சப்பாத்தியுடன் உப்பு வீடியோ பத்திரிகையாளர் கைது

Updated : செப் 03, 2019 | Added : செப் 03, 2019 | கருத்துகள் (109)
Advertisement

லக்னோ: உபி.,யில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சப்பாத்தியும், உப்பும் வழங்கப்பட்டதாக வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மீது ஆயுள் தண்டனை கிடைக்கக்கூடிய பிரிவுகளில் அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.


மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு வெறும் சப்பாத்தியும், இதற்கு தொட்டுக்கொள்ள உப்பும் வழங்கப்படுவதாக சன்சந்தேஷ் என்ற இணையதளத்தின் நிருபர் பவன் ஜெய்ஸ்வால் என்பவர் மொபைலில் படமெடுத்து செய்தி வெளியிட்டார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதனையடுத்து கல்வித்துறை அதிகாரி பிரேம்சங்கர் ராவ் போலீசில் புகார் அளித்தார். இந்த வீடியோ தவறானது, உள்நோக்கம் கொண்டது என்றும் அவரது மனுவில் கூறினார். இதனையடுத்து பத்திரிகையாளர், பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் மேலாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி கல்விறை அலுவலகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில்; பள்ளியில் சப்பாத்தி மட்டுமே தயாரிக்கப்படுகிறது. காய்கறிகள் கொண்ட குருமா மற்றொரு இடத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது. மேலும் சாதம், பருப்பும் வழங்கப்படுகிறது. ஆனால் வீடியோவில் இருப்பது உண்மையல்ல என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிருபர் பவன் கைது செய்யப்பட்டார்.

நிருபர் தரப்பில் அவரது ஆதரவாளர்கள் கூறியிருப்பதாவது: நிருபர் எதனை பார்த்தாரோ அதனைத்தான் செய்தியாக வெளியிட்டுள்ளார். அதில் தவறு ஏதுமில்லை , அரசு பழிவாங்குவதுடன், ஜனநாயகத்தை நெறிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.


Advertisement
வாசகர் கருத்து (109)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
04-செப்-201906:42:17 IST Report Abuse
skv srinivasankrishnaveni பாவமாயிருக்கு பல நியூஸ் சானல்களில் பார்த்து மனம் வருந்தினேன் . ஏழை பணக்காரன் எல்லோருக்கும் பொது பசி வளரும் குழந்தைகளுக்கு கட்டாயம் நல்ல உணவுத்தரமுடியாத அரசு ஒழிஞ்சுபோகட்டும் . இவாளுக்கு பசிச்சால் இவா என்னவெல்லாம் சிறப்பான உணவு வளைச்சுகாட்டுறாங்க மட்டன் மீனு இல்லாது வங்காளி சோறு துண்ணமாட்டான் என்று தெரியும் . பாவம் இந்தக்குழந்தைகள் ஏழைகளப் பிறந்தால் இப்படியா நடத்தனம் வெட்க்கமா இல்லீயா தைரியமா எடுத்துப்போட்டவனை சிறையிலே வச்சால் எல்லாம் மறைஞ்சுடுமா மமதாஜீ
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-செப்-201905:43:40 IST Report Abuse
Mani . V அரசின் அவலத்தை வெளியிட்ட பத்திரிக்கையாளருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் யுவர் ஹானர். இனிமே யாருமே அரசின் அவலத்தை (கொத்துக் கொத்தாய் குழந்தைகள் செத்து மடிந்தது உள்பட) எழுத பயப்பட வேண்டும். ஜெய்ஹிந்த் பாரத் மாதா கீ ஜெ
Rate this:
Share this comment
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
04-செப்-201905:13:16 IST Report Abuse
B.s. Pillai Roti has different names roti, Naan, Fulka etc. IF it is served hot, you can eat it without side dish also .Dal and roti are very good combination .Daal provides Protin and Roti provides carbo.Like Sambar and rice.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X