ஹிந்து கடவுள் சிலையை கள்ளத்தனமாக வைத்தனர்':உச்சநீதிமன்றத்தில் வாதம்

Updated : செப் 04, 2019 | Added : செப் 04, 2019 | கருத்துகள் (83)
Share
Advertisement
புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதிக்குள், ஹிந்துக் கடவுள் சிலையை, திட்டமிட்டு, கள்ளத்தனமாக வைத்தனர். அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருந்தனர்' என, முஸ்லிம் அமைப்புகள் சார்பில் வாதிடப்பட்டது.அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு
சிலையை  கள்ளத்தனமாக வைத்தனர்'

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதிக்குள், ஹிந்துக் கடவுள் சிலையை, திட்டமிட்டு, கள்ளத்தனமாக வைத்தனர். அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருந்தனர்' என, முஸ்லிம் அமைப்புகள் சார்பில் வாதிடப்பட்டது.அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு தினமும் விசாரித்து வருகிறது.விசாரணையின், 18வது நாளான, நேற்று, சன்னி வக்ப் வாரியம் மற்றும் முதலில் வழக்கைத் தொடர்ந்த, சித்திகி சார்பில், மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான் வாதிட்டதாவது:


latest tamil newsகடந்த, 1949, டிசம்பர் 22 இரவில், பாபர் மசூதிக்குள், ஹிந்துக் கடவுளின் சிலை வைக்கப்பட்டது.
அதிசயம் நிகழ்ந்து, அந்த சிலை அங்கு வரவில்லை; சிலையை, திட்டமிட்டு, கள்ளத்தனமாக வைத்தனர். அதைத் தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டு, அந்த நிலம் முடக்கப்பட்டது. அங்கு எந்த மாற்றமும் செய்யக் கூடாது என, 1950ல் உத்தரவிடப்பட்டது.ஆனால், சில அரசு அதிகாரிகள், ஹிந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். குறிப்பாக, பைசாபாத் துணை கமிஷனராக இருந்த, கே.கே. நாயர், ஹிந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்.

நீதிமன்றம் உத்தரவிட்டும், சிலையை அகற்ற அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.அதற்கு முன்னதாக, தலைமைச் செயலருக்கு அவர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 'அயோத்தியில் குறிப்பிட்ட நிலத்தில், மிகப் பெரிய ஹிந்துக் கோவில் இருந்தது. அதை, 1528ல் பாபர் இடித்து மசூதி கட்டினார்' என, கூறியுள்ளார்.இவ்வாறு அதிகாரிகள் ஹிந்துக்களுக்கு ஆதரவாக திட்டமிட்டு செயல்பட்டனர். அதிகாரி நாயர், பின்னர் பாரதிய ஜன சங்கத்தின் சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார்.
அதுபோலவே, இடிக்கப்பட்ட கட்டடத்தில், ஹிந்துக்கள் வழிபடும் கடவுள், மயில், தாமரை போன்றவற்றின் உருவங்கள் இருந்ததாகக் கூறியுள்ளனர். எந்த மாற்றமும் செய்யக் கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், திட்டமிட்டு, இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.கடந்த, 1934ல் இருந்து, இந்த நிலத்தில் தொழுகை செய்வதற்கு, முஸ்லிம்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஹிந்துக்களும், அதிகாரிகளும், முஸ்லிம்களை மிரட்டினர்.இவ்வாறு, அவர் கூறினார்.இன்றும் விசாரணை தொடர்கிறது.


Advertisement
வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yuva Rajan - chennai,இந்தியா
09-செப்-201911:19:47 IST Report Abuse
Yuva Rajan 1964 க்கு மேல் முஸ்லீம் தான் ஆண்டாங்க
Rate this:
Cancel
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
07-செப்-201914:16:47 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் 1. பாபர் இந்தியாவிற்கு அழைக்கப்பட்டார், மாறாக படையெடுத்து வரவில்லை, 2 . பாபர் வாழ்ந்தது உண்மையே , ஆதாரம் பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு எழுதிய கடிதம் இன்று டெல்லி அருங்காட்சியகத்தில் உள்ளது 3 . ராமர் கற்பனையே, ஆதாரம் பல கற்பனை ராமாயணங்கள் உள்ளன, சிலவற்றில் சீதை ராமனின் தங்கை என்றும் வருவதாக சொல்லப்படுகிறது 4 . ஜிஹாத் என்றால் மனிதன் ஆசைகளை எதிர்த்து போரிடுவதே 5 . காபாவில் உள்ளே ஒன்றும் இல்லை சில தூண்களே உள்ளது அதில் உள்ள ஒரு சந்தன மரத்தூண் கேரளாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டது - youtube ல் காணொளி உண்டு பார்க்கலாம் 6 . கடவுள் தானாக வராது என்பதால்தான் சிலையை இரவோடு இரவாக கள்ளத்தனமாக வைத்துள்ளனர்.
Rate this:
Cancel
COW URINE SANGI - tamilnadu,இந்தியா
04-செப்-201914:54:21 IST Report Abuse
COW  URINE  SANGI 1948 இல் திருட்டுத்தனமாக சிலையை இரவோடு இரவாக வைத்துவிட்டு ராமர் அவதரித்து விட்டார் என்று கதை கட்டியது பரம ஹன்ட்ஸ் என்ற ஒரு விஷ்வா ஹிந்து பரிஷத் சாது ,இது அனைவருக்கும் தெரியும், இதைத்தான் வாதாடியுள்ளார் ,இன்னும் முகலாயர்கள் கோவிலை இடித்தார்கள் ஹிந்துக்களை கொன்றார்கள் என்று எத்தனை காலம் தான் ஓட்டுவது , முகலாயர் நினைத்திருந்தால் எல்லா மக்களையையும் மதம் மாற்றி இருக்கமுடியும் ,அந்த அளவிற்கு பலம்பொருந்திய அரசு, அனால் அப்படி செய்யவில்லை , முஸ்லீம் பள்ளிகளை விட ஹிந்துக்கள் கோவிலுக்கு தான் அதிகம் செய்துள்ளனர் வரலாற்றை முடிவுசெய்து கொண்டு படிக்கக்கூடாது ,உண்மையானதை படிக்க வேண்டும் , பாபர்மசூதி, பசுமாடு , பாகிஸ்தான் , இது இல்லாவிட்டால் பாரதீய ஜனதாவுக்கு அரசியல் இல்லை ,ஆகவே இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் இவர்கள் இந்தப்பிரச்சினையை விடமாட்டார்கள் அப்போதுதான் அரசியல் செய்யமுடியும் ,குரங்கு கையில் பூமாலை போல பாரதியஜனதா கையில் பாரதம் ,
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
07-செப்-201920:07:28 IST Report Abuse
தமிழ்வேள்இஸ்லாமிய குரங்குகள் பூமாலையாகிய பாரத வர்ஷத்தை சீரழித்ததை மோடி சரி செய்கிறார் . தூதரும் அடிப்பொடிகளும் ஒட்டுமொத்தமாக மறக்கப்படும் நாளே உலகம் உருப்படும் நாள் கொஞ்சமாவது திருந்துங்க பாய் எப்போ பார்த்தாலும் கறி சோறு ஜிஹாத் எழுபத்திரண்டு இதுதானா? இவற்றை தவிர வேறு நல்ல விஷயம் உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காதா ? உங்கள் மார்க்கம் உங்களை மனநோயாளிகளாக மாற்றிவைத்திருக்கிறது...
Rate this:
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
08-செப்-201901:03:16 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் அடேய் 1947 முதல் இன்றுவரை முஸ்லிமா நாட்டை ஆண்டது ?...
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
08-செப்-201912:11:59 IST Report Abuse
தமிழ்வேள்1300 இல் உள்ளே வந்த நீங்கள் இன்று வரை இந்த நாட்டை சீரழித்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள்? நியாயத்தை நினைத்துப்பாருங்கள் [நியாயம் என்பதுதான் உங்கள் கூட்டத்துக்கே கிடையாதே ?]...
Rate this:
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
09-செப்-201910:07:35 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் எப்படி என்று விளக்க முடியுமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X