பொது செய்தி

தமிழ்நாடு

மோடியின் 100 நாள் சாதனை: மக்களிடம் கொண்டு செல்ல முடிவு

Updated : செப் 03, 2019 | Added : செப் 03, 2019 | கருத்துகள் (61)
Share
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்று 100 நாட்களில் செய்த சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. மோடி, இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்று கொண்டார். 7 ம் தேதி 100 வது நாளை மோடி அரசு நிறைவு செய்கிறது.அப்போது, 100 நாளில் செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல
Article 370, Talaq Bill, 100-day achievement, Modi, NDA 2.0,
பிரதமர் மோடி, சாதனை,மத்திய அரசு, காஷ்மீர், முத்தலாக், மத்திய அரசு

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்று 100 நாட்களில் செய்த சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. மோடி, இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்று கொண்டார். 7 ம் தேதி 100 வது நாளை மோடி அரசு நிறைவு செய்கிறது.

அப்போது, 100 நாளில் செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, அனைத்து மத்திய அமைச்சகங்களும் அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், பார்லிமென்டில், முத்தலாக் தடுப்பு சட்டம் நிறைவேற்றம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை அடங்கிய, அறிக்கை தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும். அன்றைய நாளில், சந்திராயன் 2 நிலவில் தரையிறங்குவதை, இஸ்ரோ மையத்தில், விஞ்ஞானிகளுடன் இணைந்து பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.


latest tamil news



இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறுகையில், கடந்த ஆட்சியின் போது, ஒவ்வொரு ஆண்டு முடிவிலும், மத்திய அரசின் பணிகள் குறித்த அறிக்கை வெளியாகும். ஆனால், இந்த முறை, மத்திய அரசின் பணிகள் குறித்த அறிக்கை, 100 நாட்களுக்கு ஒரு முறை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக சிறந்த நிர்வாக குழுவை அமைக்க அனைத்து அமைச்சகங்களுக்கும் உத்தரவிடப்பட்டது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், முத்தலாக் மசோதா ஆகியவை விரைவில் நடைபெற உள்ள ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு கை கொடுக்கும் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
04-செப்-201919:14:49 IST Report Abuse
oce எவனாவது தில்லு முல்லு செய்பவன் ஆட்சியாக இருந்தால் பாராட்டு வீர்களா.
Rate this:
Cancel
Halfmoon - Karaikudi,இந்தியா
04-செப்-201911:27:57 IST Report Abuse
Halfmoon உங்கள் ஆட்சியின் வண்டவாளம்தான் தண்டவாளம் ஏறிக்கொண்டே இருக்கிறதே? இப்போதை ஒன்றைமட்டும் செய்யுங்கள்.. எங்களுக்கு திறமையாக ஆட்சி நடத்த துப்பில்லை.. என்று ஒத்துக்கொண்டு கூண்டோடு ராஜினாமா செய்யுங்கள்.. அதுதான் நீங்கள் மக்களுக்கு செய்யும் சிறந்த நன்மையாக இருக்கமுடியும்..உங்கள் ஆட்சியின் சாதனைகள்தான் தினம் தினம் ஒவ்வொரு துறைகளிலும் பிரதிபலிக்கிறதே.. சாதனைகளை விளக்கப்போறோம்னு சொல்லி அதற்க்காக பலநூறு கோடி மக்கள் வரிப்பணத்தை வீணாக்க வேண்டாம்..
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
04-செப்-201911:26:31 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை பொருளாதார விழிச்சியையும் சேர்த்துக்கொள்ளுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X