திஹாரில் சிதம்பரத்திற்கு தனி அறை

Updated : செப் 06, 2019 | Added : செப் 05, 2019 | கருத்துகள் (21)
Share
Advertisement
Tihar, ChidambaramFacesJail, INX Media case,  Chidambaram, Tihar jail, separate cell, சிதம்பரம்,  ஐ.என்.எக்ஸ்.,  மோசடி, திஹார் சிறை,

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், 14 நாள் நீதிமன்ற காவலில், திஹார் சிறை எண் 7 ல் தனி அறையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அடைக்கப்பட்டார்.

ஐ.என்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில், சிதம்பரம், திஹார் சிறை செல்வதை தடுக்கும் பொருட்டு, அவரது வழக்கறிஞர் குழுவினர் தீவிர முயற்சி செய்தனர். இதற்காக, சிதம்பரம் அமலாக்கத்துறை கஸ்டடிக்கு செல்ல தயாராக உள்ளதாகவும் நீதிபதி முறையிட்டனர்.


latest tamil newsஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், அமலாக்கத்துறை கைது செய்வதை தடுக்கும் பொருட்டு சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, எந்த நேரத்திலும், அவரை அமலாக்கத்துறை கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமலாக்கத்துறை, கைது செய்வதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால், சிறப்பு கோர்ட் நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னால், இரண்டு வாய்ப்புகள் தான் இருந்தன. ஒன்று, சிதம்பரத்தை ஜாமினில் விடுவது அல்லது நீதிமன்ற காவலில் வைப்பது .


latest tamil news
ஆனால், சிதம்பரத்தை திஹார் சிறைக்கு அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி தனது உத்தரவில், '' வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டும், குற்றத்தின் வகையை ஆராய்ந்தும், ஆரம்ப கட்ட நிலையில் விசாரணை உள்ளதால், குற்றவாளியை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும்'' என உத்தரவிட்டார்.

சிபிஐ காவல் முடிந்ததை தொடர்ந்து, சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி தீர்ப்பை 30 நிமிடம் ஒத்திவைத்தார். தீர்ப்பிற்காக இரு தரப்பினரும் காத்திருந்தனர். அப்போது 15 நாள் சிபிஐ கஸ்டடியில் இருந்ததால், சிதம்பரம், சற்று தளர்ந்து காணப்பட்டார். அவர், கோர்ட் அறையில், குற்றவாளி கூண்டில் நிற்பார். வழக்கம் போல், சிதம்பரம் அமர்வதற்காக, கோர்ட் ஊழியர் நாற்காலி கொண்டு வருவார். ஆனால், அந்த நாற்காலியில் அமர மறுத்து வந்த சிதம்பரம், இந்த முறை அமர்ந்தார். நீதிபதி,தீர்ப்பு வழங்கியதும், உடனடியாக, சிதம்பரம் தரப்பினர், பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், சிதம்பரம்,திஹார் சிறைக்கு கண்ணாடியை கொண்டு செல்லவும், குறிப்பிட்ட மருத்துவ வசதிகள் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். முன்னாள் உள்துறை அமைச்சரான சிதம்பரத்திற்கு, பாதுகாப்பை கருத்தில் கொண்டு கழிப்பறையுடன் கூடிய தனி அறையை ஒதுகக வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த இரண்டு கோரிக்கைகளை நீதிபதி ஏற்று கொண்டார். மூன்றாவதாக, அமலாக்கத்துறை முன்பு சரண் அடைவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை குறித்து பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaswami Sampath - mumbai,இந்தியா
06-செப்-201918:15:46 IST Report Abuse
Ramaswami Sampath அமீத்து பழி வாங்குகிறான்
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
06-செப்-201909:24:20 IST Report Abuse
narayanan iyer அரசும் நீதித்துறையும் ஒன்றிணைந்து செயல்படுகிறது . காங்கிரஸ் கட்சியை எந்த அளவிற்கு அசிங்கப்படுத்தி அழிக்கமுடியுமோ அதை செய்கிறார்கள் . நடக்கட்டும் காங்கிரஸ்காரனை கெடுத்ததே திமுக தான் . அந்த கூட்டணி அமைந்தபின்தான் இறை பயம் போய் தவறுசெய்ய தொடங்கினார்கள் .
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
06-செப்-201909:21:01 IST Report Abuse
narayanan iyer அரசும் நீதித்துறையும் ஒன்றிணைந்து செயல்படுகிறது . காங்கிரஸ் கட்சியை எந்த அளவிற்கு அசிங்கப்படுத்தி அழிக்கமுடியுமோ அதை செய்கிறார்கள் . நடக்கட்டும்
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
06-செப்-201911:15:53 IST Report Abuse
uthappaஎவ்வளவு காசை தொலைத்தீர். இத்தனை கோபம். திருடனுக்கு வக்காலத்து வேறு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X