பொது செய்தி

இந்தியா

இந்திய ராணுவத்தின் பொன்நாள்

Updated : செப் 03, 2019 | Added : செப் 03, 2019 | கருத்துகள் (24)
Advertisement
 #Apache aircraft, Apache, helicopter, Indian Air Force, இந்தியா,  ராணுவம்,  பொன்நாள் அப்பாச்சி

அமிர்தசரஸ்: பல்வேறு நவீன யுக்திகளை கொண்ட அப்பாச்சி ஹெலிகாப்டர் இன்று இந்திய விமானபடையில் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா உலக அளவில் அப்பாச்சி கொண்ட 16 வது நாடாக இந்தியா இணைகிறது.

நாட்டின் படைபலம் அதிகரிக்க வேண்டிய நிலையில் இந்தியா பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. உலக அளவில் இந்திய ராணுவமும் பலம் பொருந்தியது என்பதை உலகிற்கு பறைசாற்ற போதிய முயற்சிகளில் மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது.

இதன் மற்றொரு முயற்சியாக அமெரிக்காவிடம் இருந்து ஏ.எச் - 64 இ அப்பாச்சி என்ற ஹெலிகாப்டர் வாங்க போடப்பட்ட ஒப்பந்தம் படி 22 எண்ணிக்கை இந்தியாவுக்கு தர அமெரிக்கா சம்மதித்தது .இதன்படி முதன் முதலாக பெறப்பட்ட 8 ஹெலிகாப்டர்கள் இன்று சேர்க்கப்பட்டது.
இதற்கான பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில், விமானப்படை தளபதி தன்னோவா, விமானப்படை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


பூஜை
தொடர்ந்து, விமானப்படையில் சேர்க்கப்பட்ட அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களுக்கு, தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. பொட்டு வைக்கப்பட்டதுடன் தேங்காய் உடைத்து பூஜை செய்யப்பட்டது.பலம் கூடும்


இதன் பின்னர் விமானப்படை தளபதி தன்னோவா கூறுகையில், அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள், இணைத்ததன் மூலம் விமானப்படை பலம் மேலும் வலுப்பெற்றுள்ளது. பல தாக்குதல்களை நடத்த வல்ல இந்த ஹெலிகாப்டர்கள் மிகக்கடுமையான தாக்குதல்களை நடத்தவல்லது என்றார்.

உலகில் உள்ள தாக்குதல் ஹெலிகாப்டர்களில், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் முதலிடத்தில் உள்ளது.
இந்நாள் இந்திய ராணுவத்தின் ஒரு பொன்நாள் என ராணுவ வட்டாரம் பெருமை கொள்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
03-செப்-201921:25:03 IST Report Abuse
கதிரழகன், SSLC குடிமக்களோட வாகனத்துக்கு இந்த மாதிரி தேங்கா ஒடச்சு எலுமிச்சம் நசுக்கி ஆராத்தி காட்டுறது சரி . ஆனா இந்த விமானம் போர் வாகனம் . போர் செய்யும் வாகனத்துக்கு ரத்த சாந்தி பூசை செய்யறது சரி இல்லை. இந்த வாகனம் ஒரு ரத்த வெறியோட இருக்கறதுதான் சரி.
Rate this:
Share this comment
Cancel
Balakrishnan Kamesh - tiruvarur,இந்தியா
03-செப்-201916:16:55 IST Report Abuse
Balakrishnan Kamesh நம்ப அப்பச்சி ...சாரி அப்பாச்சியை விட்டு பாக்கி அல்லக்கைகளை காஷ்மீரிலிருந்து அலேக்காக மூட்டைகட்டி சமாதி கட்டவேண்டும் ..
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
03-செப்-201912:36:32 IST Report Abuse
blocked user சூப்பர்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X