மெகபூபாவுடன் சந்திப்பு: மகளுக்கு அனுமதி

Added : செப் 05, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
முப்தி, சுப்ரீம் கோர்ட், காஷ்மீர்,

புதுடில்லி: காஷ்மீரில் விருந்தினர் மாளிகையில் சிறை வைக்கப்பட்டுள்ள பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முப்தியை, அவரது மகள் சனா இதிஜா ஜாவேத் சந்திக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

தாயாரை சந்திக்க அனுமதி கேட்டு இதிஜா ஜாவேத் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மனுதாரர், தனது தாயாரை சந்திப்பதில் என்ன தடை உள்ளது என கேள்வி எழுப்பியது.

அப்போது, தனது தாயாரை சந்திக்க தனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என ஜாவேத் கூறினார்.
தற்போது சென்னையில் இருக்கும் உங்களால், ஸ்ரீநகர் செல்வதை தடுப்பது எது என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ஜாவேத், சென்னை செல்ல எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஸ்ரீநகரில் நடமாட அனுமதி கிடைக்கவில்லை. எனது தாயாரை தனியாக சந்திக்கவும், ஸ்ரீநகரில் சுதந்திரமாக நடமாடவும் அனுமதி வேண்டும் என்றார்.

இதற்கு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, இது ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட உரிமை எனக்கூறி, ஜாவேத், அவரது தாயார் முப்தியை தனியாக சந்திக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.


எய்ம்சில் சிகிச்சை


இதன் இடையே, ஸ்ரீநகரில் உடல்நலக்குறைவால் , வீட்டு காவலில் வைத்து, சிகிச்சை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முகமது தரிகாமியை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கவும் கோர்ட் உத்தரவிட்டது

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-செப்-201918:26:25 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா இந்த பொண்ணு சென்னைக்கு யார் வீட்டுக்கு வந்திருந்தது? பாக்கிஸ்தான் ஆதரவு மிஸ்டர் சுடலை வீட்டுக்கு தானே?
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
06-செப்-201908:05:03 IST Report Abuse
Nallavan Nallavanவேற ?? பாக். பயங்கரவாதி, புக் பண்ணி வெச்ச மாதிரி நேரா கோவைதான் வர்றான் ...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X