எங்கள் மோடிக்கு நன்றாகவே தெரியும் முதலில் மிரட்டுவதையும் புலம்புவதையும் நிறுத்திவிட்டு POK வை விட்டு ஓடுங்கள் - குமரிகிருஷ்ணன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X