ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி: சிதம்பரம் முன்ஜாமின் மனு தள்ளுபடி

Updated : செப் 05, 2019 | Added : செப் 05, 2019 | கருத்துகள் (68)
Share
Advertisement
p.chidambaram, chidambaram,INX Media, supreme court, delhi high court, bail, ப.சிதம்பரம், சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மோசடி, சுப்ரீம் கோர்ட், டில்லி ஐகோர்ட்,

புதுடில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில், அமலாக்கத்துறை வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. தற்போது, அவர், சிபிஐ கஸ்டடியில் உள்ளார். சிபிஐ தொடர்ந்து, இந்த மோசடி வழக்கில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது.
அமலாக்கத்துறை கைதை தவிர்க்க சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து, சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.


latest tamil news




நீதிபதிகள், இந்த வழக்கு சரியான பாதையில் செல்கிறது. முன்ஜாமின் என்பது அடிப்படை உரிமை இல்லை. வழக்கு ஆரம்ப கட்ட நிலையில் முன்ஜாமின் வழங்கினால், விசாரணையை பாதிக்கும். இதனால், இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்குவது சரியாக இருக்காது. பொருளாதார குற்றங்களை வேறு வழியில் தான் கையாள வேண்டும். விசாரணை அமைப்புகளுக்கு சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக்கூறி முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், ஜாமின் கேட்டு, விசாரணை நீதிமன்றத்தில், சிதம்பரம் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யும்படி கூறினர்.

இதனையடுத்து சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்வதற்கான தடை நீங்கியது. அவரை, விரைவில் அமலாக்கத்துறை கைது செய்யும் எனவும், தொடர்ந்து சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்த டில்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாம் என தெரிகிறது.


மனு வாபஸ்

இதன் இடையே, சி.பி.ஐ., காவல் மற்றும் கைதுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை சிதம்பரம் திரும்ப பெற்று கொண்டார். ஜாமின் பெற அவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. வழக்கை திரும்ப பெற்று கொள்ள சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது.

Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
05-செப்-201917:56:52 IST Report Abuse
J.V. Iyer இரண்டு வருடங்களாக தப்பித்து வருகிறார் இந்த பிராடு. ஒருநாள் அகப்பட்டுத்தான் ஆகவேண்டும். இவர் பிராடு செய்த பணத்தை வட்டியுடன் திரும்ப பெரும்வரையில் இவரை விடக்கூடாது. செய்வீர்களா?
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-செப்-201916:40:32 IST Report Abuse
Janarthanan பொருளாதர குற்றங்களை வேறு வழியில் தான் கையாள வேண்டும், அபீஸ்ர்ஸ் அதான் உச்ச நீதி மன்றம் சொல்லி விட்டது அல்லவா கிங் பின் நல்லா கும்மாங் குத்து குத்தி உண்மையை வர வைங்க
Rate this:
Cancel
Rajan - Coimbatore,இந்தியா
05-செப்-201914:36:10 IST Report Abuse
Rajan Next target பப்பு ???? இப்பவே பாஸ்ப்போர்ட்டை புடுங்கிவையுங்கோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X