வெற்றி! நாடு கடத்தப்படுகிறார் மதபோதகர் ஜாகிர் நாயக்; மலேஷிய பிரதமருடன் மோடி பேச்சில் உடன்பாடு

Updated : செப் 07, 2019 | Added : செப் 05, 2019 | கருத்துகள் (32)
Advertisement
வெற்றி! நாடு கடத்தப்படுகிறார் மதபோதகர் ஜாகிர் நாயக்; மலேஷிய பிரதமருடன் மோடி பேச்சில் உடன்பாடு

விளாதிவோஸ்டோக் : பயங்கரவாதத்தை துாண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்படும், மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும், இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரான, ஜாகிர் நாயக்கை, மலேஷியாவில் இருந்து நாடு கடத்தி அழைத்து வரும் முயற்சிக்கு, வெற்றி கிடைத்துள்ளது. ரஷ்யாவில், மலேஷிய பிரதமர், மகாதிர் முகமதுவுடன், பிரதமர் நரேந்திர மோடி நடத்திய பேச்சில், இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக, ரஷ்யா சென்றுள்ளார். இந்தியா - ரஷ்யா இடையேயான, 20வது ஆண்டு மாநாட்டில், பங்கேற்ற அவர், நேற்று நடந்த, கிழக்கு பொருளாதார அமைப்பு மாநாட்டில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இந்த மாநாட்டுக்கு இடையே, பல்வேறு நாட்டுத் தலைவர்களை, அவர் சந்தித்து பேசினார்.


விளக்கம்:

இது குறித்து, நம் வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆசிய நாடான, மலேஷியாவின் பிரதமர், மகாதிர் முகமதுவை, மோடி சந்தித்து பேசினார். அப்போது, ஜம்மு - காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அவரிடம் விளக்கினார். பயங்கரவாத பிரச்னை உட்பட, பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் பேசினர். சமீபத்தில், பாக்., பிரதமர் இம்ரான் கான், மகாதிரிடம் தொலைபேசியில் பேசினார். இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் குறித்து, மோடி விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத்தை துாண்டும் வகையில் செயல்பட்ட, இஸ்லாமிய மதபோதகர், ஜாகிர் நாயக் மீது, பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால், 2016ல், மலேஷியாவுக்கு தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி, மோடி கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக, அதிகாரிகள் நிலையில் பேசுவதற்கு, இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இரு தரப்பு பிரச்னைகள், வர்த்தகம் உட்பட, பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர்.


ஜப்பான் பிரதமர்:

ஜப்பான் பிரதமர், ஷின்சோ அபேயையும், மோடி சந்தித்து பேசினார். அப்போது, வர்த்தகம், ராணுவம் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து இணைந்து செயல்படுவது குறித்து, இருவரும் பேசினர். மேலும், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இணைந்து செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு டிசம்பரில் நடக்க உள்ள இரு நாடுகளுக்கு இடையேயான மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஷின்சோ அபே, இந்தியா வர உள்ளார். அதனால், இரு தரப்பு உறவுகள் குறித்து, இரு தலைவர்களும் அதிகம் விவாதித்தனர்.


மங்கோலிய அதிபர்:

கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவின் அதிபர் கால்த்மாகின் பட்டுல்காவையும், பிரதமர் மோடி சந்தித்து பேசினார். கலாசாரம், ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளில், இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து, இரு தலைவர்களும் பேசினர். இம்மாத இறுதியில், மங்கோலிய அதிபர், இந்தியா வர உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


ரூ.7,200 கோடி முதலீடு:

ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளில் தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஈர்ப்பதற்காக, கிழக்கு பொருளாதார அமைப்பு மாநாடு நடத்தப்படுகிறது. அதன், ஐந்தாவது மாநாட்டில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான உறவு என்பது, இரு நாட்டின் தலைநகர்களுக்கு இடையே மற்றும் தலைவர்களுக்கு இடையேயானது மட்டுமல்ல. மக்களுக்கு இடையேயானது, வர்த்தக நிறுவனங்களுக்கு இடையேயானது.

கிழக்கு பகுதி நாடுகளுடனான உறவுக்கென, இந்தியாவுக்கு தனிக் கொள்கை உள்ளது. தற்போது, ரஷ்யாவின் கிழக்கு பகுதியின் வளர்ச்சியிலும் பங்கேற்க விரும்புகிறோம். இதற்காக, 7,200 கோடி ரூபாய் முதலீட்டு திட்டங்களுக்கான கடனுதவி வழங்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார். இந்த மாநாட்டையொட்டி, அங்கு கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள, இந்திய அரங்கையும் மோடி பார்வையிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
I love Bharatham - chennai,இந்தியா
08-செப்-201921:38:42 IST Report Abuse
I love Bharatham உள்ள போட்டு நொங்கு எடுங்க
Rate this:
Share this comment
Cancel
Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
07-செப்-201912:54:52 IST Report Abuse
Watcha Mohideen தலை அறுப்பு ,ஒரு என்கவுண்டர் பண்ணா நல்லா இருக்கும்,வச்சி செய்யவேண்டியது தான்,வழியிலேயே கடல்ல தள்ளிடணும் இதற்கு தான் நான் இந்தியா வரமாட்டேன் என்று ஜாகிர் நாயக் சொல்கிறார்,யாரவது இந்திய சட்டம் அதன் கடமையை செய்யும் என்று சொல்கிறீர்களா ? அவரை கொள்வது தான் நோக்கம்.
Rate this:
Share this comment
Cancel
Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
07-செப்-201912:47:52 IST Report Abuse
Watcha Mohideen மலேஷியா பிரதமர் இதற்கு OK சொல்லவில்லை
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
09-செப்-201917:24:09 IST Report Abuse
s.rajagopalanஉனக்கு சந்தோசமா இருக்கு இல்லே ? இதுதான்யா பிரச்னை. மனிதனுக்காகத் தான் மதம். ஆனால் நாயக் போன்றவங்க நினைப்பது... மதத்திற்காகத்தான் மனுஷன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X