விநாயகர் சதுர்த்தி விழா; அன்னதானம் வழங்கிய முஸ்லிம்கள்

Updated : செப் 03, 2019 | Added : செப் 03, 2019 | கருத்துகள் (15) | |
Advertisement
சென்னை: மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், விநாயகர் சதுர்த்தி விழாவில், முஸ்லிம்கள் அன்னதானம் வழங்கி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.நாடு முழுவதும், விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வண்ணாரப்பேட்டை, எம்.எஸ்.கே., குழு சார்பில், ஆறாவது ஆண்டாக, வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலையில், 11 அடி உயரத்தில், விநாயகர் சிலை அமைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்படுகிறது.
 விநாயகர், சதுர்த்தி விழா, அன்னதானம், முஸ்லிம்கள்

சென்னை: மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், விநாயகர் சதுர்த்தி விழாவில், முஸ்லிம்கள் அன்னதானம் வழங்கி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.

நாடு முழுவதும், விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வண்ணாரப்பேட்டை, எம்.எஸ்.கே., குழு சார்பில், ஆறாவது ஆண்டாக, வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலையில், 11 அடி உயரத்தில், விநாயகர் சிலை அமைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்படுகிறது. இதில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி சார்பில், அதன் நிறுவன தலைவர், வி.எம்.எஸ்.முஸ்தபா, 35, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, விநாயகர் சிலையை திறந்து வைத்து, வழிபாட்டில் பங்கேற்றார்.

அக்கட்சி சார்பில், நேற்று மதியம், 1:00 மணி முதல், விநாயகர் சிலைக்கு முன், புளியோதரை, பிரிஞ்சி சாதம், கேசரி உள்ளிட்ட உணவுகளுடன், 500 பேருக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், வண்ணாரப்பேட்டை, சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
06-செப்-201911:27:47 IST Report Abuse
oce கியா பாய் நீ போடுவது சைவ சாப்பாடா அல்லது பிரியாணியா. பிரியாணியை விநாயகர் சாப்பிடமாட்டார். அவருக்கு கொழுக்கட்டை மிகவும் பிடிக்கும். அதை செய்து போடு.
Rate this:
Cancel
Sudhakar Sundaram - Singapore,சிங்கப்பூர்
04-செப்-201908:55:38 IST Report Abuse
Sudhakar Sundaram மிகவும் சந்தோசமா இருக்கிறது , இப்படி பட்ட நல்ல உணவுகள் வளரவேண்டும்,. அப்போதுதான் போலி அரசியல் குளிர் காயும் நாய்கள் ஓளிந்துவிடுவார்கள் . மனித நேயம் வளரவேண்டும் , அதற்காக நாம் எல்லா கடவுளையும் வணங்கி வேண்டி கொள்வோம். முதலில் மனித நேயம் , பிறகு மதம்.
Rate this:
Cancel
Anbu - Kolkata,இந்தியா
03-செப்-201919:53:42 IST Report Abuse
Anbu ஹிந்துக்கள் வாக்களிக்கும்போது மத ரீதியாக வாக்களிக்கத் துவங்கியுள்ளது சிலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது ............. இதுதான் முஸ்லிம்களின் மாற்றத்துக்கு உண்மையான காரணம் ...............உண்மை எப்போதும் கசக்கும் ...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X