இந்தியாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை: பாக்., வழக்கறிஞர்

Updated : செப் 03, 2019 | Added : செப் 03, 2019 | கருத்துகள் (31)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: காஷ்மீர் படுகொலை நடப்பதாக பாகிஸ்தான் கூறும் குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லை. இதனால், சர்வதேச நீதிமன்றத்தில், இது குறித்த வழக்கை எடுப்பது கடினம் என, அந்த நீதிமன்றத்தில் பாகிஸ்தானுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் கவார் குரேஷி கூறியுள்ளார்.காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றியது.
Pakistan, ICJ lawyer, Imran govt, Kashmir, ICJ, பாகிஸ்தான், காஷ்மீர், இந்தியா, சர்வதேச நீதிமன்றம், வழக்கறிஞர்

இஸ்லாமாபாத்: காஷ்மீர் படுகொலை நடப்பதாக பாகிஸ்தான் கூறும் குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லை. இதனால், சர்வதேச நீதிமன்றத்தில், இது குறித்த வழக்கை எடுப்பது கடினம் என, அந்த நீதிமன்றத்தில் பாகிஸ்தானுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் கவார் குரேஷி கூறியுள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், சர்வதேச நாடுகளின் உதவியை நாடியது. ஆனால், எந்த நாடும் பாகிஸ்தானை கண்டுகொள்ளவில்லை. இதனால், விரக்தியடைந்த பாகிஸ்தான், சீனா உதவியுடன் ஐ.நா., பாதுகாப்பு சபையில் முறையிட்டது. ஆனால், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என நிரந்தர உறுப்பு நாடுகள் கூறியதை ஐ.நா.,வும் ஏற்று கொண்டன. இதனையடுத்து, காஷ்மீர் விவகாரம் குறித்து, சர்வதேச அமைப்புகளில் எழுப்பப்போவதாக கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த விவகாரம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக பாகிஸ்தான் கூறியது.


latest tamil news



இந்நிலையில், சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தானுக்காக ஆஜராகும் கவார் குரேஷி கூறுகையில், காஷ்மீரில், படுகொலை நடப்பதாக பாகிஸ்தான் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. ஆதாரம் இல்லாத போது, சர்வதேச நீதிமன்றத்தில், இந்தியாவை சமாளிப்பது கடினம் எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
04-செப்-201910:43:07 IST Report Abuse
M.COM.N.K.K. திரு கவார் குரேஷி அவர்களுக்கு நன்றி இந்தியாவில் எந்த ஒரு தனி மனிதனும் பாதிக்கப்படமாட்டான் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.உண்மையை பாகிஸ்தான் அரசுக்கு எடுத்துச்சொன்னதற்கு கோடான கோடி நன்றியை இந்திய மக்கள் சார்பாக இதயம் கனிந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.இங்குள்ள எதிர் கட்சியினருக்கு இது புரியவில்லையே என்று வருத்தப்படுகிறோம்.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
03-செப்-201921:47:41 IST Report Abuse
elakkumanan இந்தியாவிற்கு எதிரான ஆதாரம் வேணும்னா, நீங்க சென்னைக்குள்ள வந்திருக்கணும். தெருவுக்கு, நாலு திரியுதுக. பால்கோட் ஆதாரத்துலயே ஓட்டை கண்டுபிடிச்சு, நாட்டை காட்டிக்கொடுக்கும், வீரர்கள் நெறய இருக்கானுக. தலைமை இருக்காப்ல. நீங்க எங்கயோ ஒக்காந்துக்கிட்டு, ஆதாரம் தேடுனா, எப்புடி சார் கிடைக்கும்? காமராஜருக்கு ஆந்திரா பாங்குல கணக்கு இருந்ததை கூட துல்லியமாக கண்டுபிடிக்கும் வல்லமை எங்க டுமீலன்ஸ்க்கு உண்டு . நம்புங்க சார். குவாட்டர் சரக்கு, பிரியாணி பொட்டலம் , கருப்பு பலூன் போதும், நீங்க கேக்குறதுக்கு மேல ஆதாரம் கிடைக்கும். ப்ளீஸ் , இப்பிடி, உலக அறிவே இல்லாம, பொறுப்பில்லாம இருக்கலாமா சார். நீங்க ரொம்ப அப்புராணி சார்.
Rate this:
Cancel
HSR - MUMBAI,இந்தியா
03-செப்-201921:40:57 IST Report Abuse
HSR Paavam soosai..hahaha mandaiya pichchukittu ularuvaa
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X