பெண் போலீசு அனுப்பிய கடுதாசி குண்டு - ஜொள்ளு அதிகாரிக ஓடுறாங்களாம் மிரண்டு!| Dinamalar

பெண் போலீசு அனுப்பிய 'கடுதாசி குண்டு' - 'ஜொள்ளு' அதிகாரிக ஓடுறாங்களாம் மிரண்டு!

Updated : செப் 03, 2019 | Added : செப் 03, 2019
Share
புலியகுளம் கோவிலுக்கு சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகரை தரிசித்து விட்டு, வ.உ.சி., பூங்காவுக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.சுங்கம் ரவுண்டானாவை கடந்து, திருச்சி ரோடு வழியாக சென்றபோது, ''அக்கா, இந்த ரோட்டுல மேம்பாலம் கட்டுற வேலை படுஸ்பீடா இருக்கு; உக்கடத்துல 'ஸ்லோ'வா இருக்கே,'' என, நோண்டினாள்.''மித்து, திருச்சி ரோட்டுல
 பெண் போலீசு அனுப்பிய 'கடுதாசி குண்டு' - 'ஜொள்ளு' அதிகாரிக ஓடுறாங்களாம் மிரண்டு!

புலியகுளம் கோவிலுக்கு சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகரை தரிசித்து விட்டு, வ.உ.சி., பூங்காவுக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.
சுங்கம் ரவுண்டானாவை கடந்து, திருச்சி ரோடு வழியாக சென்றபோது, ''அக்கா, இந்த ரோட்டுல மேம்பாலம் கட்டுற வேலை படுஸ்பீடா இருக்கு; உக்கடத்துல 'ஸ்லோ'வா இருக்கே,'' என, நோண்டினாள்.''மித்து, திருச்சி ரோட்டுல தேசிய நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் கட்டுது. உக்கடத்துல மாநில நெடுஞ்சாலைத்துறை செய்யுது. இவுங்க எப்பவுமே ஆமை வேகம்தான். வாகன ஓட்டிகள் படுற கஷ்டம் ரொம்ப அதிகமாகிடுச்சு,'' என, பரிதாபப்பட்டாள் சித்ரா.ரயில்வே ஸ்டேஷனை கடந்தபோது, ரோட்டில் கழிவு நீர் ஓடிக் கொண்டிருந்தது. துர்நாற்றம் தாங்க முடியாமல், மூக்கை பொத்தினாள் மித்ரா.''அங்க பாரு மித்து, பாதாள சாக்கடை மேனுவல் திறந்து, கழிவு நீர் வெளியேறுது. எல்லாவித கழிவையும் ஓட்டல்காரங்க பாதாள சாக்கடை குழாயில அனுப்பிடுறாங்களாம். அதனால, அடைப்பு ஏற்படுதுன்னு கார்ப்பரேஷன்காரங்க சொல்றாங்க. ஓட்டல்காரங்கள திருத்த, கடுமையா 'பைன்' போடணும்; அதுக்கென அதிகாரிகள நியமிச்சு கண்காணிக்கணும். அப்பதான், நம்ம சிட்டி 'ஸ்மார்ட் சிட்டி'யா மாறும்,''''ஆமாக்கா, நீங்க சொல்றதும் சரி தான்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு கோடிக்கணக்குல பணம் செலவழிக்கிறாங்க. ஆனா, சிட்டி அப்படியே இருக்குது; 'ஸ்மார்ட்'டா மாறுமான்னு சந்தேகமா இருக்கு,''''அதெல்லாம் சரி, சென்ட்ரல் பாரஸ்ட் மினிஸ்ட்ரி ஆபிஸ் நோட்டீஸ் அனுப்புனதால, கார்ப்பரேஷன் ஆபிசர்ஸ் டில்லிக்கு போயி, விளக்கம் கொடுத்துட்டு வந்தாங்களாமே...''''அதுவா, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துல, வ.உ.சி., பூங்காவை மேம்படுத்தப் போறதா சொன்னாங்க.
இதுவரைக்கும் எதுவுமே நடக்கலை. சென்ட்ரல் கவர்ன்மென்ட் நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சிருக்கு. கெஞ்சி கூத்தாடி, ஒன்பது மாசம் 'டைம்' வாங்கி இருக்காங்க. அதிலும், ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை அறிக்கை தாக்கல் செய்யணும்ங்கிற நிர்பந்தத்துல, அவகாசம் கொடுத்திருக்காங்களாம்,''''ஆனா, நிதி திரட்டுறதுல பிரச்னை இருக்கு. சென்ட்ரல் பாரஸ்ட் மினிஸ்ட்ரிகிட்டயே பணம் வாங்கலாம்னு கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் நெனைக்கிறாங்க. ஒதுக்குவாங்களான்னு தெரியலை,'' என்றவாறு, பூங்கா அருகே, ஸ்கூட்டரை நிறுத்தினாள்.

டோக்கன் வாங்கிக்கொண்டு, இருவரும் உள்ளே நுழைந்தனர்.''வனத்துறையை சேர்ந்தவங்களையும், விவசாயிகள் ஒரு பிடிபிடிச்சிட்டாங்களாமே...'' என, நோண்டினாள் சித்ரா.''ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுல குறைதீர்ப்பு கூட்டம் நடக்கும். இந்த மாசம் நடந்த கூட்டத்துல, முதல்முறையா வனத்துறை உயரதிகாரிங்க கலந்துக்கிட்டாங்க,''''மலையில இருந்து, 20 கி.மீ.,க்கு அப்பால் இருக்குற ஊருல கட்டடம் கட்டுறதுன்னா, அனுமதி தர மாட்டேங்குறாங்க.
மலையடிவாரத்துல, குடிசை மாற்று வாரியம் கட்டடம் கட்டுறதுக்கு, வனத்துறை தடையின்மை சான்று எப்படி கொடுத்துச்சுன்னு ஒருத்தர் கேட்டாரு. காட்டுப்பன்றிகளை சுட்டுக் கொல்லணும்னு, ஒருத்தரு ஆரம்பிச்சாரு. இப்படியே, ஒவ்வொருத்தரும் புகார்களை அடுக்கிட்டே போனாங்க.''இதைக்கேட்டு, வனத்துறை அதிகாரிங்களுக்கு தர்ம சங்கடம். சில பிரச்னைகளுக்கு விளக்கம் கொடுத்தாங்க. குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு கட்டுற விவகாரத்துல கடைசி வரைக்கும் வாயே திறக்கலை,''''அதெப்படி, வாயை திறப்பாங்க. ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யோட தொகுதியாச்சே. இந்த கேஸ்ல சாதகமா தீர்ப்பு வாங்குறதுக்கு, இப்ப யோசிச்சிட்டு இருக்காங்களாம். மாவட்ட உயரதிகாரி கூட, சமீபத்துல ஆய்வு செஞ்சிட்டு வந்திருக்காரு. அனுமதி கெடைச்சிரும்ங்கிற நம்பிக்கையில, குடிசை மாற்று வாரிய அதிகாரிங்க தெம்போட இருக்காங்க...'' என்றாள் சித்ரா.அதைக்கேட்ட மித்ரா, ''போலீஸ் வட்டாரத்துல ஒரு கடிதத்தை பத்தி பேசிக்கிட்டு இருக்காங்களாமே...'' என, கிளறினாள்.''ஒனக்கும் தகவல் வந்துருச்சா. கிழக்கு பகுதி போக்குவரத்து பிரிவுல வேலை பார்க்குற ஒரு பெண் போலீஸ், கமிஷனருக்கு கடுதாசி எழுதியிருக்காங்க. அதுல, 'ஒழுங்கா வேலை பார்க்குற பெண் போலீசுக்கு மரியாதை இருக்கறதில்லை.
எதுக்கும் 'சம்மதிக்கிற' பெண் போலீசுக்கு மட்டும், சலுகை தர்றாங்க. அவுங்க செய்ய வேண்டிய வேலையையும், நாங்க செய்ய வேண்டியதா இருக்கு,''''இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஸ்டேஷன் உளவுத்துறை போலீஸ்காரர் என பலரிடமும் ஒரு பெண் போலீஸ் நெருக்கமா இருக்கறதுனால, காவல்துறைக்கே அவமானம் ஏற்பட்டு இருக்குனு ரெண்டு பக்கத்துக்கு எழுதியிருக்காங்க...''''அச்சச்சோ... அப்புறம்...''''கடுதாசியின் உண்மை தன்மையை விசாரிச்சு அறிக்கை கொடுக்க, கமிஷனர் உத்தரவு போட்டிருக்காரு. நடவடிக்கை எடுப்பாங்கன்னு சொல்றாங்க. கடுதாசியை பத்தி விசாரிக்கப் போயி, வேற வில்லங்க மேட்டர் வெளிச்சத்துக்கு வந்தா, என்ன செய்றதுன்னு, போலீஸ்காரங்க புலம்பிட்டு இருக்காங்க...''''நானும் ஒரு போலீஸ் மேட்டர் கேள்விப்பட்டேன். சொல்லட்டுமா,'' என, இழுத்தாள் மித்ரா.''சொல்லு... சொல்லு... எதுக்கு பர்மிஷன் கேக்குற...''''போலீஸ்காரங்களுக்கு எப்பவுமே ஒயர்லெஸ்தான் உசுறு. தகவல் பரிமாற்றமே அதுலதான் நடக்கும்.
கொஞ்ச நாளா சத்தமே இல்லாம, அமைதியா இருக்கு. ஒலி அளவை கூட்டுறதுக்கும், சேனல் மாத்துறதுக்கும் ரெண்டு பட்டன் இருக்கு.''ரெண்டு பட்டனும் சரி வர வேலை செய்றது இல்லையாம். 'ரப்பர் பேண்ட்' போட்டு, காகிதம் சொருகி வச்சிருக்காங்க. சரி பாதி ஒயர்லெஸ் இப்படிதான் இருக்காம்.
ரோந்து போலீஸ்காரங்க ரொம்பவே அவதிப்படுறாங்க,'' என்ற மித்ரா, பூங்காவை விட்டு வெளியே வந்தாள்.அருகாமையில் இருந்த பேக்கரியில், பப்ஸ், காபி ஆர்டர் செய்தனர்.பப்ஸ் வந்ததும், ''மித்து, கலப்பட எண்ணெய் தயாரிக்குற ஆலையை உணவு பாதுகாப்பு அதிகாரிங்க கண்டுபிடிச்சிருக்காங்களே...'' என்றாள் சித்ரா.''ஆமாக்கா, எண்ணெய் கலப்படம் நடக்குற ஏரியாவை தெரிஞ்சுக்கிட்டு, 20 நாளா, ரகசியமா கண்காணிச்சு, கையும் களவுமா பிடிச்சிருக்காங்க. இதே மாதிரி, போலி டீத்துாள் பயன்படுத்துற டீக்கடையில ஆய்வு செஞ்சு, வியாபாரிகளை பிடிச்சிருக்காங்க. அதுக்கப்புறம், டீத்துாள் தொழிற்சாலையை கண்டுபிடிச்சாங்களாம்,''''அப்படியே குட்கா, பான்பராக் ரெய்டு நடத்துனா... நல்லாயிருக்கும்,'' என்ற சித்ரா, பேக்கரியை விட்டு வெளியே வந்தாள்.பூங்காவுக்கு வெளியே தள்ளுவண்டி கடைக்காரர்களிடம், ஆளுங்கட்சிக்காரர் ஒருவர் மாமூல் வசூலித்துக் கொண்டிருந்தார்.அதைப்பார்த்த மித்ரா, ''அக்கா, இப்ப, அரசு விழாவா இருந்தாலும், ஆளுங்கட்சி விழா மாதிரி நடக்குதாம்,'' என்றாள்.''அப்படியா...'' என்றபடி, வாயைப்பிளந்தாள் சித்ரா.''உள்ளாட்சி தேர்தல் நடத்துறதுக்கு, 'பிளான்' போட்டிருக்கிறதுனால, எங்க விழா நடந்தாலும், ஆளுங்கட்சிக்காரங்க தவறாம ஆஜராகிடுறாங்க, ரெண்டு நாளைக்கு முன்னாடி, போத்தனுார் ஸ்ரீராம் நகருல நலத்திட்ட உதவி வழங்கற நிகழ்ச்சி நடந்திருக்கு.
வி.ஐ.பி., கலந்துக்கிட்டாரு. ஆயிரம் பேருக்கு தாம்பூல தட்டு கொடுத்திருக்காங்க. பயனாளிகளுக்கு கொடுத்த கூப்பன்ல, 'வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு'ன்னு பிரிண்ட் பண்ணியிருந்தாங்களாம்...''''ஓஹோ...''''இந்த வார்டுல, ஆளுங்கட்சி சார்புல கிளை செயலாளரோ அல்லது மனைவியோ போட்டியிட போறாங்களாாம். அதனாலதான், தாம்பூல தட்டு கொடுத்திருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.அதை கேட்டுக்கொண்டே, ஸ்கூட்டரை 'ஸ்டார்ட்' செய்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X