இந்திய தூதரகம் மீது தாக்குதல்: பிரிட்டன் கண்டனம்

Updated : செப் 04, 2019 | Added : செப் 04, 2019 | கருத்துகள் (32)
Advertisement
Britain,Indian Embassy, இந்திய தூதரகம், பிரிட்டன், கண்டனம்

லண்டன்: லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் பாக்., ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டாமினிக் ராப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து, லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன், பிரிட்டன் வாழ் பாகிஸ்தானியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, தூதரகம் மீது கற்களை வீசினர். இதில் கண்ணாடிகள் சேதமடைந்தன. கடந்த ஆக.,15ம் தேதி போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது. இதற்கு இந்தியா கவலை தெரிவித்த நிலையில் மீண்டும் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக, வடமேற்கு கேம்பிரிட்ஜ்சயர் எம்.பி., சைலேஷ் வாரா கேள்வி எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது: பிரிட்டன் வாழ் இந்திய சமூகத்தினர் மீது தாக்குதல் மற்றும் வன்முறை நடப்பது கண்டனத்திற்குரியது. இது பிரிட்டனில், எந்த சமூகத்தினருக்கு எதிராகவும் நடக்கக்கூடும் என்றார்.

இதற்கு பதிலளித்த பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டாமினிக் ராப் அளித்த பதில்: இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் வேறு எங்கும் நடைபெறக்கூடாது. நம்பிக்கை வளர்க்கும் நடவடிக்கைகளை எடுத்து, இதுபோன்ற பதற்றத்தை குறைக்க வேண்டும். இது, காஷ்மீரில், இரு தரப்பு மக்கள் இடையிலான பதற்றத்தை குறைப்பது மட்டும் அல்லாமல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை குறைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து லண்டன் மேயர் வெளியிட்ட டுவிட்டர் அறிக்கை: தாக்குதல் சம்பவம் ஏற்று கொள்ள முடியாதது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். இது குறித்து லண்டன் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


2 பேர் கைது :


இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - costanoa,யூ.எஸ்.ஏ
05-செப்-201901:03:14 IST Report Abuse
Raj ஏன் நைனா, லண்டன் தூதரகம் முன்னால கேமரா இல்லேயா ? இல்லே கண்டு புடுச்சு தண்டனை குடுக்க மனம் இல்லையா ?
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
04-செப்-201919:58:20 IST Report Abuse
Sampath Kumar தைரியம் இருந்த வாங்க தாக்குதல் என்ற பேரில் சும்மா காமடி பண்ணாதீங்க
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
04-செப்-201917:43:11 IST Report Abuse
RM Permission given by authorities for protest. without permission they cannot do the procession. Why did the permission granted first to do before Indian high commission?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X