சிறை 7ல் சிதம்பரம்

Updated : செப் 05, 2019 | Added : செப் 05, 2019 | கருத்துகள் (152)
Share
Advertisement
chidambaram, Tihar, prison, court, சிதம்பரம், திஹார் சிறை, ஐஎன்எக்ஸ், கோர்ட்,

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், சிபிஐ காவல் முடிந்ததை தொடர்ந்து, வரும் 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில், திஹார் சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து திஹார் சிறை எண் 7 ல் சிதம்பரம் அடைக்கப்பட்டார். இந்த அறை, பொருளாதார குற்றவாளிகள் அடைக்கப்படும் பகுதியில் உள்ளது.

ஐஎன்எக்ஸ் மோசடி வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்று (செப்.,5) முடிவடைந்தது. இதனையடுத்து அவர் சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, சிதம்பரம் சாட்சிகளை கலைக்கவும் , ஆதாரங்களை அழிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், தொடர்புடைய ஆவணங்கள், ஆதாரங்களை திரட்ட சிபிஐ அதிகாரிகள் இங்கிலாந்து, பெர்முடா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்த வழக்கில், பொருளாதார குற்றங்கள் நடந்துள்ளன. சிதம்பரத்தின் ஜாமின் மனுவை விசாரிக்காத வரை, போலீஸ் காவல் அல்லது நீதிமன்ற காவல் மட்டுமே ஒரே வழி என்றார்.


latest tamil news


இதன்பின்னர், சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடுகையில், சிதம்பரத்திடம் விசாரணை தொடர்கிறது. சாட்சிகளை கலைக்கவில்லை. எனவே, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப கூடாது. ஆதாரத்தை கலைத்துவிடுவார் என்ற குற்றச்சாட்டிற்கு சிபிஐ ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை. சிதம்பரத்தை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. நீதிமன்ற காவலுக்கு அனுப்பினால், அது அவரை தொல்லைக்கு உட்படுத்துவதாகும். அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிதம்பரம் சரண் அடைய தயாராக உள்ளார். வேண்டும் என்றால், சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்யட்டும். நீதிமன்ற காவலுக்கான காரணத்தை சிபிஐ முன் வைக்க வேண்டும். சிபிஐ அதிகாரிகள் 15 நாள் விசாரணை நடத்தினர். என வாதிட்டார்.


latest tamil newsஇதனை விசாரித்த பின்னர் நீதிபதி, வரும் 19ம் தேதி வரை சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதுடன், திஹார் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.


சிறையில் தனி அறை


இதனை தொடர்ந்து, திஹார் சிறையில் படுக்கை, மேற்கத்திய கழிப்பறை வசதியுடன் கூடிய தனி அறை, இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கூறி சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்று கொண்ட கோர்ட், சிதம்பரத்திற்கு திஹார் சிறையில் தனி அறை வழங்கவும், பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது.


அமலாக்கத்துறைக்கு உத்தரவு

இதன் பின்னர், அமலாக்கத்துறையிடம் சரண் அடைய தயாராக உள்ளதாக , சிதம்பரம் தரப்பில், மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மனு குறித்து செப்., 12க்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


சிறை எண் 7:


இந்நிலையில் திஹார் சிறைக்கு அழைத்து வரப்பட்ட சிதம்பரம், பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறை 7ல் அடைக்கப்பட்டார். அவருக்கு உணவாக சப்பாத்தி, பருப்பு, கூட்டு வழங்கப்படும் என திஹார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கோர்ட் உத்தரவுப்படி, மேற்கத்திய கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (152)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaswami Sampath - mumbai,இந்தியா
06-செப்-201918:09:53 IST Report Abuse
Ramaswami Sampath சி பி ஐ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுக்கு போய் ஊர் சுற்றிவர ஒரு வாய்ப்பு.
Rate this:
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
06-செப்-201911:50:16 IST Report Abuse
Krish Sami சிதம்பரம் மற்றும் அவர் மகன் கார்த்திக் சிதம்பரம் இருவரும் உலகமகா திருடர்கள் என்பதை நாடறியும். இவர்கள் உள்ளே போவது மிகவும் மகிழ்ச்சி. இறுதி வரை சிறை புகாமல் தப்பிய திருவாரூர் தீயசக்தி கருணாநிதி போல எல்லோரும் தப்பிவிட முடியாது. ஏனென்றால் நடப்பது கயவர் கூட்ட காங்கிரஸ் ஆட்சி அல்லவே.
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
06-செப்-201908:47:54 IST Report Abuse
Pannadai Pandian கட்டுமரத்துக்கு அப்புறம் அதிக வசவு வாங்குறவன் இவனாத்தான் இருக்கும். மக்களிடம் அவ்வளவு நல்ல பேரு சம்பாதிச்சிருக்கான்…..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X